நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறீர்களா? பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் உடனே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

|

இந்திய நாட்டில் COVID-19 வழக்குகள் மிகவும் உச்சத்தில் உள்ளது. அதேபோல், ஓமிக்ரான் மாறுபாடு வழக்குகளும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக இந்த தொற்றுநோயால் மக்கள் நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளனர். இந்த கடினமான நேரத்தில், பொது மக்களின், குறிப்பாக பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

PF கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை உடனடியாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு

PF கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை உடனடியாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு

EPFO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இப்போது EPFO ​​உறுப்பினர்கள் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் தங்கள் PF கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை உடனடியாக எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் கூறியுள்ளது. இந்த தொகை யாருக்கெல்லாம் பயன்படுத்தக் கிடைக்கும். இந்த தொகையை பெறுவதற்கு EPFO பயனர்கள் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது போன்ற தெளிவான விபரங்களைப் பார்க்கலாம்.

இந்த 1 லட்சம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன சூழ்நிலையில் கிடைக்கும்?

இந்த 1 லட்சம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன சூழ்நிலையில் கிடைக்கும்?

சரி, முதலில் இந்த 1 லட்சம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும், என்ன சூழ்நிலையில் கிடைக்கும் என்று பார்க்கலாம். முதலில் இந்த தொகையைப் பெற ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று முன்பே கூறியிருந்தோம். உங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள, உங்களுடைய EPFO கணக்கில் இருந்து 1 லட்ச ரூபாயை எடுக்க நீங்கள் குறிப்பிட்ட EPFO பயனராக இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவ முன்கூட்டிய கோரிக்கையின் கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு EPFO ​​இந்த வசதியை இப்போது பயன்படுத்த அனுமதிக்கிறது.

உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..

இந்த தொகையை பெறுவதற்கு என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது?

இந்த தொகையை பெறுவதற்கு என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது?

உறுப்பினர்களுக்கு மருத்துவ தேவைகளுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால் அவர்களின் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் எடுக்கலாம் என்று EPFO சமீபத்திய அறிவிப்பில் ​​தெரிவித்துள்ளது. சரி, இப்போது இந்த தொகையை பெறுவதற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்ன நிபந்தனைகளை விதித்துள்ளது என்று பார்க்கலாம். இத்துடன் நீங்கள் இந்த தொகையை எந்தவித ஆவணமும் சமர்ப்பிக்காமல் எப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம். பதிவின் இறுதியில் உங்கள் EPFO கணக்கில் உள்ள இருப்பு தொகையை எப்படி ஆன்லைனில் சரி பார்ப்பது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

EPFO இலிருந்து ரூ.1 லட்சத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகள் இது தானா?

EPFO இலிருந்து ரூ.1 லட்சத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகள் இது தானா?

  • மருத்துவ முன்பணம் கோரும் ஊழியரின் நோயாளி அரசு / பொதுத்துறை பிரிவு / CGHS குழு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • அவசரக்காலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
  • அதன் பிறகுதான் மருத்துவக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை நிரப்ப முடியும்.
  • பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயிலில் பயணம் செய்ய முடியுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயிலில் பயணம் செய்ய முடியுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..

    1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே முன்பணமாக எடுக்க முடியமா?

    1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே முன்பணமாக எடுக்க முடியமா?

    • இந்த வசதியின் கீழ், 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே முன்பணமாக எடுக்க முடியும்.
    • நீங்கள் ஒரு வேலை நாளில் விண்ணப்பித்திருந்தால், அடுத்த நாளே உங்கள் கணக்கில் பணம் மாற்றப்படும்.
    • இந்தப் பணத்தை பணியாளரின் கணக்கிலோ அல்லது நேரடியாக மருத்துவமனைக்கும் கூட நீங்கள் மாற்றலாம்.
    • EPFO இலிருந்து 1 லட்சத்தை எடுப்பது எப்படி?

      EPFO இலிருந்து 1 லட்சத்தை எடுப்பது எப்படி?

      • முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான EPFO ​​(www.epfindia.gov.in) வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
      • இப்போது 'ஆன்லைன் சேவைகள் (Online Services)' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
      • பின்னர் நீங்கள் 31, 19, 10C மற்றும் 10D படிவங்களை நிரப்ப வேண்டும்.
      • சரிபார்க்க உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிடவும்.
      • BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..

        ஆன்லைன் உள்ள உரிமைகோரலுக்குச் செல்லவும்

        ஆன்லைன் உள்ள உரிமைகோரலுக்குச் செல்லவும்

        • 'ஆன்லைன் உரிமைகோரலுக்குச் செல்லவும் (Proceed For Online Claim)' என்பதைக் கிளிக் செய்யவும்.
        • கீழ்தோன்றும் மெனுவிலிருந்து படிவம் 31ஐத் தேர்ந்தெடுக்கவும்.
        • இப்போது பணத்தை எடுக்கக் காரணம் மற்றும் தொகையை உள்ளிடவும்.
        • மருத்துவமனை பில் நகலைப் பதிவேற்றவும்.
        • உங்கள் முகவரியை உள்ளிட்டு 'சமர்ப்பி (Submit)' என்பதைக் கிளிக் செய்யவும்.
        • பிஎப் இருப்புத் தொகையை ஆன்லைனில் எப்படி எளிமையாக சரிபார்ப்பது?

          பிஎப் இருப்புத் தொகையை ஆன்லைனில் எப்படி எளிமையாக சரிபார்ப்பது?

          அனைத்து அலுவலகத்திலும் பிஎப் இருப்புத்தொகைப் பிடிக்கப்படுகிறது. இவை ஒவ்வொரு சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் அலுவலகம் உங்கள் நலத்திட்டத்திற்காக ஒதிக்கிவைக்கும். வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது. பிஎப் பொருத்தமட்டில் உங்கள் இருப்புத்தொகையை ஆன்லைனில் மிக எளிமையாக செக் செய்யமுடியும்.

          நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வேகமாக தான் இருக்கிறதா? எப்படி அதை கண்டறிவது? ஈஸி டிப்ஸ்..நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வேகமாக தான் இருக்கிறதா? எப்படி அதை கண்டறிவது? ஈஸி டிப்ஸ்..

          பிஎப் கணக்கில் எவ்வளவு சேமிப்பு இருப்புத்தொகை இருக்கிறது?

          பிஎப் கணக்கில் எவ்வளவு சேமிப்பு இருப்புத்தொகை இருக்கிறது?

          மேலும் உங்கள் பிஎப் கணக்கில் குறிப்பாக எவ்வளவு சேமிப்பு இருப்புத்தொகை இருக்கிறது போன்றவற்றை எளிமையாக ஆன்லைனில் தற்போது எளிமையாக அறியமுடியும். முதலில் பிஎப் கணக்கு எண் சரியாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் பிஎப் கணக்கைப் பற்றிய தகவலைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான தகவல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

          ஆன்லைனில் பிஎஃப் விபரங்களை தெரிந்துகொள்ள இதை செய்யுங்கள்

          ஆன்லைனில் பிஎஃப் விபரங்களை தெரிந்துகொள்ள இதை செய்யுங்கள்

          • ஆன்லைன் சென்று http://www.epfindia.com ​இந்த வலைப்பக்கத்தின் கீழ் நுழையவேண்டும். உங்கள் பிஎப் கணக்கு பராமரிக்கப்படும் மாநில அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
          • மாநிலத்தைத் தேர்ந்தெடுத்தவுடன், அந்த மாநிலத்துடன் தொடர்புடைய நகர அலுவலகங்களின் பட்டியல் கீழே பட்டியலிடப்படும்.
          • பட்டியலில் இருந்து உங்கள் நகரக் குறிப்பிட்ட பிஎப் அலுவலகம் தேர்வு செய்யவேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் மாநில அலுவலகம் கர்நாடகா மற்றும் உள்ளூர் அலுவலகம் பெங்களூரில் இருந்தால், பெங்களூரை நகரமாகத் தேர்வு செய்யவேண்டும்.
          • 9 முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்.. சென்னையில் கூட புல்லட் ரயில் சேவையா?9 முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்.. சென்னையில் கூட புல்லட் ரயில் சேவையா?

            பிஎப் கணக்கு எண், பெயர்,மொபைல் எண் அவசியமா?

            பிஎப் கணக்கு எண், பெயர்,மொபைல் எண் அவசியமா?

            • தேர்வுசெய்தபின் அவற்றில் பிஎப் கணக்கு எண், பெயர்,மொபைல்எண் அதில் கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் விண்ணப்பங்களில் பூர்த்திசெய்யவேண்டும்.
            • அனைத்து தகவல்களையும் சமர்ப்பித்தபின் உங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் மொபைல் எண் மூலம் அனைத்து தகவல்களையும் அறியமுடியும்.
            • யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) என்றால் என்ன?

              யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) என்றால் என்ன?

              யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN ) ஊழியர் சேமலாப நிதி அமைப்பினால் 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. யுஏஎன் (UAN)இணையதளத்தில் உங்கள் பிஎப் எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்து யுஏஎன் எண்ணை உருவாக்க வேண்டும். பின்னர் அதைப் பயன்படுத்தி உள்நுழைந்து சந்தாதார்கள் பிஎப் பங்களிப்பு மற்றும் நடப்பு இருப்புத் தொகை போன்றவற்றைக் காணலாம். இந்த வழிமுறையைப் பின்பற்றி உங்களின் இருப்புத் தொகையைச் சரி பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Facing Financial Crisis Due To Omicron Dont Worry You Can Withdraw Rs 1 Lakh From PF Account Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X