Home
News

புது Android செக்யூரிட்டி.. இனி பாஸ்வேர்ட் மறந்தா முடிஞ்சு.. அப்புறம் மொத்தமும் லாக்குதான்.. எந்தெந்த மாடல்?

ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் தெப்ட் புரொடெக்சன் பீச்சரில் (Theft Protection Feature) பல்வேறு அப்டேட்கள் வர இருக்கின்றன. இதில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பெயில்டு ஆதன்டிக் லாக் (Failed Authentication Lock) பீச்சர் வர இருக்கிறது. இதை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கூட ஆப் செய்ய முடியாது. இந்த புதிய செக்யூரிட்டி பீச்சர் (New Security Feature) குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம், ஆண்ட்ராய்டு போனை ஆப் செய்து வைத்துவிட்டால் போதும், அதை எங்கு வேண்டுமானலும் எடுத்து சென்று யார் வேண்டுமானலும் பயன்படுத்தும்படி செக்யூரிட்டி பீச்சர்கள் இருந்தன. ஆனால், இப்போது அப்படியில்லை ஏகப்பட்ட செக்யூரிட்டி பீச்சர்களை ஆண்ட்ராய்டு கொடுக்க தொடங்கிவிட்டது. உங்களது போனை ஆப் செய்துவிட்டு ஆன் செய்தால், உடனடியாக பாஸ்வேர்டு கேட்கும்.

புது Android செக்யூரிட்டி.. இனி பாஸ்வேர்ட் மறந்தா முடிஞ்சு.. அப்புறம்?

இந்த பாஸ்வேர்ட் இல்லை என்றால், அந்த ஸ்மார்ட்போனை யாரும் பயன்படுத்த முடியாது. அதேபோல தவறான பாஸ்வேர்ட்டை திரும்ப திரும்ப போட்டு ஓப்பன் செய்ய முயற்சித்தால், அந்த போன் லாக்காகிவிடும். அதன்பிறகு உரிமையாளர் மட்டுமே அதை ஓப்பன் செய்வது சாத்தியமானதாக இருக்கும். ஆனால், இந்த செக்யூரிட்டி பீச்சர்களை ஸ்மார்ட்போன் உரிமையாளர் ஆன் அல்லது ஆப் செய்து கொள்ளலாம்.

இதற்கான ஆப்ஷன்கள் இப்போதைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இருக்கிறது. ஆனால், ஆண்ட்ராய்டு 15 (Android 15) மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) வெர்ஷன் கொண்ட மாடல்களில் புதிய பெயில்டு ஆதன்டிக் லாக் பீச்சர் வருகிறது. இதை ஸ்மார்ட்போன் உரிமையாளர் கூட ஆப் அல்லது ஆன் செய்ய முடியாது. இதுவொரு டீபால்ட் பீச்சராக (Default Feature) யூசர்களுக்கு கிடைக்க இருக்கிறது.

இந்த ஆதன்டிக் லாக் பீச்சர் மூலம் ஆப்கள் அல்லது செட்டிங்ஸ் போன்றவற்றில் லாகின் செய்யும்போது தவறான பாஸ்வேர்ட்டை கொடுத்தால் ஆட்டோமேட்டிக்காக ஸ்கிரீன் லாக் செய்யப்படும். இந்த பீச்சரானது முந்தைய பீச்சர்களை போலல்லாமல், ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியாது. தெப்ட் புரொடக்சன் என்ஹான்ஸ்மெண்ட்டில் இது புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

ஒரு ஸ்மார்ட்போன் திருடப்பட்டால், அல்லது அதில் இருக்கும் டேட்டாவை தெரியாமல் எடுக்க முயற்சிக்கும்போதோ அங்கீகரிக்கப்படாத அணுகலை தடுக்கவே இந்த புதிய பெயில்டு ஆதன்டிக் லாக் பீச்சர் வர இருக்கிறது. ஆனால், இது பின் நம்பர், பேட்டர்ன் அல்லது பாஸ்வேர்ட்டை அடிக்கடி மறந்துவிடும் யூசர்களுக்கு சற்று சிக்கலை கொடுக்கவும் வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் பாஸ்வேர்ட் மறந்துவிட்டால், ஸ்கிரீன் லாக் செய்யப்பட்ட பிறகு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும். அதேபோல இதிலும் இருக்கிறது. ஆனால், மறுபடியும் பாஸ்வோர்ட் தவறாக இருந்தால், ஸ்மார்ட்போனை ஓப்பன் செய்வதே மிகவும் கடினமான காரியமாக மாறிவிடும். இது தேவைப்படக்கூடிய பாதுகாப்பு பீச்சராக இருக்கிறது.

இருப்பினும், ஆன் மற்றும் ஆப் கன்ட்ரோல்கள் கிடைத்தால் பல்வேறு யூசர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. அடுத்த கூகுள் அப்டேட்டில் இந்த ஆன் மற்றும் ஆப் ஆப்ஷன் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெயில்டு ஆதன்டிக் லாக் பீச்சரானது பீட்டா வெர்ஷனுக்கு ரெடியாக இருக்கிறது. ஆனால், இன்னும் கிடைக்கவில்லை.

ஆகவே, வருவதற்கு முன்பு ஆன் மற்றும் ஆஃப் ஆப்ஷன்களுடன் கிடைத்தால் பக்காவாக இருக்கும். அதேபோல முதலில் டீபால்ட் பீச்சராக கொடுக்கப்பட்டு, அதன்பிறகு அடுத்த அப்டேட்டில் ஆன் மற்றும் ஆஃப் ஆப்ஷனும் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேற்கண்ட தகவல்கள் ஆண்ட்ராய்டு ஆதாரிட்டி (Android Authority) மூலம் வெளியாகி இருக்கின்றன. இதுபோன்ற பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Failed Authentication Lock Android 15 16 May Locking Device Screen After Multiple Failed Attempts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X