பேஸ்புக்கில் மூழ்கிக் கிடக்கும் இளயோர் பட்டாளம்

Posted By: Karthikeyan
பேஸ்புக்கில் மூழ்கிக் கிடக்கும் இளயோர் பட்டாளம்

சமூக வலைத் தளமான பேஸ்புக்கில் உறுப்பினர்களாக இருப்பவர்களைப் பற்றி தினம் தினம் ஒரு புதிய செய்தி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பேஸ்புக்கில் உறுப்பினராக இருக்கும் 9 பேரில் ஒருவர் தினமும் 8 மணி நேரம் பேஸ்புக்கில் செலவழிப்பதாக இங்கிலாந்தில் இருந்து வரும் ஒரு ஆய்வு கூறுகிறது. மேலும் 9 பேரில் ஒருவர் தினமும் 20 முறை பேஸ்புக்கை திறப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள 18 முதல் 25 வயதிற்குட்பட்டோர் தினமும் 20 முறை பேஸ்புக்கை பார்ப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் ஏராளமாக இளைஞர்கள் இந்த பேஸ்புக்கில் அடிமையாக இருப்பதாகவும் கவலை தெரிவித்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக 38 சதவீத இளைஞர்கள் தேவையில்லாத போட்டோக்களைப் பார்ப்பதும் அவற்றை பதிவேற்றம் செய்வதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதில் உள்ள முக்கியமான தகவல் என்னவென்றால் இளம் பெண்கள்தான் பேஸ்புக்கினால் அதிகம் பாதிப்படைந்திருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

எனவே பேஸ்புக்கை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தும் போது அது இளைஞர்களுக்கு வழகாட்டும் கருவியாக இருக்கும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot