ATM பரிவர்த்தனை தோல்வியா? பணத்தை திரும்பப்பெறும் நேரம் இது! RBI வெளியிட்ட தகவல்.!

|

நீங்கள் சமீபத்தில் செய்த ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்றதா? கவலைப்படவோ பயப்படவோ தேவையில்லை. RBI தற்பொழுது புதிய அறிவிப்பு செய்தியைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனை என்பது ஏடிஎம் செயலிழப்பு காரணமாக இருக்கலாம் அல்லது ஏடிஎம் இயந்திரத்தில் பணமில்லாமல் இருக்கலாம். இனி இப்படி ஒரு நிலை உங்களுக்கு வந்தால் கவலைப்படாதீர்கள்.

வங்கி மீண்டும் பணத்தை கொடுக்க வேண்டும்

வங்கி மீண்டும் பணத்தை கொடுக்க வேண்டும்

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் கணக்கிலிருந்து எடுத்ததாகக் காட்டப்படும் தொகையை வங்கி மீண்டும் உங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

வங்கியிடமிருந்து நாள் ஒன்றிற்கு ரூ.100 வாங்கலாம்

வங்கியிடமிருந்து நாள் ஒன்றிற்கு ரூ.100 வாங்கலாம்

குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் கணக்கிலிருந்து டெபிட் செய்யப்பட்ட பணத்தை உங்கள் வங்கி தரவில்லை என்றால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 என்ற விதத்தில் வங்கி உங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்" என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்கள் கவனத்திற்கு.! புதிய மாற்றம்.! என்ன தெரியுமா?ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்கள் கவனத்திற்கு.! புதிய மாற்றம்.! என்ன தெரியுமா?

RBI சொன்ன பதில்

RBI சொன்ன பதில்

இந்திய ரிசர்வ் வங்கியின் பொது விழிப்புணர்வு டிவிட்டர் பக்கம் இந்த தகவலை ட்வீட் செய்துள்ளது. ஏடிஎம்கள் தொடர்பான கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் அடிக்கடி பதிலளித்துள்ளது. அப்படித் தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு RBI பதில் அளித்துள்ளது.

பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?

மிஸ் ஆனா பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்பது பற்றி சில முக்கிய விஷயங்களை RBI விளக்கமாகக் கூறியுள்ளது.

1. வங்கிகள் இதுபோன்ற தோல்வியுற்ற பரிவர்த்தனைகளைத் தாங்களாகவே முன்வந்து பயனருக்கு மீண்டும் கொடுத்துவிடவேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புகார் அளிப்பது எப்போதும் ஒரு நல்ல நடைமுறை

புகார் அளிப்பது எப்போதும் ஒரு நல்ல நடைமுறை

2. ATM அட்டை வழங்கிய வங்கி அல்லது ஏடிஎம் இயந்திரம் வைத்துள்ள உரிமையாளர் வங்கியில் விரைவாகப் புகார் அளிப்பது எப்போதும் ஒரு நல்ல நடைமுறை என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணத்தை கையில் வாங்கி செலவு செய்கிறீர்களா? ஜாக்கிரதை..! RBI புதிய அறிவிப்பு.!பணத்தை கையில் வாங்கி செலவு செய்கிறீர்களா? ஜாக்கிரதை..! RBI புதிய அறிவிப்பு.!

5 காலண்டர் நாட்கள் மட்டுமே கால அவகாசம்

5 காலண்டர் நாட்கள் மட்டுமே கால அவகாசம்

3. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்றால், தோல்வியுற்ற பரிவர்த்தனை நடந்த நாளிலிருந்து 5 காலண்டர் நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் மீண்டும் அந்த வங்கி பணத்தைச் செலுத்தியிருக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.100 இழப்பீடு

ரூ.100 இழப்பீடு

4. ATM அட்டை வழங்கும் வங்கி, தோல்வியுற்ற அந்த தொகையை 5 நாட்களுக்குள் திரும்பி செலுத்தாவிட்டால், இழப்பீட்டுடன் அந்த தொகை திரும்பச் செலுத்த வேண்டியது இருக்கும். பரிவர்த்தனை தோல்வியுற்ற 5 நாட்களுக்கு அப்பால் தாமதமாகும் ஒவ்வொரு நாளிற்கும் ரூ.100 வழங்கப்பட வேண்டும்.

வங்கியை நேரில் கூட அணுகுங்கள்

வங்கியை நேரில் கூட அணுகுங்கள்

5. வாடிக்கையாளர் தனது வங்கியை அணுகி அவர்களுடன் விஷயத்தைச் சரி செய்துகொள்ளலாம்.

6. வங்கியிடமிருந்து பதில் கிடைத்த 30 நாட்களுக்குள் அல்லது 30 நாட்களுக்குள் வங்கியிலிருந்து பதில் கிடைக்காத நிலையில், பணத்தை இழந்த வாடிக்கையாளர் உடனடியாக வங்கி ஒம்புட்ஸ்மனிடம் (Banking Ombudsman) உதவி பெறலாம்.

Best Mobiles in India

English summary
Failed ATM Transaction Refund Time Says RBI, Note This Key Things Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X