பேஸ்புக் கமெண்ட் செக்ஷனில் புதிய அம்சம் இணைப்பு; பயன்படுத்துவது எப்படி.?

முதல் விருப்பம் பேஸ்புக் ரியாக்ஷன்ஸ்-ல் உள்ள ஆங்கிரி ஸ்மைலி என்பது வெளிப்படை.!

|

பிரபல சமூக ஊடக தளமான பேஸ்புக், அதன் பிளாட்பார்மில் பதிவிடப்படும் கமெண்ட்ஸ்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் 'டவுன்வோட்' (downvote) என்கிற என்ற ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பேஸ்புக் கமெண்ட்டில் புதிய அம்சம் இணைப்பு; பயன்படுத்துவது எப்படி.?

இந்த அம்சத்தினை "டிஸ்லைக்" அல்லது "அன்லைக்" போன்றதொரு அம்சமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும் கூட, கிட்டத்தட்ட எதிர்ப்பை தெரிவிக்க உதவும் இரண்டாவது பேஸ்புக் விருப்பமாக இது காணப்படுகிறது. முதல் விருப்பம் பேஸ்புக் ரியாக்ஷன்ஸ்-ல் உள்ள ஆங்கிரி ஸ்மைலி என்பது வெளிப்படை.!

சரி

சரி "Downvote" பொத்தானைக் கிளிக் செய்தால் என்ன நடக்கும்.?

அறிமுகம் செய்யபட்டுள்ள 'டவுன்வோட்' என்கிற புதிய அம்சத்தினை, ஒரு பயனற்ற கிளிக் செய்யும் பட்சத்தில், குறிப்பிட்ட கமெண்ட் ஆனது மறைக்கடிக்கப்டும். பின்னர் இது "மனத்தை புண்படுத்துகிறது", "தவறாக வழிநடத்துகிறது" அல்லது "தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாதது" (offensive, misleading, or off topic) என்கிற மூன்று விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்கப்படும், அவ்வளவு தான்.

இதனால் என்ன பயன் .?

இதனால் என்ன பயன் .?

பேஸ்புக்கின் இந்த புதிய அம்சமானது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உறுதிப்படுத்தபட்டது, தற்போது பொது தளத்திற்கு உருட்டப்பட்டுள்ளது. பெரிய எண்ணிக்கையிலான பயனர்களை சென்றடைய உள்ள இந்த 'டவுன்வோட்' அம்சமானது, பேஸ்புக் தளத்தில் நிகழும் உரையாடல் அல்லது கருத்து பகிர்வுகளின் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"அன்லைக்" பட்டன் மீதான ஆர்வம்.!

பேஸ்புக் நிறுவனம் "லைக்" பட்டனை அறிமுகம் செய்த நாளில் இருந்து (2009) அதன் பயனர்கள் "டிஸ்லைக்" பட்டன் ஒன்றும் வேண்டும் என்கிற கோரிக்கையை விருப்பப்பட்டியலின் வழியாக தெரிவித்து வருகின்றன. பேஸ்புக்கின் "லைக்" பட்டன் ஆனது, எப்படி ஒரு பதிவு அல்லது புகைப்படம் அல்லது பிற உள்ளடக்கங்களை பதிவிடும் பயனர்களுக்கு தங்கள் ஒப்புதலை தெரிவிக்க உதவுகிறதோ, அதே போல எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் "அன்லைக்" பட்டனை அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான பயனர்களின் கோரிக்கை ஆகும்.

நியூஸ் ஃபீடில் ஸ்க்ரோலிங் செய்யும் நேரத்தில்.!

நியூஸ் ஃபீடில் ஸ்க்ரோலிங் செய்யும் நேரத்தில்.!

அதை எல்லாம் காதில் வாங்காத பேஸ்புக், தனது சமூக நெட்வொர்க்கிங்கில் பரவும் போலியான செய்திகளை அல்லது தகவல்களை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியின் கீழே டவுன்வோட் என்கிற இந்த புதிய மூலோபாயத்தை கையாள்கிறது. பேஸ்புக்கின் நியூஸ் ஃபீடில் ஸ்க்ரோலிங் செய்யும் நேரத்தில், 'டவுன்வோட்' செய்யப்படும் செய்திகள் அல்லது தகவல்களானது காணாமல் அடிக்கப்பட்டும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
பொய்யான அறிகுறிகளை கண்டறியும்.!

பொய்யான அறிகுறிகளை கண்டறியும்.!

அதை பயனர்களின் பார்வையில் இருந்து கஒளித்து வைக்கப்படும் பட்சத்தில் போலி தகவல்கள் அல்லது செய்திகள் பரவுவது தானாகவே கட்டுப்படுத்தப்படும். இதுதான் டவுன்வோட் அம்சத்தின் செயல்முறையாகும். நிறுவனத்தின் தணிக்கைக்கும், பயனர்களின் உணர்ச்சிக்கும் இடையில் சிறப்பான முறையில் இது பணியாற்றும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதற்கிடையில், பேஸ்புக் நிறுவனமானது, புதிதாக வெளியிடப்பட்ட கட்டுரைகளில் உள்ள பொய்யான அறிகுறிகளை கண்டறியும் திறனை கொண்ட இயந்திர கற்றல் (மெஷின் லேர்னிங்) செயல்முறையையும் பயன்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook Starts Rolling Out 'Downvote' Button to More Users . Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X