Facebook Smart Watch: அசத்தலான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் பேஸ்புக் ஸ்மார்ட் வாட்ச்.!
பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் புதிய வசதியை கொண்டு வந்த வண்ணம் உள்ளது பேஸ்புக் நிறுவனம். மேலும் இந்த தளங்களில் வரும் ஒவ்வொரு புதிய அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் பேஸ்புக் நிறுவனம் கடந்த பல மாதங்களாக புதிய ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் The Verge வலைத்தளத்தில் பேஸ்புக் தயாரிக்கும் ஸ்மார்ட் வாட்ச் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கும் பேஸ்புக் ஸ்மார்ட் வாட்ச்.

பேஸ்புக் ஸ்மார்ட் வாட்சில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்காக இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்பிற்கு அதிக கவனம் செலுத்திஇருப்பதாக பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் முன்புறத்தில் ஒரு கேமரா வீடியோ அழைப்புகளுக்கும் கிடைக்கும். அதேசமயம் இதன் பின்புறத்தில் 1080p கொண்ட கேமரா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க பயன்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பேஸ்புக் ஸ்மார்ட் வாட்ச் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் பேஸ்புக் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து கடிகாரத்தின் கேமரா ஹப் பகுதியுடன் இணைக்கக்கூடிய பாகங்கள் உருவாக்குவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் மாடலில் உள்ள அம்சங்களை விட சிறப்பான அம்சங்களுடன் பேஸ்புக் ஸ்மார்ட் வாட்ச் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, பேஸ்புக் ஸ்மார்ட்வாட்ச் ஆனது செல்லுலார் இணைப்பைக் கொண்டிருக்கும் என்றும், பின்பு இதை அணிந்தவர்கள் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பேஸ்புக் சேவைகளுடன் செய்திகளை அனுப்ப முடியும் என்றும் கூறப்பட்டது.

பேஸ்புக் ஸ்மார்ட் வாட்ச் மாடலில் இதய துடிப்பு மானிட்டர் போன்ற உள்ளமைக்கப்பட்ட சுகாதார கண்காணிப்பு அம்சங்கள் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர பேஸ்புக் ஸ்மார்ட் வாட்ச் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








