பேஸ்புக் யூசருக்கு வந்த ரூ.41 லட்சம்! உங்க அக்கவுண்ட்டில் இப்படி நடந்திருக்கா?
பேஸ்புக் (Facebook) அக்கவுண்டில் நடந்த ஒரு தவறால், அதன் யூசருக்கு ரூ.41 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல பலருக்கு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் அக்கவுண்டில் இப்படி நடந்திருக்கிறதா என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இந்த ரூ.41 லட்சத்தை அந்த யூசர் பெற்ற விவரம் இதோ.
இன்றைய காலத்தில் பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருக்கவில்லை என்றால், நம்மை வேற்றுகிரகவாசியை போல பார்க்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், அந்த அளவுக்கு மக்களிடையே பேஸ்புக் பயன்பாடு பின்னிப்பிணைந்து விட்டது. நம்மில் பலருக்கு பேஸ்புக்கில் ஸ்க்ரோல் (Scroll) செய்யவில்லை என்றால் அந்த நாளே ஓடாது, தன்னிச்சையாகவே அதை செய்துவிடுவோம்.

இதில் சிலர் நைட் டைமிங்கில் போட்டோ, வீடியோ பதிவு செய்துவிட்டு, காலையில் எழுந்த உடனேயே அதற்கு வந்த லைக், கமெண்ட், வியூஸ்களை பார்ப்பது வழக்கம். இப்படி பார்க்கும்போது, உங்களது அக்கவுண்ட் லாக் செய்யப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒருவருக்கு நடந்துள்ளது. இதனால், கடுப்பான அவர் செய்த காரியம், அவருக்கு ரூ.41 லட்சத்தை பெற்று தந்திருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த ஜெசன் கிரவ்பொர்ட் (Jason Crawford) என்பவர் கொலம்பஸ் நகரில் புகழ்பெற்ற
வழக்கறிஞராக அறியப்படுபவர். இவருக்கு சமூக ஊடகங்கள் மீது அதிக ஆர்வம் இருப்பதால், பல ஆண்டுகளாக பேஸ்புக் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சூழலில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஒரு நாள் காலையில் இவரது பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணமாக, அந்த பேஸ்புக் கணக்கில் இருந்து குழந்தைகள் தொடர்பான தவறான வீடியோக்களை பார்த்தாகவும், பகிர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெசன் கிரவ்பொர்ட், மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார். ஏனென்றால், அவர் அப்படி ஏதும் செய்யவில்லை என்பது அவரது வாதமாக இருக்கிறது. இதனால், பேஸ்புக் நிறுவனத்தை தொடர்புகொண்டு விரிவான விளக்கம் கேட்க முடிவு செய்தார்.
ஆனால், அவரால் பேஸ்புக் நிறுவனத்தை எளிதாக நெருங்க முடியவில்லை. இதனால், ஜார்ஜியா நீதிமன்றத்தில், பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளிக்கும்படி பேஸ்புக் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், பேஸ்புக் நிறுவனம் எந்த பதிலும் அளிக்காமல், தட்டி கழித்து வந்ததால், நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து மற்றொரு நேட்டீஸ் அனுப்பியது.
அதன்பின், முழுமையான விசாரணை நடத்தப்பட்டத்தில், ஜெசன் கிரவ்பொர்ட்டுக்கு எதிராக எந்த ஆதாரமும் பேஸ்புக் நிறுவனத்திடம், இல்லை. ஆகவே, முறையான காரணங்கள் இல்லாமல், பேஸ்புக் அக்கவுண்ட்டை முடக்கியதற்காகவும், அதுதொடர்பாக யூசருக்கு விளக்கம் அளிக்க தவறியதற்காகவும் 50,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.41,11,250) அபராதம் செலுத்த பேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தொகையை ஜெசன் கிரவ்பொர்ட்டுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதுபோல, முறையான விளக்கம் அளிக்கமால், பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டால், அதுதொடர்பாக யார் வேண்டுமாலும் அந்த நிறுவனத்திடம் கேள்வி எழுப்பலாம். அதேபோல வழக்கும் தொடரலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications