Home
News

ஹோட்டல் சர்வர், சிம், ரீசார்ஜ் கார்டு விற்ற லைக்கா உரிமையாளர் கதை.!

அகதியாக சென்றவர் 21 நாடுகளில் பல்வேறு தொழில்களையும் நிறுவி கொடி கட்டி பறக்கிறார். தமிழர்களில் தனி முத்திரையுடன் இருப்பவர் அது லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் அல்லி ராஜாவாகத்தான் இருக்க முடியும். ஹோட்டல

லைக்கா என்ற நிறுவனம் இன்று பல்வேறு சர்ச்சைகளையும் தாண்டி இன்று உலகம் முழுக்க கொடி கட்டி பறக்கின்றது. தொழிலில் லாபம் அள்ளும் நிறுவனமாகவும் இருக்கின்றது.

ஹோட்டல் சர்வர், சிம், ரீசார்ஜ் கார்டு விற்ற லைக்கா உரிமையாளர் கதை.!

இந்த நிறுவனத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனரின் வாழ்கை அகதி என்றால் நம்மால் நம்ப முடியுமா.

அகதியாக சென்றவர் 21 நாடுகளில் பல்வேறு தொழில்களையும் நிறுவி கொடி கட்டி பறக்கிறார். தமிழர்களில் தனி முத்திரையுடன் இருப்பவர் அது லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் அல்லி ராஜாவாகத்தான் இருக்க முடியும். ஹோட்டல் சர்வண்டாக துவங்கிய இவரின் வாழ்கையை பார்க்கலாம்.

லைக்கா நிறுவனர்:

லைக்கா நிறுவனர்:

லைக்கா புரொடெக்ஷன் நிறுவனர் சுபாஷ்கரன் அல்லி ராஜா. இன்றை சொத்து மதிப்பு £ (பவுண்ட்) 180 மில்லியன். இந்திய மதிப்பில் 16,15,51,83,240.00 ஆகும்.
உலகம் முழுக்க பெரும் தொழில் அதிபராகவும் இருக்கின்றார். 21 நாடுகளிலும் லைக்கா நிறுவனத்த நிறுவியுள்ளார். இவரின் வாழ்கை வரலாறு நம்மை வியக்க வைக்கின்றது.

 பிறப்பு:

பிறப்பு:

1972ம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர். ஈழத் தமிழர் சுபாஷ்கரன் அல்லி ராஜா. தாய் ஞானாம்பிகை, தங்கை லைக்கா. ஈழப்போர் உச்சம் அடைந்த போது, இலங்கையில் இருந்து சிறிய படகு மூலம் பாரீஸ் தப்பி சென்றனர்.

 ஹோட்டல் சர்வண்ட்:

ஹோட்டல் சர்வண்ட்:

பாரீஸ் சென்ற பிறகு ஹோட்டல் ஒன்றில் சர்வண்டாக வேலைக்கு சேர்ந்தார். அப்போது ஐரோபாவில் செல்போன் அறிமுகம் ஆன சமயம். செல்போன்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக உணர்ந்த அவர். இந்த தொழில் குதிக்க எண்ணினார்.

ரீசார்ஜ் கார்டு, சிம்கார்டு விற்றார்:

ரீசார்ஜ் கார்டு, சிம்கார்டு விற்றார்:

பிறகு, ரீசார்ஜ் கார்டு, சிம்கார்டுகளை சிறிய அளவில் விற்க டிஸ்டிபியூட்டராக உருவெடுத்தார். பிறகு தொழிலை விரிவு செய்தார். தொழில் பல்வேறு நுணுக்கங்களையும் அறிந்து வைத்துக் கொண்டார். தொழிலை மேம்படுத்தும் பணியியிலும் இறங்கினார் சுபாஷ்கரன் அல்லி ராஜா. தற்போது தொழிலுக்காக இங்கிலாந்தில் வசித்து வருகின்றார்.

 லைக்கா டெல்:

லைக்கா டெல்:

லைக்கா டெல் என்னும் நிறுவனத்தை தனது தங்கை பெயரால் ஆரம்பித்தார். அந்த நிறுவனத்தில் செல்போன்கள், சிம்கார்டு மற்றும் ரீசார்ஜ் கார்டுகள் விற்பனை செய்ய துவங்கின. பல்வேறு நாடுகளிலும் செல்போன்கள் விற்பனைக்கு சென்றதால், மற்ற நாடுகளுக்கும் தனது தொழிலை விரிவுபடுத்தினார் சுபாஷ்கரன்.

லைக்கா டெல் நிறுவனம் கேபிள்கள் இல்லாமல் சேவையை துவங்கியது. பெரிய நிறுவனங்களிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து, தனது நிறுவனத்தின் பெரியல் மக்களுக்கு சேவை வழங்கியது.

ஈழப்போர் முடிவுக்கு பிறகு:

ஈழப்போர் முடிவுக்கு பிறகு:

ஈழப்போர் முடிவுக்கு பிறகு தனது தொழிலை இலங்கை, இந்தியா வரை விரிவு செய்தார். ஈழப்போரின் முடிவுக்கு பின்னே இந்தியாவிலும் அசுர வளர்ச்சிய அடைந்த நிறுவனமாக லைக்கா உருவெடுத்துள்ளது.

லைக்காவின் கத்தி திரைப்படம்:

லைக்காவின் கத்தி திரைப்படம்:

இந்தியாவில் விஜய் நடிப்பில் வந்த கத்தி திரைப்படம் உருவானது. படம் வெளியே வந்த போது, இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த திரைப்படத்திற்கு எதிர்பால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அப்போது, சுபாஷ்கரன் அல்லி ராஜா, என்னுடைய ஆசைக்காகத்தான் திரைப்படம் எடுக்கின்றேன் என்றார். இது என்னுடைய இரண்டு நாள் வருமானம் தான் என்றார் லைக்கா நிறுவனர்.

பிரபாகரனால் வளர்ச்சி:

பிரபாகரனால் வளர்ச்சி:

புலிகளின் தலைவர் பிரபாகரன் உதவியால் தான் சுபாஷ்கரன் அல்லிராஜா வளர்ச்சியடைந்ததாக கூறப்படுகின்றது. அவருடைய பணத்தால் தான் தொழிலையும் விரிவு செய்தாகவும், இது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் தெரிந்தாக கூறப்படுகின்றது.

ராஜபக்ஷேவுடன் பணப்பரிவர்த்தனை:

ராஜபக்ஷேவுடன் பணப்பரிவர்த்தனை:

இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்ஷேவுடன் இன்று வரை பணப்பரிவர்த்தையில் உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. கத்தி படத்தின் போது, சீமான் கடுமையான போராட்டங்களை முன்வைத்தார். லைக்கா நிறுவனம் அதற்கு பிறகு வெளியான படங்களுக்கு சீமான் எதிர்ப்பு தெரிவிக்காதது பெரும் மர்மாக இருக்கின்றது என்று பிரபல முகநூல் பதிவாளர் சிகோஷ்கே சாமி என்பவர் கூறியதாக கூறப்படுகின்றது.

முதலில் தமிழ்ராக்கர்ஸ் நடத்தினர்:

முதலில் தமிழ்ராக்கர்ஸ் நடத்தினர்:

முதலிலில் தமிழ்ராக்கர்ஸ்சை முதலில் லைக்கா நிறுவனம் தான் நடத்தி வந்தது என்று துப்பறியும் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். அரசு வளர்ச்சியில் தொழிலில் சென்று கொண்டிருக்கும் நிறுவனம் லைக்கா. லைக்கா மீது ஐரோபாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன.

வரி செலுத்துவதில் எஸ்கேப்:

வரி செலுத்துவதில் எஸ்கேப்:

பிரான்ஸ் நாட்டில் வரி விலக்கு உள்ளதால், வரி விலக்கு உள்ள நாடுகளிலும் தனது கிளை நிறுவனத்தை துவங்கி பணத்தை கைமாறி தொழில் லாபகரமாக இயங்கி வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பஸ் பீல்டு என்ற பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

 லைக்கா புரெக்டெஷன் வரக்காரணம்:

லைக்கா புரெக்டெஷன் வரக்காரணம்:

ரூ.253 கோடி இலங்கிலாந்தில் வரி செலுத்துவதில் ஏய்த்துள்ளதாகவும் இந்த பத்திரிக்கை கூறியுள்ளது. அந்த பணத்தை லைக்கா புராடெக்ஷனில் போட்டு கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதாகவும் கூறப்படுகின்றது. லைக்காவால் தமிழ் திரை உலகம் வளர்ச்சி பெறும் என்று நம்படுகின்றது.

Best Mobiles in India

English summary
facts about the lyca company that produced the film : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X