கொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை!

|

மக்களுக்கு பீதியை ஏற்படுத்தாமல் இருக்கவும், குறிப்பிட்ட மதத்தினரை தாக்கும் வகையில் வதந்திகள் பரப்பாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பரப்புபவர்களையும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் குறித்து தவறாக வலிநடத்தும் வகையிலான வீடியோக்களை பரப்புவர்களை கண்டறிந்து அகற்றுமாறு பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் இருந்து நீக்குமாறு அரசு வட்டாரம் வலியுறுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிஜிட்டல் அனலிட்டிக்ஸ் நிறுவனம்

டிஜிட்டல் அனலிட்டிக்ஸ் நிறுவனம்

டெல்லியை தளமாகக் கொண்டு செயல்படும் டிஜிட்டல் அனலிட்டிக்ஸ் நிறுவனமான வோயேஜர் இன்ஃபோசெக் அளித்த அறிக்கையின்படி, மத நம்பிக்கையை மையமாக வைத்து கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை பரப்புவதாகவும் குறிப்பிட சில மதத்தினரை குறி வைத்து வதந்திகள் பரப்புவதாகவும் வதந்திகள் பரப்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராய்ட்டர்ஸ் மதிப்பாய்வு செய்த ஒரு வீடியோ

ராய்ட்டர்ஸ் மதிப்பாய்வு செய்த ஒரு வீடியோ

கடந்த செவ்வாய் கிழமையன்று ராய்ட்டர்ஸ் மதிப்பாய்வு செய்த ஒரு வீடியோவில், ஒரு டிக்டோக் பயனர் கொரோனா வைரஸைப் பற்றி பயப்படவில்லை என்றும் ஏனெனில், அவர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்றும் தன் மத கடவுளுக்கு மட்டுமே பயப்படுவதாகவும் கூறுவது போன்று வெளியானது. தொடர்ச்சியாக அடுத்த வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது.

கொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா?கொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா?

டிக்டாக் மற்றும் பேஸ்புக்கிற்கு கடிதம்

டிக்டாக் மற்றும் பேஸ்புக்கிற்கு கடிதம்

இதேபோன்ற செயல் குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை டிக்டாக் மற்றும் பேஸ்புக்கிற்கு கடிதம் எழுதுமாறு கட்டாயப்படுத்தியதாக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற வன்முறை தகவல்கள் வைரலாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் பேஸ்புக் டிக்டாக்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

அரசு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பலவீனப்படுத்தும் விதமாக உள்ளது

அரசு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பலவீனப்படுத்தும் விதமாக உள்ளது

இது போன்று போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் கொரோனா பரவாமல் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அரசு நடவடிக்கைகளை பலவீனப்படுத்தும் விதமாக இருப்பதாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல்கள் மக்களிடம் தொடர்ந்து கொரோனா பீதி ஏற்பட்டு வருமாறும் தெரிவிக்கப்படுகிறது.

நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்

நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்

அதேபோல் பேஸ்புக் ராய்ட்டர்ஸிடம், தவறான தகவல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் தகவல்கள் பரப்புவர்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தது.

போலி செய்திகள் வெளியிடுவதை எச்சரிக்கும் அரசு

போலி செய்திகள் வெளியிடுவதை எச்சரிக்கும் அரசு

இந்தியாவில் 4,421 கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 115 இறப்புகளைப் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல் படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மற்றும் போலி செய்திகள் வெளியிடுவதை எச்சரிக்கும் வகையில் அரசாங்கம் பதிவு ஒன்றை வெளியிட்டது.

சமூகவலைதளங்களில் பரப்புவதை குறித்து கவலை

சமூகவலைதளங்களில் பரப்புவதை குறித்து கவலை

இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசம் மாநிலமும் கடந்த செவ்வாயன்று, போலி செய்திகள் சமூகவலைதளங்களில் பரப்புவதை குறித்து கவலைகளை தெரிவித்தது. அதன் சைபர்செல் பிரிவினர், பேஸ்புக் மற்றும் டிக்டோக் வீடியோக்கள் குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாக தெரிவித்தது.

மூத்த மாநில அதிகாரி அவனிஷ் குமார் அவஸ்தி

மூத்த மாநில அதிகாரி அவனிஷ் குமார் அவஸ்தி

அதேபோல் மூத்த மாநில அதிகாரி அவனிஷ் குமார் அவஸ்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், தாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாகவும், தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை இந்திய அரசாங்கத்திற்கும் அனுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

போலி செய்திகள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை

போலி செய்திகள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை

அதேபோல் வாட்ஸ்ஆப்-ம் போலி செய்திகள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து அறிவித்துள்ளது, லென்ஸ் ஆப்ஷன் அதாவது பூதக்கண்ணாடி என்ற புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியது.

தவறான தகவல்களை கட்டுப்படுத்த Forward செய்யும் வசதிகளை மட்டுப்படுத்தியது வாட்ஸ்ஆப்தவறான தகவல்களை கட்டுப்படுத்த Forward செய்யும் வசதிகளை மட்டுப்படுத்தியது வாட்ஸ்ஆப்

அரசு அறிவிப்புக்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தடுக்க முடியும்

அரசு அறிவிப்புக்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தடுக்க முடியும்

இருப்பினும் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தாமல் இருக்கவும், குறிப்பிட்ட மதத்தினரை தாக்கும் வகையில் வதந்திகள் பரப்பாமல் இருந்து அரசு அறிவிப்புக்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பரவாமல் தடுக்க முடியும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Source: ndtv.com

Best Mobiles in India

English summary
Facebook, TikTok should take action against corona rumours

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X