Home
News

மூடிய கண்ணை திறக்கும் அம்சத்தை அறிமுகம் செய்தது பேஸ்புக்.!

இந்த புதிய வசதி மக்களிடம் பல்வேறு வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பல்வேறு ஆராய்சிகள் மேற்கொண்டு வருகிறது பேஸ்புக் நிறுவனம்.

By Prakash S

பேஸ்புக் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பேஸ்புக் பகுதியில் சேர்க்கும் வண்ணம் உள்ளது, அதன்படி பேஸ்புக் தற்சமயம் அறிமுகம் செய்தது என்னவென்றால் ஒரு புகைப்படத்தில் இருப்பவரின் கண்கள் மூடியபடி இருந்தால் அவற்றை திறந்திருப்பது போல மாற்றும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

மூடிய கண்ணை திறக்கும் அம்சத்தை அறிமுகம் செய்தது பேஸ்புக்.!

இந்த புதிய வசதி மக்களிடம் பல்வேறு வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பல்வேறு ஆராய்சிகள் மேற்கொண்டு வருகிறது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக்

பேஸ்புக்

குறிப்பாக கண்கள் மூடிய நிலையில் இருக்கும் ஒருவரின் புகைப்படத்தில், அந்த நபரின் சரியான கண்கள் திறந்திருப்பது போல் மாற்றும்
திறன் படைத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேஸ்புக் நிறுவனத்தின் ஆராய்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

மேலும் புதிய அம்சத்தில் Intelligent In-painting என்கிற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, பின்பு இதனை அடோப் நிறுவனம் தனது அப்ளிகேஷனில் புகுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Intelligent In-painting முறையில் செயல்பட்டு, புகைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறையை சரிசெய்யும். அந்தப் புகைப்படத்திலேயே உள்ள மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து, ஊகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மாற்றத்தைச் செய்யும்.

மெமரீஸ்

மெமரீஸ்

பேஸ்புக் பயனர்கள் கடந்த காலத்தில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட நிலைத்தகவல்(Status) மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கும் வண்ணம், தனி பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிர்வாகம். ஓர் ஆண்டு/முந்தைய ஆண்டுகளில் அதே நாளில் நண்பர்களுடன் பகிர்ந்த பதிவுகளை பார்க்கும் பேஸ்புக்கின் "On this day" வசதியின் நீட்டிப்பாக "மெமரீஸ்" என்ற இந்த பகுதி கருதப்படுகிறது.

புதிய வசதி

புதிய வசதி

"Recap of Memories" எனும் புதிய வசதி மூலம், மாதாந்திர மற்றும் கடந்த ஆண்டுகளில் ஒரு சீசனில் நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை காணொளி (வீடியோ) பதிவாக தருகிறது. "Memories you have missed" என்ற அம்சத்தின் மூலம், கடந்த சில வாரங்களில் நீங்கள் தவறவிட்ட சில பதிவுகள் காண்பிக்கப்படும்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

Friends Made On This Day ஏற்கனவே வழங்கப்படும் வசதியான "On This Day" யை தொடரவுள்ள பேஸ்புக், எப்போதும் போல கடந்த காலத்தில் அதே நாளில் பகிர்ந்த மற்றும் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் காண்பிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் நண்பர்களானவர்களின் பட்டியலை காணொளி அல்லது புகைப்படத் தொகுப்பாக, "Friends Made On This Day" என்ற வசதி மூலம் தெரியப்படுத்துகிறது இந்த சமூக வலைதளம்.

Best Mobiles in India

English summary
Facebooks new AI research is a real eye opener: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X