ICICI, HDFC, RBL போலி வங்கி ஆப்: உஷார் மக்களே.!

மக்களை ஏமாற்றுவதில் நம்ம நாட்டுக்குத் தான் முதல் இடம் தரவேண்டும். வித விதமாக ஏமாற்றுவதிலும் ஏமாற்றப்படுவதிலும் நமது மக்களின் நிலையைக் கண்டால் பாவமாகத்தான் இருக்கிறது.

By Sharath
|

மக்களை ஏமாற்றுவதில் நம்ம நாட்டுக்குத் தான் முதல் இடம் தரவேண்டும். வித விதமாக ஏமாற்றுவதிலும் ஏமாற்றப்படுவதிலும் நமது மக்களின் நிலையைக் கண்டால் பாவமாகத்தான் இருக்கிறது. வங்கிகளில் மோசடி என்ற காலம் மாறி, வங்கியே மோசடி செய்தது என்று செய்திகள் பரவிக்கொண்டுள்ள நிலையில். தற்போது அதையும் மிஞ்சும் விதத்தில் நடந்துள்ள புதிய சம்பவம் தான் வங்கி ஆப் மோசடி.

இன்றைய சூழலில் நாம் அனைவருமே கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் பேங்கிங் செய்து, எளிதாக பண பட்டுவாடாக்களைப் பைசல் செய்து கொள்கிறோம். நம்மில் பலர் வங்கிகள் பக்கம் செல்வதையே மறந்தும் இருப்போம். ஆனால் இன்று அதுவே ஆபத்தாகி விட்டது.

கிரெடிட் கார்டு மோசடி

கிரெடிட் கார்டு மோசடி

வங்கி மற்றும் கிரெடிட் கார்டு மோசடி விஷயங்களில் மக்கள் இப்போது வரை ஸ்பேம் கால்ஸ் மற்றும் மின்னஞ்சல்கள் வழி ஏமாற்றப்பட்டார்கள். இந்த நிலையில் தற்போது மோசடி கும்பல் ஒன்று நூதன முறையில் ஏமாற்றிய சம்பம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் மூன்று முன்னணி வங்கி ஆப் போன்று போலி ஆப் ஒன்றை உருவாக்கி பயனாளர்களின் கிரெடிட் கார்டு அட்டை விவரங்களைச் சேகரித்ததுடன் இல்லாமல் இன்னொரு துணிகர செயலைச் செய்துள்ளது இந்தக் கும்பல்.

வங்கி விவரங்களை சேகரித்து மோசடி

வங்கி விவரங்களை சேகரித்து மோசடி

புதிய தொழில்நுட்பங்களை கொண்டு, கிரெடிட் கார்டு மோசடி விஷயத்தில் ஏமாற்றிய இந்தக் கும்பல், பயனாளர்களின் வங்கி விவரங்களைப் போலி வங்கி செயலி மூலம் சேகரித்து மோசடி செய்துள்ளது. முன்னணி வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி(ICICI), ஆர்.பி.எல் வங்கி(RBL) மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி(HDFC) ஆகிய வங்கிகளின் செயலிகளை போன்று போலி செயலிகளைக் கூகுள் பிளேஸ்டோர் இல் பதிவேற்றம் செய்து மக்களை ஏமாற்றி உள்ளது இந்தக் கும்பல்.

விவரங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள் வலைத்தளங்களில்

போலி செயலி வழி கணக்காளரின் பெயர், கணக்கு எண், சி.வி.வி. எண், காலாவதி தேதிகள் மற்றும் வங்கி விபரங்கள் போன்ற விவரங்கள் திருடப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை செய்ய வேண்டிய அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப் பட்டது மட்டுமில்லாமல், கிரெடிட் கார்டு விவரங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறது அந்தக் கும்பல்.

ஒருத்தன் செஞ்ச வேலையை இது.!

ஒருத்தன் செஞ்ச வேலையை இது.!

கூகுள் பிளேஸ்டோர் இல் பதிவேற்றம் செய்யப்பட்ட மூன்று போலி வங்கி செயலிகளை உருவாக்கி, கூகுளில் பதிவேற்றம் செய்தது ஒரு நபர் என்பது உறுதிப்படுத்தபட்டள்ளது. இந்தப் போலி வங்கி செயலிகள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதும் இப்பொழுது கூகுள் நிறுவனம் இதைத் தடை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 விழிப்புணர்வு

விழிப்புணர்வு

என்ன தான் வங்கிகள் பல விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டாலும், ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை பாவம் மக்கள் அணைத்து விஷயங்களிலும் ஏமாற்றப்பட்டு கொண்டே தான் இருப்பார்கள்

Best Mobiles in India

English summary
Fake banking apps on Google Play Store dupe credit card holders How to stay safe : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X