Home
News

அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சாதனம்.!

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதன்படி பேஸ்புக் நிறுவனம் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்ட்ரீமிங் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

போட்டியாக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சாதனம்.!

குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் Fire Stick-ஐ போலவே இந்த பேஸ்புக் ஸ்ட்ரீமிங் சாதனம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசன் Fire Stick ஆனது ஆன்லைன் உள்ளடக்கத்திற்கான அணுகலை வழங்கும் நோக்கத்தின் கீழ் டிவி உடன் இணைக்கப்படும் ஒரு சாதனமாகும்.

பேஸ்புக் நிறுவனம் கொண்டுவரும் புதிய ஸ்ட்ரீமிங் சாதனம் நிறுவனத்தின் Portal Family சாதனங்களில் ஒரு பகுதியாகும் இருக்கும் என்றும்,இதில் ஒரு கேமரா இடம்பெறும் என்றும், பின்பு TV viewing மற்றும் Augmented Reality (AR) ஆகியவைகளை இணைக்கும் வீடியோ சாட் ஆதரவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சாதனம்.!

குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் அன்மையில் நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி மற்றும் எச்பிஒ ஆகியவற்றை தங்கள் வன்பொருளின் கீழ் சேர்ப்பதற்காக அனுகியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேஸ்புக் ஸ்டீரிமிங் சாதனத்தில் ஸ்பீக்கர்,கேமரா, மைக்ரோஃபோன் என பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சாதனம்.!

குறிப்பாக பேஸ்புக் கொண்டுவரும் இந்த புதிய சாதனம் ஆண்ட்ராய்டு பதிப்பை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தற்போதுள்ள Portal தளத்தை பயன்படுத்தி வீடியோ சாட் அம்சத்தையும் இந்த சாதனத்தில் பேஸ்புக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.போர்டல் சாதனம் கடந்த நவம்பர் 2018 இல் தொடங்கப்பட்டது. 10 இன்ச் டிஸ்பிளேவை கொண்ட சிறிய சாதனத்தின் விலை 199 அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook to launch a Portal TV Device and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X