அனைத்து விளம்பரங்களையும் வெளிப்படையாக்கும் பேஸ்புக்.!

வெளிநாட்டில் உள்ள பயனர்களுக்கான தரப்பட்டுள்ள விளம்பரங்களின் பட்டியலையும் பயனர்கள் அதில் காணமுடியும்.

|

சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் தங்களது இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் காண்பிக்கப்படும் விளம்பரங்களைப் பற்றி முழு விவரங்ஙளையும் பயனர்கள் அறிந்துகொள்ளும்படி சில புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.அரசியல் தொடர்பான விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் எப்படி விளம்பரங்கள் செயல்படுகின்றன என்பதை பயனர்கள் தெரிந்துகொள்ள வைக்கும் பேஸ்புக் நிறுவன முயற்சியின் நீட்சியாக இது பார்க்கப்படுகிறது.

அனைத்து விளம்பரங்களையும் வெளிப்படையாக்கும் பேஸ்புக்.!

பேஸ்புக் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ள நிலையில், முதல் மாற்றமானது பயனர்கள் தாங்கள் பார்க்கும் அனைத்து விளம்பரங்களும் எந்த தளம் அல்லது அரசியல் கட்சி அல்லது முகநூல் பக்கத்தால் விளம்பரப்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கமுடியும். இந்த விளம்பரங்கள் பேஸ்புக் தளத்தில் மட்டுமில்லாமல், அநநிறுவனத்தின் மற்ற தளங்களான மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர கூட்டு நிறுவனங்களின் தளங்களிலும் காண்பிக்கப்படும்.

அனைத்து விளம்பரங்களையும் வெளிப்படையாக்கும் பேஸ்புக்.!

பயனர்களால் பார்க்கமுடியாத விளம்பரங்களுக்கும் இது பொருந்தும் மற்றும் குறிப்பாக 'பக்க தகவல் மற்றும் விளம்பரம்'(Page Info and Ads) பகுதியில் பார்க்கும் விளம்பரங்களுக்கும் பொருந்தும். ஒரு குறிப்பிட்ட தரப்பால் தரப்பட்ட செயல்பாட்டில் உள்ள விளம்பரங்களை பார்க்க வேண்டுமெனில், பயனர்கள் அந்த பக்கத்திற்கு சென்று 'தகவல் மற்றும் விளம்பரம்'('Info and Ads) என்பதை தேர்வு செய்து அதில் 'செயல்பாட்டிலுள்ள விளம்பரம்'(Active ad's) என்பதை கிளிக் செய்து விளம்பரங்களின் முழு பட்டியலையும் காண முடியும்.
அனைத்து விளம்பரங்களையும் வெளிப்படையாக்கும் பேஸ்புக்.!

வெளிநாட்டில் உள்ள பயனர்களுக்கான தரப்பட்டுள்ள விளம்பரங்களின் பட்டியலையும் பயனர்கள் அதில் காணமுடியும். அதுமட்டுமின்றி ஏதாவது விளம்பரம் தவறான தகவல்களை தந்து பேஸ்புக் விதிமுறைகளை மீறுகிறது என்றால் பயனர்கள் அதுபற்றி புகார் செய்ய முடியும்.

பேஸ்புக் நிறுவனத்தின் சி.ஓ.ஓ செரில் சேன்பெர்க் கூறுகையில், 'இந்த மாற்றங்கள் எங்களை பொறுப்புணர்வுடன் இருக்கச்செய்யும், விளம்பரதார்ர்களை பொறுப்புணர்வுடன் இருக்கச்செய்யும். ஆனால் இதன் மூலம் பயனர்கள் பேஸ்புக்கில் இருக்கக்கூடாத மற்றும் தவறுக்கு வழிவகுக்கும் விளம்பரங்களை கண்டறிய வழிவகுக்கும். அதன் மூலம் எங்களால் நடவடிக்கை எடுக்கமுடியும்' என்கிறார்.

அனைத்து விளம்பரங்களையும் வெளிப்படையாக்கும் பேஸ்புக்.!

மேலே கூறிய வசதிகளுடன் சேர்த்து, தற்போது பயனர்கள் ஒரு முகநூல் பக்கத்தைப் பற்றிய முழு விவரங்களையும் தெரித்துகொள்ள முடியும். ஒரு முகநூல் பக்கம் பொருட்கள் அல்லது அரசியல் விளம்பரங்களை வெளியிடவில்லை எனினும், அப்பக்கம் உருவாக்கப்பட்ட நாள், பெயர் மாற்றம் செய்த நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பயனர்களால் பார்க்க முடியும். பக்கங்களைப் பற்றிய இன்னும் கூடுதல் தகவல்களை பார்க்கும் வசதி பயனர்களுக்கு வரும் வாரங்களில் தரப்படும் என பேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ பதிவு தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook will allow users to view all ad campaigns being run by any page or business: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X