மாணவர்களுக்கு 10ஜிபி இலவச டேட்டா.! ஆனால் கதையே வேறு.!

|

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியாவில் பரவியதிலிருந்தே சில தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளால் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன என்றுதான் கூறவேண்டும். சிலரின் போலி தகவல்கள் மற்றவர்களுக்கு ஏமாற்றம் கொடுக்கிறது, சில நேரங்களில் அது ஆபத்தை கூட கொண்டுவருகிறது.

மாணவர்களுக்கு 10ஜிபி இலவச டேட்டா.! ஆனால் கதையே வேறு.!

தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்காக இலவச இணையத்தை வழங்குவதாக கூறும் ஒரு இடுகை வாட்ஸ்அப்-ல் மிகவும் வைரலாகியுள்ளது.

அதிகமாக பகிரப்படும் அந்த பதிவின் படி, தொற்றுநோய்களுக்கு மத்தியில் மாணவர்கள் பரீட்சைக்கு வர உதவும் வகையில் நாட்டின் ஒவ்வொரு மாணவருக்கும் 10ஜிபி இணைய தரவை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மாணவர்களுக்கு 10ஜிபி இலவச டேட்டா.! ஆனால் கதையே வேறு.!

பின்பு அந்த இடுகை கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச இணையத்தை (ஒரு நாளைக்கு 10GB) வழங்குகிறது.
இதன்மூலம் மாணவர்கள் தங்கள் கல்வியை எந்த தடையின்றி கற்க முடியம், மேலும் இணையம் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் (sic) உதவியுடன் தேர்வுகளையும் வழங்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களுக்கு 10ஜிபி இலவச டேட்டா.! ஆனால் கதையே வேறு.!

ஆனால் உண்மை என்னவென்றால், அரசாங்கம் அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை மற்றும் இந்த செய்தி முற்றிலும் போலியானது. பின்பு PIB ஒரு ட்வீட்டில் எழுதியது என்னவென்றால், கொரோனா தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஆன்லைன்
தேர்வுகளை வழங்கவும், கல்வியை முடிக்கவும் அனைத்து மாணவர்களுக்கும் அரசாங்கம் இலவச இணையத்தை வழங்குவதாக வாட்ஸ்அப் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த உரிமைகோரல் போலி,அத்தகைய எந்த முடிவும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை" என தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் இணையதளத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை கட்டுப்படுத்த PIB இன் உண்மைச் சரிபார்ப்பு தளம் 2019 டிசம்பரில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முக்கிய நோக்கம் பல சமூக ஊடக தளங்களில் பரவி வரும்
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் கண்டு கூறுவது தான்.

Best Mobiles in India

English summary
Fact check: Government providing 10GB data per day to all students?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X