சிறிய ரக சர்ச் என்ஜின் தயாரிக்க பேஸ்புக் ஆர்வம்
பிரபல சமூக வலை தளமான பேஸ்புக் தனது மொபைல் அப்ளிகேஷனில் சிறிய சர்ச் என்ஜின் ஒன்றை பொருத்த முயற்சி செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பேஸ்புக் அப்ளிகேஷனில் இருந்த படியே மற்ற இணையங்களை பார்க்க அனுமதிக்கின்றதோடு அதனை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கின்றது.

புகைப்படம் மற்றும் வீடியோ அல்லாமல் சில ஐபோன் வாடிக்கையாளர்கள் "Add A Link" என்ற ஆப்ஷனை பார்த்ததாக கூறப்படுகின்றது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட இணையதள லின்க்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய முடியும்.
இந்த வசதியானது தற்சமயம் வரை அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தாண்டு மார்ச் 31, ஆம் தேதி வரை பேஸ்புக் மாத பயனாளிகளின் எண்ணிக்கை 1.44 பில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications