போர்க்களங்களில் படையெடுக்கப் போகும் கில்லர் ரோபோக்கள்: அச்சுறுத்துகிறதா தொழில்நுட்ப வளர்ச்சி!
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது என்றே கூறலாம். செயற்கை நுண்ணறிவில் தொடங்கி சிறிய விஷயங்கள் முதல் தொழில்நுட்ப பயன்பாடு இருந்து வருகிறது. சமீப காலமாக வரும் திரைப்படங்களும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சியை சித்தரித்து மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது என்றே கூறலாம்.

ஆளில்லா ரெஜிமென்ட்கள், கிளர்ச்சியாளர்களை பொதுவெளியில் கண்டுபிடிக்க உதவும் ட்ரோன்கள், மனிதர்களை போல ஆயுதங்களை கட்டுப்படுத்த உதவும் கணினி மயமாக்கப்பட்ட அம்சம் ஆகியவை திரைப்படங்களில் மட்டும் காணப்படும் கற்பனை அல்ல. காரணம் அத்தகைய உலகில் நாம் நுழைய இருக்கிறோம். தற்போதைய ஆயுதத் துறையின் ஸ்மார்ட் தொழில்நுட்பம் ஆனது போரின் மூன்றாவது புரட்சி என விவரிக்கப்படுகிறது.

உலகெங்கிலும் இருக்கும் துருப்புகள், தற்போது போர்களத்தின் பல்வேறு பகுதிகளிலான காற்று, கடல், கடலுக்கு அடியில் இருக்கும் முன்மாதிரி ஆயுதங்களை காட்சிப்படுத்தப்படுகின்றன. இது உலக ஒழுங்கை பெரிய அளவிற்கு மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய வளர்ச்சியாகும். இருப்பினும் சிறு கவலைப்பட கூடிய விஷயங்களும் இதில் இருக்கிறது.

ரஷ்ய ஆயுத உற்பத்தி தளமான கலாஷ்னிகோவ் முழு தானியங்கி ஆயுதங்களின் தொகுப்பை உருவாக்கி வருகிறது. கலாஷ்னிகோவின் நியூரல் நெட் போர் தொகுதி மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த பட்டியலில் 7.62 மிமீ இயந்திர துப்பாக்கி மற்றும் கணினி அமைப்பில் இணைக்கப்பட்ட கேமரா உள்ளிட்டவை அடங்கும். உற்பத்தியாளர்கள் மனித கட்டுப்பாடு தொடர்பும் இல்லாமல் சொந்தமாக இலக்கு வைத்து முடிவுகளை எடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் தாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏஐ ஃபைட்டர்ஜெட் பைலட் அமைப்பு அதுவே இலக்குகளை அடையாளம் கண்டு முடிவுகளை எடுக்கும் நியூரல் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பமானது தன்னியக்க பைலட் போன்ற அமைப்பு அல்ல. இது முழுமையாக ஏஐ கட்டுப்பாடு அம்சத்தோடு வருகிறது.

இதன்மூலம் கணிக்க முடியாத சூழ்நிலைகளிலும் துல்லியமாக பணியாற்ற முடியும். இது முன்திட்டமிடப்பட்ட பாரம்பரிய கணினி போலல்லாமல் நரம்பியல் பிணையம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிமுகம் இல்லாத சமயத்திலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இவைகள் செயல்படும்.

ஆயுதங்கள் நரம்பியல் முறையில் இணைக்கப்பட்டு அதிநவீன செயற்கை நுண்ணறிவை எப்படி பயன்படுத்துகின்றன என்பதை பார்க்கலாம். இந்த ஆயுதங்கள் எதன் அடிப்படையில் தாக்குதலை முடிவு செய்யும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல் இது மிகவும் ஆபத்தானது என்று பாதுகாப்பு நிபுணரான அல்ட்ரா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆண்ட்ரூ நான்சன் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆயுத உற்பத்தியாளர்கள் கூறும் சில கருத்துகளில் அவர் வேறுபட்டிருக்கிறார்.

தானியங்கி பாதுகாப்பு அமைப்புகளானது அச்சுறுத்தலின் தன்மையை பகுப்பாய்வு செய்து முடிவுகளை அதுவே எடுக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எதிரிகளால் ஏவப்பட்ட ஏவுகணையின் வடிவம், அளவு, வேகம் மற்றும் பாதை ஆகியவற்றை கண்டறிந்து மனிதர்களைவிட விரைவாக தீர்வை எடுக்க முடியும். இதுபோன்ற அமைப்புகளின்போது அறிமுகமில்லாத சாதனங்கள் கண்டறிந்தால் தானியங்கி எவ்வாறு செயல்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதன்மூலம் தவறான விஷயங்கள் நடக்கலாம் மற்றும் பெரிய சேதம் ஏற்படலாம் எனவும் கருதப்படுகிறது.

2001 முதல் ஏவுகணைகள் செலுத்துவதற்கு தொலை பைலட் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. டெர்மினேட்டர் திரைப்படங்களில் காணப்படுவது போல் ஸ்கைனெட் சூப்பர் கம்யூட்டர் உலகம் கையகப்படுத்தும் என்பது அபத்தமானது என பல நிபுணர்கள் கூறுகின்றனர். மனிதர்களால் உருவாக்கப்பட்ட கணினிகள் அல்லது ரோபோக்கள் திறன்களை தாமாக வளர்க்கக்கூடும் என்ற கருத்தை பலர் நிராகரிக்கின்றனர்.

அதேபோல் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் பேராசிரியரான நோயல் ஷர்கி, தற்போதைய பிரச்சனையானது சூப்பர் புத்திசாலித்தனமான ரோபோக்கள் இல்லை. ஆனால் அவைகளை பொதுமக்கள் இலக்குகள் மற்றும் இராணுவ இலக்குகளையும் ரோபோக்களையும் வேறுபடித்து பார்க்க முடியாத ஒரு அமைப்பு ஆகும் என கூறினார்.

10 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம்
இந்த கவலைகள் இருந்தபோதிலும் கலாஷ்னிகோவில் சமீபத்திய தயாரிப்புகளானது ரஷ்யாவில் சோதிக்கப்படுகின்றன. இவை யுரேனஸ்-9 என்ற இயந்திர துப்பாக்கி மற்றும் 30மிமீட்டர் பீரங்கி கொண்ட ஆளில்லா போர் வாகனம் ஆகும். இவைகளை 10 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் கட்டுப்படுத்தலாம்.
File Images


Click it and Unblock the Notifications