என்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா? ஆனால் கதையே வேறு.!
தற்சமயம் சுந்தர் பிச்சையும் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக இருப்பதால் அவர் ஓட்டுபோட தமிழகம் வந்துள்ளதாக புகைப்படங்களை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகள், 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்து ஆர்வமுடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். அரசியல்
தலைவர்கள்இ திரை உலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

ஒருவிரல் புரட்சி
இந்நிலையில் விஜய் நின்று வாக்குப்பதிவு செய்த புகைப்படங்களை ஒருவிரல் புரட்சி என்ற ஹேஷ்டேக் உடன் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்களத்ததாகவும் அவர்களில் பலர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

கதை
சர்க்கார் படத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் சி.இ.ஒ வாக இருக்கும் விஜய், ஓட்டு போடுவதற்காக தமிழகம் வந்திருப்பார்,
அப்போது அவரின் ஓட்டை வேற ஒருவர் போட்டுவிட அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை ஆகும்.

கூகுள்
தற்சமயம் சுந்தர் பிச்சையும் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக இருப்பதால் அவர் ஓட்டுபோட தமிழகம் வந்துள்ளதாக புகைப்படங்களை பலர் பகிர்ந்து வருகின்றனர்.ஆனால் அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பதே உண்மை
கரக்பூர் ஐஐடிக்கு வந்த போது எடுத்த படம்
இணையத்தில் வைரலாகும் புகைப்படம் அவர் கடந்த 2017-ம் ஆண்டு கரக்பூர் ஐஐடிக்கு வந்த போது எடுத்த படம். தான் படித்த ஐஐடிக்கு அவர் வந்திருந்தபோது அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. தனது டிவிட்டரில் அவரே
அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் குடியுரிமை
குறிப்பாக அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ள சுந்தர் பிச்சைக்கு, இந்தியாவில் ஒட்டே கிடையாது என்பது தான் மிகவும் உண்மை.


Click it and Unblock the Notifications