இந்தியா: ஓ.எல்.எக்ஸ் & குவிக்கர் போன்ற சேவையை துவங்கும் பேஸ்புக்.!
பேஸ்புக்கில் உள்ள மார்கெட்பிளேஸ் சேவை ஏற்கனவே அமெரிக்கா போன்ற உலகின் 25 நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது, அதன்பின்பு சமீபத்தில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற நாடுகளில் இப்போது பயன்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பேஸ்புக் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் புதிய சேவையை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. இந்த சேவை பொறுத்தவரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.எல்.எக்ஸ் மற்றும் குவிக்கர் போன்ற சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது பேஸ்புக் நிறுவனம், அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சேவையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்கெட்பிளேஸ் :
பேஸ்புக் இந்தியாவில் கொண்டுவரும் மார்கெட்பிளேஸ் என்ற அம்சம் மூலம் பயனர்கள் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய
முடியும், அதன்பின்பு விற்பனைக்கு பதிவிட்ட பொருட்களை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.எல்.எக்ஸ் மற்றும் குவிக்கர்:
இந்த மார்கெட்பிளேஸ் சேவையை தற்சமயம் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் ஓ.எல்.எக்ஸ் மற்றும் குவிக்கர்
அம்சங்களை போல் இந்த மார்கெட்பிளேஸ் சேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

25 நாடுகள்:
பேஸ்புக்கில் உள்ள மார்கெட்பிளேஸ் சேவை ஏற்கனவே அமெரிக்கா போன்ற உலகின் 25 நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது, அதன்பின்பு
சமீபத்தில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற நாடுகளில் இப்போது பயன்படுகிறது.

பழைய பொருட்கள்:
இந்தியாவில் பழைய பொருட்களை விற்பனை செய்ய ஓ.எல்.எக்ஸ் மற்றும் குவிக்கர் போன்ற தளங்களை தான் மக்கள்அதிகம் பயன்படுத்துகின்றனர், இந்நிலையில் பேஸ்புக்கில் உள்ள மார்கெட்பிளேஸ் சேவை வந்தால் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் கிரியேட்டிவ் கிட்:
தற்சமயம் பேஸ்புக் லைவ் கிரியேட்டிவ் கிட் இந்த அம்சத்துடன்இ தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் வேடிக்கையான உணர்வைக் கொண்டு நேரடி
ஒளிபரப்புகளை உருவாக்க எளிதான வகையில் பிரத்யேக கருவிகளை பயனர்கள் அணுக முடியும். கிராஃபிக் ஃப்ரேம்ஸ் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஸ்டிக்கர்கள்:
பேஸ்புக் லைவ் தவிர்த்து விடியோக்களில் பிரேம்கள், ஸ்டிக்கர்கள், துவக்கம் மற்றும் முடிவுகளில் தொகுப்பதற்கு என மேலும் பல வசதிகள் இடம்பெற்றுள்ளது


Click it and Unblock the Notifications