சீன அதிபர் பெயர் எக்குதப்பாக மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்ட பேஸ்புக்!

|

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெயரை சில பயனர்களுக்கு “மிஸ்டர் ஷிட் ஹோல்” என்று தவறாக மொழிபெயர்த்ததிற்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.


தவறான மொழிபெயர்ப்பு

தவறான மொழிபெயர்ப்பு

இந்த பிழை இதைவிட ஒரு மோசமான நேரத்தில் நிகழ்ந்திருக்க முடியாது. சீன அதிபர் பெயரின் தவறான மொழிபெயர்ப்பு மியான்மர் தலைவர் ஆங் சான் சூகியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நடந்ததுள்ளது. அந்த பதவில், சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக மியான்மருக்கு வந்தபோது சந்தித்ததை அவர் குறிப்பிட்டுள்ளார்.

பர்மிய மொழியில்

பர்மிய மொழியில்

பேஸ்புக்கின் இன்-லைன் மொழிபெயர்ப்பு அம்சத்தைப் பயன்படுத்தி வாசகர்கள், பர்மிய மொழியில் இருந்த அந்த பதிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயன்றபோது இந்த பிழை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரோவின் NavIC சேவையை ஆதரிக்கும் புதிய ஸ்மார்ட்போன் சிப்செட்கள் இவைதான்!இஸ்ரோவின் NavIC சேவையை ஆதரிக்கும் புதிய ஸ்மார்ட்போன் சிப்செட்கள் இவைதான்!

மாலை 4 மணிக்கு

"சீன அதிபர் மிஸ்டர். ஷிட்ஹோல் மாலை 4 மணிக்கு வந்தடைந்தார்." என அப்பதிவு மொழி பெயர்க்கப்பட்டது. "சீன அதிபர் மிஸ்டர். ஷிட்ஹோல் பிரதிநிதிகள் சபையில் விருந்தினர் பதிவேட்டில் கையெழுத்திட்டார்" என அது தொடர்கிறது.

இது நிச்சயம் நடந்திருக்கக்கூடாது

இது நிச்சயம் நடந்திருக்கக்கூடாது

ஃபேஸ்புக்கில் பர்மிஸ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு தவறான மொழிபெயர்ப்பை ஏற்படுத்திய தொழில்நுட்ப சிக்கலை நாங்கள் சரிசெய்தோம். இது நிச்சயம் நடந்திருக்கக்கூடாது மற்றும் அது மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த குற்றத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்" என்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வருந்தம் தெரிவித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 பேஸ்புக் இதுகுறித்து கூறுகையில்

பேஸ்புக் இதுகுறித்து கூறுகையில்

பேஸ்புக் இதுகுறித்து கூறுகையில், பேஸ்புக்கின் பர்மிய தரவுத்தளத்தில் சீன அதிபர் ஷி ஜிங்-ன் பெயர் இல்லாததால், இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பில் யூகிக்க முடியாமல் போனது. நீங்கள் "xi" அல்லது "shi" ஐ பர்மிய மொழியில் மொழிபெயர்க்க முயற்சித்தால் அது "sh * thole" என்ற வார்த்தையை உருவாக்கும் என கூறியுள்ளது.

சரியாக தெரியவில்லை

இந்த தொழில்நுட்ப பிரச்சினை பேஸ்புக்கில் எவ்வளவு நேரம் நீடித்தது என்பது யாருக்கும் சரியாக தெரியவில்லை. ஆனால் கூகுளின் மொழிபெயர்ப்பில் இந்த பிழை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 மொழிபெயர்ப்பு சீன குடிமக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

மொழிபெயர்ப்பு சீன குடிமக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் பேஸ்புக் தடைசெய்யப்பட்டுள்ளதால், அதிபர் ஜி ஜின்பிங்கின் சங்கடமான பெயர் மொழிபெயர்ப்பு சீன குடிமக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் நல்லதாகிவிட்டது . ஆனால் இது சீன நிறுவனங்கள் அதிகமுள்ள ஹாங்காங்கில் தெரிந்திருக்கும்.

Best Mobiles in India

English summary
Facebook Translates Xi Jinping To 'Mr Sh*thole', Apologizes To Chinese President For Error: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X