Home
News

பேஸ்புக் அறிமுகப்படுததும் டேட்டிங் சேவை.!

சிறிய காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக் கூடிய உறவுகளை தேர்ந்தெடுப்பதற்கான சேவையை பேஸ்புக் டேட்டிங் சேவை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார் மார்க்.

By Prakash S

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து அதன் சேவையில் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி முதன்முறையாக பேஸ்புக்கில் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தபோவதாக அதன் நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் அறிமுகப்படுததும் டேட்டிங் சேவை.!

மேலும் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் அவர் இந்த தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, அதன்பின்பு மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தது என்னவென்றால், சிறிய காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக் கூடிய உறவுகளை தேர்ந்தெடுப்பதற்கான சேவையை பேஸ்புக் டேட்டிங் சேவை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜுக்கர்பெர்க் தெரிவித்தது என்னவென்றால் தனிநபர் விவரங்களை பாதுகாப்பது முக்கியமாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் முடிந்தவரை அதிக நேரத்தை செலவழிப்பதற்கான ஒரு பரந்த முயற்சியில் ஒரு பகுதிதான் இந்த டேட்டிங் சேவை . ஒரே இடத்தில் அதன் அனைத்து சேவைகளை வழங்குவதன் மூலம், பேஸ்புக் நிறுவனம் மக்களின் வாழ்வில் இன்னும் தவிர்க்க முடியாததாகிறது.

பேஸ்புக் அறிமுகப்படுததும் டேட்டிங் சேவை.!

மேலும் பேஸ்புக் மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் பொறுத்தவரை மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இப்போது பேஸ்புக் மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் 'ஸ்லீப் மோட்" எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது பெற்றோருக்கு கூடுதல் கண்ட்ரோல் தரும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ஸ்லீப் மோட் சிறப்பம்சம் என்னவென்றால் குழந்தை பயன்படுத்தும் சாதனத்தில் ஆஃப்டைம்களை குறிக்க முடியும், மேலம் இவ்வாறு செய்ததும் ஆப் ஸ்லீப் மோடிற்கு சென்று விடும் எனத் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெசன்ஜர் கிட்ஸ் செயலியை குறிப்பிட்ட நேரம் வரை இயக்க முடியாத படி செய்யும் வசதியை வழங்க பெற்றோர்கள் கேட்டிருந்தனர், குறிப்பாக உணவு, வீட்டுப்பாடம், உறக்கம் போன்றவைக்கு செலவழிக்க செய்ய வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எனவே பெற்றோர் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அம்சத்தை வழங்கி இருக்கிறோம் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் அறிமுகப்படுததும் டேட்டிங் சேவை.!

இந்த ஸ்லீப் மோடில் இருக்கும் போது சிறுவர்கள் குறுந்தகவல்களை அனுப்பவோ, பெறவோ, வீடீயோ கால், கேமரா மற்றும் நோட்டிஃபிகேஷன் போன்ற எதையும் பார்க்க முடியாது. மேலும் செயலியை திறக்க முயன்றால், செயலி ஸ்லீப் மோடில் இருக்கிறது, பின்னர் முயற்ச்சிக்கவும் என்ற தகவலை காண்பிக்கும் வகையில் உள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வரும் பேஸ்புக் செயலி மூலம் எளிமையாக ரீசார்ஜ் செய்ய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Facebooks upcoming dating service will be a heartbreaker; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X