எச்சரிக்கை.! காண்டாக்ட்லெஸ் டெபிட் & கிரெடிட் கார்டு பாதுகாப்பானது இல்லை.! பதறவைக்கும் வீடியோ.!
அண்மையில் வெளியிடப்பட்ட காண்டாக்ட்லெஸ் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பற்றிய ஒரு பேஸ்புக் பதிவு, சமூகவலைத்தளங்களில் பெரும் அளவில் வைரல் ஆகி வருகிறது.
அண்மையில் வெளியிடப்பட்ட காண்டாக்ட்லெஸ் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பற்றிய ஒரு பேஸ்புக் பதிவு, சமூகவலைத்தளங்களில் பெரும் அளவில் வைரல் ஆகி வருகிறது.
எஸ்.பி.ஐ வங்கி, எச்.டி.எப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள காண்டாக்ட்லெஸ் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பானது இல்லை என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம் கார்டில் வைப்பைக் குறியீடு
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏ.டி.எம் கார்டில் வைப்பைக் குறியீடு இருந்தால், அவை காண்டாக்ட்லெஸ் கார்டு என்று அர்த்தம். இவ்வகை காண்டாக்ட்லெஸ் கார்டுகளை பின் நம்பர் மற்றும் ஓ.டி.பி நம்பர் எதுவும் இன்றி எளிதாய் பயன்படுத்தி பணத்தைத் திருட முடியுமென்று அந்த பேஸ்புக் பதிவில் பகிரப்பட்டிருந்தது.

மக்கள் ஏமாறவேண்டாம்
இந்த வீடியோவை கண்டு மக்கள் பீதியில் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த வீடியோ பதிவை எதிர்த்து வங்கிகள் மறுப்பு தெரிவித்துள்ளது மற்றும் மக்கள் இந்தப் போலி செய்தியைக் கண்டு ஏமாறவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. காண்டாக்ட்லெஸ் கார்டுகளில் ஆன்டெனா கொண்ட சிப்செட் உள்ளத்தால் அணைத்து பரிவர்த்தனையும் பாதுகாப்பானது என்று வங்கிகள் தெரிவித்துள்ளது.

குறைந்தது 4 சென்டி மீட்டர் தூரம்
காண்டாக்ட்லெஸ் கார்டுகள் என்.எப்.சி சிப் உதவியுடன் செயல்படுவதாகவும், பிஓஎஸ்(PoS) கருவியுடன் குறைந்தது 4 சென்டி மீட்டர் தூரத்தில் மட்டுமே இயங்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியாக ரூ.2000 வரை மட்டுமே பின் நம்பர் இல்லாமல் காண்டாக்ட்லெஸ் கார்டு பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்ய முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு ரீடர்
வங்கியில் பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு மட்டுமே டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ரீடர் அல்லது பிஓஎஸ் இயந்திரம் வழங்கப்படும். வங்கியின் நேரடி நேர்காணலுக்கு பிறகே இந்த இயந்திரங்கள் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே போலி இயந்திரங்கள் கொண்டு பணத்தைத் திருட வாய்ப்பில்லை என்றும் வங்கிகள் தெரிவித்துள்ளது.

பின் நம்பர்
ரூ.2000 மேல் செய்யப்படும் காண்டாக்ட்லெஸ் கார்டு பரிவர்த்தனைக்கு கண்டிப்பாகப் பின் நம்பர் அவசியம் என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கார்டுகளை பிஓஎஸ் கருவிகள் அருகில் பயன்படுத்தி உங்களின் பரிவர்த்தனைக்கு பணம் செலுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








