Home
News

திரைப்படத்தை மிஞ்சும் சம்பவம்- டெல்லியில் போலி கால்சென்டர் நடத்தி இங்கிலாந்தில் பணமோசடி- என்னமா யோசிக்கிறாங்க!

தெலுங்கில் மோஷகல்லு என்று வெளியான திரைப்படம் தமிழில் அனு அண்ட் அர்ஜுன் என டப் செய்து வெளியிடப்பட்டது. மாடர்ன் இந்தியாவின் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஸ்கேம்மை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இது ஐஆர்எஸ் கால் சென்டர் ஸ்கேம் ஆகும்.

திரைப்பட கதை

திரைப்பட கதை

இந்த திரைப்படத்தில் விஷ்னு மன்சு மற்றும் காஜல் அகர்வால் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் கதாநாயகன் மற்றும் அவரது சகோதரி உட்பட கூட்டாளிகள் இந்தியாவில் கால் சென்டர் ஆரம்பித்து அமெரிக்கர்களை மோசடி செய்வார்கள். அமெரிக்காவில் முறையாகவும், சரியான நேரத்திலும் வரி செலுத்த வேண்டும் என்பது மிக கட்டாயமன ஒன்று.

திரைப்பட கதை போன்ற சம்பவம்

திரைப்பட கதை போன்ற சம்பவம்

இதை சாதகமாக பயன்படுத்தி இந்தியாவில் கால் சென்டர் ஆரம்பித்து அமெரிக்கர்களை தொடர்பு கொண்டு தாங்கள் வரி கட்டவில்லை என கூறி போலியாக வரி வசூலித்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள். இறுதியில் போலீஸில் பிடிபடுவார்கள். இதுதான் படத்தின் கதை. இதேபோன்ற சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

டெல்லியில் போலி கால் சென்டர்

டெல்லியில் போலி கால் சென்டர்

டெல்லியில் போலி கால் சென்டர் நடத்தி அரசு ஊழியர்கள் போல் தங்களை காண்பித்து இங்கிலாந்து மக்களை மோசடி செய்த கும்பலை போலீஸார் கைது செய்தனர். போலி கால் சென்டர் மூலம் இங்கிலாந்தில் உள்ள பொதுமக்களை மோசடி கும்பல் ஏமாற்றி வந்துள்ளது. டெல்லி போலீஸார் அவர்களை கைது செய்ததோடு, கால் சென்டருக்கு சீல் வைத்தனர்.

இங்கிலாந்து மக்களை ஏமாற்றிய 30 பேர்

இங்கிலாந்து மக்களை ஏமாற்றிய 30 பேர்

போலி கால் சென்டர் நடத்தி இங்கிலாந்து மக்களை ஏமாற்றிய 30 பேர் சிக்கியுள்ளனர். மேலும் தொடர்புடைய இரண்டு கால் சென்டர்களையும் மூடி சீல் வைக்கப்பட்டன. இந்தியாவில் கால் சென்டர் தொடங்கி வருவாய் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் போன்று தங்களை காண்பித்து இணைய பேசி மூலமாக நபர்களை தொடர்புகொண்டு தங்களுக்கு வரி பாக்கி உள்ளது எனவும் கட்டவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டியும் பணம் பறிப்பதை இந்த கும்பல் தொடர்ந்து செய்து வந்துள்ளது.

பவிந்தர் சிங் உட்பட அவரது கூட்டாளிகள் மூன்று பேர் கைது

பவிந்தர் சிங் உட்பட அவரது கூட்டாளிகள் மூன்று பேர் கைது

பவிந்தர் சிங் உட்பட அவரது கூட்டாளிகள் மூன்று பேரும் இரண்டு கால் சென்டர் நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பணம் அந்த நாட்டு வங்கி கணக்குக்கு செலுத்தப்படுவதும் பின் இவர்களது வங்கி கணக்குக்கு மாற்றப்படுவதும் தொடர்கதையாக இருந்துள்ளது. இவர்களை கைது செய்த போலீஸார் இரண்டு கால் சென்டருக்கும் சீல் வைத்தனர்.

கால் சென்டரில் பல்வேறு பொருட்கள் பறிமுதல்

கால் சென்டரில் பல்வேறு பொருட்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் குறித்து பார்க்கையில், அவர்கள் பர்விந்தர், பரம்ஜீத், ககன்தீப் சிங் மற்றும் மந்தன் அரோரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பர்விந்தர், பரம்ஜீத் மற்றும் ககன்தீப் ஆகியோர் முன்பும் சட்டவிரோத கால் சென்டர் நடத்தி பிடிப்பட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.மொத்தம் 101 மடிக்கணினிகள், 46 மொபைல் போன், ரூ.17.5 லட்சம் ரொக்கம், பல டிரான்ஸ்க்ரிப்ட்ஸ், செக் புத்தகங்கள், ஏடிஎம் கார்ட்கள் உட்பட பல வங்கிகளின் ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கால் சென்டரில் 30 பேர் கைது

கால் சென்டரில் 30 பேர் கைது

ரோஹினி செக்டர் 11-ல் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து சட்டவிரோத கால் சென்டர் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸார் சோதனை மேற்கொள்ள தொடங்கினர். கால் சென்டரில் ஆறு பெண்கள் உட்பட மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். கால் சென்டரை பர்விந்தர் தனது மூன்று கூட்டாளிகளான பரம்ஜீத் சிங், ககன்தீப் சிங் மற்றும் மந்தன் அரோரா ஆகியோர் இணைந்து கால் சென்டர் நடத்தி வந்துள்ளனர். இவர்களும் கைது செய்யப்பட்டனர்.

போலீஸார் நடத்திய விசாரணை

போலீஸார் நடத்திய விசாரணை

இவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ரோகிணி பிரிவு 9-ல் மற்றொரு கால் சென்டர் இயக்கி வந்தது தெரியவந்துள்ளது. இந்த பகுதிக்கு சென்று போலீஸார் நடத்திய சோதனையில் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கும்பலை கைது செய்த போலீஸ்

கும்பலை கைது செய்த போலீஸ்

இவர்கள் இங்கிலாந்தில் நபர்கள் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவர்கள் வரி செலுத்து வேண்டும் எனவும் இல்லையென்றால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என கூறி மனதில் அச்சத்தை விதைத்து பணம் பரித்து வந்துள்ளனர். இந்த கும்பலை போலீஸார் டெல்லியில் கைது செய்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Fake Call Center Seized in Delhi: Accused Threatened to England Citizens!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X