யாரும் கவலை பட வேணாம்., நாங்க இருக்கோம்- மீண்டு வந்த பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா!

|

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய பயன்பாடுகள் சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பவை ஆகும். இந்த செயலிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூன்று செயலிகளும் நேற்று இரவு 9:30 மணியளவில் இருந்த அடுத்த சில மணி நேரங்களுக்கு உலகம் முழுவதும் செயலிழந்த நிலையில் இருந்தது. இது இதுவரை கண்டிராத மிகப் பெரிய தோல்வி என வலைதள கண்காணிப்பு குழு தெரிவித்தது.

முறையற்ற பேச்சு மற்றும் தவறான தகவல்

முறையற்ற பேச்சு மற்றும் தவறான தகவல்

முறையற்ற பேச்சு மற்றும் தவறான தகவலை கட்டுப்படுத்துவதை விட நிறுவனம் லாப நோக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக விசில்ப்ளோவர் குற்றச்சாட்டு முன்வைத்தது. இதுகுறித்து பேஸ்புக் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷ்ரோபர் டுவிட் செய்தார். இதில் எங்களை நம்பியிருக்கும் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய வணிகம், குடும்பம் மற்றும் தனிநபரும் மன்னிக்குவும் என்றும் 100%-ஐ அடைய சிறிது நேரம் ஆகலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய வீழ்ச்சி

மிகப்பெரிய வீழ்ச்சி

சுமார் 2 பில்லியன் தினசரி பயனர்களை கொண்ட பேஸ்புக்கின் பங்குகள் 4.9% சரிந்தன. நவம்பர் மாதத்துக்கு பிறகு இது மிகப்பெரிய வீழ்ச்சியாக இருக்கிறது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பேஸ்புக் விளிக்கம் அளித்துள்ளது. அதில் இந்த தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தது. சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு இந்த சிக்கல் சரி செய்யப்பட்டது. காலை 4 மணி அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வந்தது.

பயனர்களிடம் மன்னிப்பு கோரிய பேஸ்புக்

ஏற்பட்ட இடையூறுக்கு உலகம் முழுவதும் உள்ள பயனர்களிடம் மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டது. அதேபோல் தேவைகளை முழு அளவில் வழங்க கடுமையாக வேலை செய்து வருவதாகவும், முழு அளவிலான சேவை மீண்டும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தது. இதேபோல் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமும் தங்களது பயனர்களிடம் வருத்தம் தெரிவித்தன. பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் முடங்கியதற்கான காரணம் குறித்து முழுமையான தகவல் இல்லை.

பயனர் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு

பயனர் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு

சமீபத்தில் சமூகவலைதளமான பேஸ்புக் இந்தியாவின் பொது கொள்கை இயக்குனராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அகர்வால் நியமிக்கப்படுவதாக அறிவித்தது. இதுகுறித்து பேஸ்புக் அறிக்கையில் பயனர் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உள்ளிட்ட இந்திய பேஸ்புக்கிற்கான முக்கிய கொள்கை மேம்பாட்டு முயற்சிகளை பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகர்வால் 26 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாகவும், உத்தரபிரதேசம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியுள்ளார் என பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

டேட்டா பாதுகாப்பு, தனிநபர் உரிமம்

டேட்டா பாதுகாப்பு, தனிநபர் உரிமம்

பேஸ்புக் நிறுவனம் தனது பேஸ்புக் இந்தியா பொதுக்கொள்கை இயக்குனராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் அகர்வாலை நியமித்துள்ளது. பேஸ்புக் பயனர்களின் பாதுகாப்பு, டேட்டா பாதுகாப்பு, தனிநபர் உரிமை மற்றும் இன்டர்நெட் நிர்வாகம் குறித்த கொள்கைகளை அவர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 26 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய போது அறிவுசார் சொத்து உரிமை காப்பு குறித்து இந்தியாவின் முதலாவது தேசிய கொள்கை கொண்டு வந்திருக்கிறார்.

பாதுகாப்பான இணையத்தை உருகாக்க இயலும்

பாதுகாப்பான இணையத்தை உருகாக்க இயலும்

இந்தியாவின் கட்டமைப்பில் ஆழமாக மூழ்கியுள்ளோம் என்பதை உணர்கிறோம் எனவும் நாட்டில் உள்ள அனைவருக்கும்ம் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான இணையத்தை உருகாக்க தங்களுக்கு உதவ வாய்ப்பிருப்பதாகவும் ராஜீவ் அகர்வால் தனது அனுபவத்தின் மூலம் பேஸ்புக்கில் வெளிப்படை தன்மை, உத்தரவாதம் உள்ளிட்டவைகளை அதிகரிக்க உதவுவார் என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது கொள்கை குழு

பொது கொள்கை குழு

பொது கொள்கை குழுவை வழிநடத்த ராஜீவ் அகர்வால் தங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும், நிபுணத்துவம், அனுபவத்துடன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல், அதிகாரம் மற்றும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதற்கான தங்களது பணிக்கு மேலும் உதவுவார் எனவும் நம்புவதாக பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Facebook, WhatsApp and Instagram have resume operations after Global Outage!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X