பேஸ்புக் லைவ் : வருகிறது புதிய கட்டுப்பாடு..! காரணம் இந்த கொடூரமான வீடியோ.!
இருந்தபோதிலும் பல தளங்களில் அந்த வீடியோ பரவியதாகவும், அதனை தடுக்க பேஸ்புக் தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பேஸ்புக் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தான் கூறவேண்டும், குறிப்பாக இந்த பேஸ்புக் தளத்தில் அதிகளவு வீடியோ லைவ் கொடுக்கப்படுகிறது, இதன் மூலம் நல்ல வருமானம் இந்நிறுவனத்திற்கு
கிடைக்கிறது.

மேலும் சமீபத்தில் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேஸ்புக் லைவ்
இந்த தாக்குதில் ஈடுபட்டவர், தாக்குதல் சம்பவத்தை தனது பேஸ்புக் லைவ் செய்தார். மசூதிக்கு காரில் வந்ததிலிருந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது வரை லைவ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..

4ஆயிரத்திற்கு மேல் அதிக மக்கள் பார்த்தனர்
அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் லைவ்வை அந்த நேரத்தில் 200பேர் மட்மே பார்த்தனர், மேலும் வீடியோ பதிவேற்றப்பட்ட 29நிமிடங்களில், 4ஆயிரத்திற்கு மேல் அதிக மக்கள் பார்த்தனர். உடனடியாக பேஸ்புக் பயனாளர் ஒருவர் அந்த
வீடியோ குறித்து ரிப்போர்ட் செய்தவுடன் வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது.

புதிய கட்டுப்பாடு
இருந்தபோதிலும் பல தளங்களில் அந்த வீடியோ பரவியதாகவும், அதனை தடுக்க பேஸ்புக் தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன, இந்நிலையில் பேஸ்புக் மூலம் லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொடூரமான படங்கள்
கொடூரமான படங்கள், வீடியோ பகிரப்படுவதை தடுக்கும் வகையில், பேஸ்புக் விதிகளை மீறியவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியை தடுப்பது உள்ளிட்ட வகையிலும் பல கட்டுப்பாடுகளை கொண்டுவர பேஸ்புக்
நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications