Home
News

வாகன சோதனை-மிரட்டி பணம் வசூல் செய்த போலி போலீஸ் கைது.!

அதன்பின்பு இதை கேட்ட அந்த நபர் சாமு வைத்திருந்த செல்போனை பறித்துள்ளார், இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

By Prakash S

போக்குவரத்து காவலர்கள், மோட்டார் வாகன துறையினர் வாகன சோதனை நடத்தும்போது, வாக ஓட்டுனர்களிடம் அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், வாகனங்களின் காப்பீடு போன்ற சில சான்றிதழ்கள் கேட்டபது வழக்கமாக தான் உள்ளது.

வாகன சோதனை-மிரட்டி பணம் வசூல் செய்த போலி போலீஸ் கைது.!

மேலும் இதுபோன்ற ஆவணங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் எண்ம பெட்டக முறையிலோ( டிஜி லாக்கர் முறை) அல்லது மத்திய சாலை போக்குவரத்து,நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் முறையிலோ செல்போனில் பதிவு செய்யப்படும் நடைமுறை தற்சமயம் அமலில் உள்ளது.

வி.சாமு

வி.சாமு

இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் வசூலித்ததாக போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி அரும்பாக்கம் என்.எஸ்.கே நகரை சேர்ந்தவர் வி.சாமு(22), இவர் சுமை ஆட்டோ ஓட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூந்தமல்லி

பூந்தமல்லி

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் அருகே
ஆட்டோவில் வந்துகொண்டிருந்தார், அந்த சமயம் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் நின்றுக்
கொண்டிருந்த இளைஞர் சாமுவின் ஆட்டோவை மறித்து நிறுத்தினார்

பணம் இல்லை

பணம் இல்லை

பின்பு ஆட்டோவுக்கான ஆவணங்களையும், சாமுவின் ஓட்டுநர் உரிமத்தையும் காட்டும்படி அவர் கூறினாராம், அப்போது சாமு அனைத்து ஆவணங்களையும் காட்டியுள்ளார், இருந்தபோதிலும் அந்த நபல் சாமுவை மிரட்டி பணம் கேட்டாராம் அப்போது சாமு தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

விசாரணை

விசாரணை

அதன்பின்பு இதை கேட்ட அந்த நபர் சாமு வைத்திருந்த செல்போனை பறித்துள்ளார், இதனால் அவர்கள் இருவருக்கும்
தகராறு ஏற்பட்டது. அந்த சமயம் ஜீப்பில் ரோந்து வந்த அரும்பாக்கம் போலீஸார் தகராறில் ஈடுபட்ட இருவரையும் விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் போலீஸ் இல்லை என்பதும், அவர் அந்தப்பகுதியில் வாகன ஓட்டிகளை மிரட்டி தொடர்ந்து பணம் வசூலித்து வருவதும் தெரியவந்தது.

ரா.சதீஷ்

ரா.சதீஷ்

அதற்கு பிறகு அவர் வைத்திருந்த காவலர் போலி அடையாள அட்டை, போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருந்த மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு விசாரணையில் அவர் அரும்பாக்கம் பெருமாள் கோயில் கார்டன் தெருவை சேர்ந்த ரா.சதீஷ் (29) என்பது தெரியவந்தது. மேலும் சதீஷை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Best Mobiles in India

English summary
Fake cop robs man of mobile phone arrested : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X