நீங்கள் வாங்கிய சரக்கு போலியா? உண்மையான விலை என்ன? ஆன்லைனில் பார்க்கலாம் வாங்க..

நீங்கள் வாங்கிய மதுபானத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்க பிரத்யேக அரசாங்க வலைத்தளம் ஒன்று செயல்பட்டுவருகிறது.

|

இறக்குமதி செய்யப்பட்ட மதுவகைகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், ஓரிஜினல் பாட்டில்களில் போலி மதுவை நிரப்பி சட்டவிரோதமாக விற்பவர்களின் காட்டில் பண மழை பொழிகிறது. நீங்கள் ஜானி வாக்கர் அல்லது ஷிவஸ் ரீகலுக்கு பணம் செலுத்தியிருந்தாலும், உங்கள் உள்ளூர் விநியோகஸ்தர் அழகான பளபளப்பான பாட்டிலில் மலிவான விஸ்கியை நிரப்பி உங்களுக்கு வழங்கும் வாய்ப்புகள் அதிகம்.

நீங்கள் வாங்கிய சரக்கு போலியா? உண்மையான விலை என்ன?

பெரும்பாலான மக்களுக்கு கடையில் கண்ணால் பார்த்தே, போலி மற்றும் நம்பகமான ஆல்கஹாலுக்கான வித்தியாசங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மேலும் சில சட்டவிரோத விற்பனையாளர்கள், போலியான மதுவில் உண்மையான சுவை வரும்வகையில் தந்திரமாக செயல்படுவர்.

அரசாங்க வலைத்தளம்

அரசாங்க வலைத்தளம்

நீங்கள் வாங்கிய மதுபானத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்க பிரத்யேக அரசாங்க வலைத்தளம் ஒன்று செயல்பட்டுவருகிறது. டெல்லி அரசின் கலால் துறையால் வழங்கப்படும் இந்த ஆன்லைன் சேவையானது, பார்கோட் அல்லது சீரியல் எண்ணை பயன்படுத்தி கடந்த ஒரு மாதத்திற்குள் டெல்லி யூனியன் பிரதேசத்திலிருந்து வாங்கிய மதுபானத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.

 பிரத்யேக செயலி

பிரத்யேக செயலி

ஆண்ராய்டில் உள்ள "mLiquorSaleCheck" என்ற பிரத்யேக செயலியின் மூலமும் இதே சேவையைப் பெறமுடியும். இந்த செயலியை பயன்படுத்துவதில் உள்ள நன்மை என்னவென்றால், நீங்கள் சீரியல் எண்ணை தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக பார்கோடு ஸ்கேனரை உபயோகித்து எளிதில் இச்செயலியை பயன்படுத்தலாம்.

பார்கோட் அல்லது சீரியல் எண்ணை கண்டறிவது எப்படி?

பார்கோட் அல்லது சீரியல் எண்ணை கண்டறிவது எப்படி?

டெல்லியில் விற்கப்படும் அனைத்து மது பாட்டில்களும் ஒரு க்யூ.ஆர் / சீரியல் எண் ஸ்டிக்கர் மூடியில் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஸ்டிக்கர் மூடி மற்றும் பாட்டிலுக்கு இடையே சீல் போன்று பாதுகாக்கிறது. எனவே இந்த ஸ்டிக்கரில் உள்ள வரிசை எண் ஆல்கஹாலின் உண்மைத்தன்மையையும் எங்கிருந்து வருகிறது என்பதையும் சரிபார்க்க முக்கியமானது. இந்த ஸ்டிக்கர் இல்லாத எந்த மதுபாட்டிலையும் டெல்லியில் வாங்க வேண்டாம்.

 அசல் விலை மற்றும் மதுவின் உண்மைதன்மையை இணையத்தில் சரிபார்ப்பது எப்படி?

அசல் விலை மற்றும் மதுவின் உண்மைதன்மையை இணையத்தில் சரிபார்ப்பது எப்படி?

https://delhiexcise.gov.in/Portal/liquorsalecheck
என்ற இணையதளத்திற்கு செல்லவும்

*ஸ்டிக்கரில் உள்ள முழு வரிசை எண்ணையும் உள்ளிடவும். இது 28 இலக்கங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும், ஸ்டிக்கரில் அச்சிடப்பட்ட எந்த சிறப்பு எழுத்துகளையும் அடைப்புகுறிகளையும் தட்டச்சு செய்ய வேண்டாம்.

*சீரியல் எண்ணை சரியாக உள்ளிட்ட பின்பு சமர்ப்பித்தல் பொத்தானை சொடுக்கவும்.

*இணையதளம் அந்த மது பாட்டிலின் உண்மை நிலையை வெளிப்படுத்தும். அசல் மது என்றால் "The Liquor is from an authorized supply source" என்ற குறிப்புடன், பிராண்ட் பெயர், அளவு, விலை மற்றும் அந்த மதுபாட்டிலை வாங்கிய கடையின் பெயர் & விலாசம் உள்ளிட்ட விவரங்களை வழங்கும்.மது பாட்டிலின் துல்லியமான விற்பனை விலையை தெரிந்து கொள்ளவும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

“mLiquorSaleCheck” செயலியை பயன்படுத்துவது எப்படி?

“mLiquorSaleCheck” செயலியை பயன்படுத்துவது எப்படி?

கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலியை கண்டறிவது சற்று கடினம் என்பதால், தேடல் பெட்டியில் "Delhi Excise" தேட வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறோம். இந்த செயலியானது "கலால், பொழுதுபோக்கு & சொகுசு வரி துறை" மூலம் இந்த செயலி வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் சரியான செயலியை பதிவிறக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* "mLiquorSaleCheck" செயலியை பதிவிறக்கும் செய்யுங்கள்


*ஸ்கேன் பார்கோடு விருப்பத்தை தேர்வுசெய்தவுடன் திறக்கப்படும் கேமரா திரை மூலம் மூடியில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் உள்ள QR குறியீடை ஸ்கேன் செய்யவும்.


*பார்கோடு ஸ்கேனர் சரியாக செயல்பட் தவறினால், நீங்கள் சீரியல் எண்ணை தட்டச்சு செய்ய வேண்டும். இது 28 இலக்கங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் ஸ்டிக்கரில் அச்சிடப்பட்ட எந்த சிறப்பு எழுத்துகளையும் அடைப்புகுறியையும் தட்டச்சு செய்ய வேண்டாம்.

*சீரியல் எண்ணை சரியாக உள்ளிடு செய்தபின் சமர்ப்பித்தல் பொத்தானை கிளிக் செய்யவும்.


*இச்செயலி மதுபான பாட்டிலின் உண்மை நிலையை வெளிப்படுத்தும். அசல் மது என்றால் "The Liquor is from an authorized supply source" என்ற குறிப்புடன், பிராண்ட் பெயர், அளவு, விலை மற்றும் அந்த மதுபாட்டிலை வாங்கிய கடையின் பெயர் & விலாசம் உள்ளிட்ட விவரங்களை வழங்கும்.

இணையதளம்/செயலி மூலம் பாட்டிலை அடையாளம் காண இயலவில்லை எனில் என்ன செய்வது?

இணையதளம்/செயலி மூலம் பாட்டிலை அடையாளம் காண இயலவில்லை எனில் என்ன செய்வது?

உங்கள் மதுபாட்டிலின் சீரியல் எண் அல்லது பார்கோட் மேற்கூறிய விவரங்களை வழங்கவில்லை என்றால், அது டெல்லி அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மது அல்ல. மேலும் உங்கள் பாட்டில் வேறு சில மாநிலங்களிலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ கொள்முதல் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது தேவையான வரிகளை செலுத்தாமல் இருந்திருக்கலாம். இந்த சேவை டெல்லியிலிருந்து வாங்கிய மதுபானத்திற்கும் மட்டுமே. வேறு எந்த மாநில அல்லது யூனியன் பிரதேசத்தின் மதுபாட்டில்களுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Fake alcohol How to check online the liquor you is authentic and know the actual price : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X