பிளாக் நைட் - ஒரு விலகாத மர்மம்..!

  பிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலம் ஆகும். 'கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம்' என்று இது அழைக்கப்படுகிறது என்பதும், இது வேற்றுலகத்தை சார்ந்தது என ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  மேலும், இந்த கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம் (Black Knight satellite) ஆனது 13000 ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வருவதாக யூஎப்ஓ (UFO) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை (Unidentified flying object) ஆராயும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். இந்த மர்மமான 'பிளாக் நைட்' பற்றிய மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடார்களில் தொகுத்துள்ளோம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  இப்படி ஒரு விண்கலம் :

  1954-யில் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த செய்தியின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் புவியைச் சுற்றி வருகிறது என்பது தெரிய வந்தது.

  வசதிகள் :

  விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகள் ஆனது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது என்பதும், அந்த சமயத்தில் வெளியான இந்த பிளாக் நைட் பற்றிய செய்தி தீயாய் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  கருப்பு பொருள் :

  மீண்டும் 1960-யில் அமெரிக்க கடற்படை இதே கருப்பு பொருள் 104.5 நிமிட சுற்று வேகத்தில் புவியைச் சுற்றிவருவதை கண்டறிந்தது . மேலும் இது சார்ந்த தீவிரமான ஆய்வும் தொடங்கப்பட்டது.

  216 கி.மீ தூரம் :

  விசித்திரமான சுற்றுப்பாதையை கொண்ட இந்த கருப்பு பொருளுக்கும், பூமிக்கும் இடையேயுள்ள அதிகப்பட்ச தூரம் 1,728 கி.மீ என்று,ம் குறைந்தப்பட்ச தூரம் 216 கி.மீ என்றும் கண்டறியப்பட்டது.

  ரேடியோ சிக்னல் :

  பிளாக் நைட் செயற்கைக்கோள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ரேடியோ சிக்னல்களை கடத்திக் கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதும் முகவர் கண்கானித்துக் அறிவித்துள்ளனர்.

  சிறப்பு கவனம் :

  பல ஆண்டுகளாக விண்வெளி வளர்ச்சி யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க மற்றும் ரஷ்யாவிற்கு, இந்த பிளாக் நைட் விண்கலம் மீது சிறப்பு கவனம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

  சமிக்ஞை இடைமறிப்பு :

  1899-ஆம் ஆண்டு நிக்கோலா டெஸ்லா என்பவர் தான், பிளாக் நைட் விண்கலத்தின் சமிக்ஞையை இடைமறிப்பு செய்த முதல் மனிதர் என்ற புரளி கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.

  அறிக்கை :

  மேலும் 1930-களில் இருந்தே பிளாக் நைட் விண்கலத்தின் விசித்திரமான சிக்னல்களை பெறுவதாக உலகம் முழுக்க உள்ள விண்வெளி வீரர்கள் அறிக்கை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  புகைப்படத்தில் சிக்கியது :

  1957-ஆம் ஆண்டு தான் மர்மமான பிளாக் நைட் விண்கலம் முதல் முறையாக புகைப்படத்தில் சிக்கியது.

  தற்செயல் :

  டாக்டர் லுயிஸ் கோராலோஸ் (Dr. Luis Corralos) என்பவர், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இசுப்புட்னிக் 2 விண்கலம் (Sputnik 2) வெனிசுவேலாவின் தலைநகரமான கரகஸ் நகரை கடக்கும் போது புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது தற்செயலாக பிளாக் நைட் சிக்கியது.

  நிழல் ஆடுவதாக அறிக்கை :

  அதே 1957-ஆம் ஆண்டு இசுப்புட்னிக் 1 விண்கலத்தில் (Sputnik 1) இருந்த விண்வெளி வீரர்கள் அடையாளம் காணமுடியாத ஒன்று, போலார் சுற்று வட்டப்பாதையில் தங்களின் அருகே நிழல் ஆடுவதாக அறிக்கை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

  டைம்ஸ் நாளிதழ் :

  மார்ச் 7-ஆம் அதேதி 1960-ஆம் ஆண்டு பிரபல டைம்ஸ் நாளிதழ் இந்த பிளாக் நைட் விண்கலம் பற்றி செய்தி வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  முதல் வானிலை செயற்கைகோள் :

  1957-ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்க மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே போலார் சுற்று வட்டப்பாதைக்குள் விண்கலம் செலுத்த முனையத் தொடங்கி 1960-ஆம் ஆண்டு உலகின் முதல் வானிலை செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

  பிளாக் நைட் பற்றிய தகவல் :

  விண்ணில் செலுத்தப்பட்ட போலார் செயற்கைகோள் ஆனது பூமியின் மேப்பிங் மற்றும் பூமியை கண்கானித்தல் போன்றவைகளை செய்வதோடு, போலார் சுற்று வட்டப்பாதையில் அடிக்கடி தென்படும் பிளாக் நைட் பற்றிய தகவல்களையும் சேமிக்க உதவும் என்று நம்பப்பட்டது.

  10 டன் எடை :

  பின் 1960-களில் மீண்டும் பிளாக் நைட் விண்கலம் போலார் சுற்று வட்டப்பாதையில் தென்பட்டுள்ளது. அப்போது தான் அந்த விண்கலம் ஆனது சுமார் 10 டன் வரை எடை கொண்டதாய் இருக்கும் என விண்வெளி வீரர்களும், அறிவியலாளர்களும் கணிப்பு தெரிவித்தனர்.

  பிளாக் நைட் :

  அந்த காலக்கட்டத்தில் விண்ணில் மிதக்கும் மிக கனமான விண்கலமாய் (Heaviest Artificial Satellite) பிளாக் நைட் பார்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

  ட்ராக் :

  முதல் முறையாக ரேடாரில் பிளாக் நைட் சிக்கிய 7 மாதம் கழித்து 'ட்ராக்' செய்யப்பட்டு மீண்டும் பிளாக் நைட் புகைப்படத்தில் சிக்கியது. இதற்கு க்ரூமன் ஏர்கிராஃப்ட் கார்ப்ரேஷன் (Grumman Aircraft Corporation) மிகவும் உதவியது.

  டீகோட் :

  பிளாக் நைட் விண்கலத்தில் இருந்து கிடைத்த சிக்னல்களை டீகோட் (decode) செய்து பின், அது 13000 ஆண்டுககளுக்கு முன் உருவான 'எப்சிலன் பூட்ச் ஸ்டார் சிஸ்டம்' (Epsilon Bootes Star System) என்ற இரட்டை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  நாசா :

  இறுதியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவும் 'பிளாக் நைட் சாட்டிலைட்' என்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க :

  இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத மர்மங்கள்..!


  விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெளி மர்மங்கள்..!

  தமிழ் கிஸ்பாட் :

  மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  Facts about the Black Knight Satellite. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more