புதிய (ஆடியோ) ஆப்பு வைக்க காத்திருக்கும் மார்க் & பேஸ்புக்: மக்களே உஷார்.!

தற்போது பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் இந்த தொழில்நுட்பம் பயனர்களிடத்தில் அமல்படுத்தப்படாது என்று தெரிவித்துள்ளது.

|

பேஸ்புக் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய வசதிகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, ஆனாலும்சில மாதங்களுக்கு முன்பு பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக்பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கை தற்சமயம் மிகவும்அதிகளவில் குறைந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

புதிய ஆப்பு வைக்க காத்திருக்கும் மார்க் & பேஸ்புக்: மக்களே உஷார்.!

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தற்போது பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் புதிய தொழில்நுட்பத்துக்கு உரிமை கோரியுள்ளது, இந்த தொழில்நுட்பம் பயனர்களின் சாதனங்களை பயன்படுத்தி அவர்களின் அருகில் இருக்கும் ஆடியோக்களை பதிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

குறிப்பாக இந்த தொழில்நுட்பம் நீங்கள் மற்றவர்களுடன் உரையாடுவது மற்றும் அனைத்துவிதமான ஒலி உள்ளிட்டவற்றை பதிவு செய்து அவற்றை நிறுவனத்திற்கு அனுப்பும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த மாதம் 14-ம் தேதி காப்புரிமை சார்ந்த விவரங்களை மெட்ரோ பதிவிட்டு இருந்தது, அதில் பேஸ்புக் எவ்வாறு மொபைல் போன் மைக்-ஐ தானாக ஆன் செய்து பதிவு செய்கிறது என்ற விவரங்கள் பதிவிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 சிக்னல்:

சிக்னல்:

பேஸ்புக் நிறுவனம் அதிக பிட்ச் கொண்ட சிக்னல்களை பிராட்கேஸ்ட் தரவுகளில் எம்பெட் செய்யும் எனக் கருதப்படுகிறது, இதனால் மனிதர்களுக்கு ஒலி கேட்காது எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த சிக்னல் உங்களது மொபைல் ஆடியோ பதிவை பேஸ்புக்கிற்கு அனுப்பும்.

பேஸ்புக் நிறுவனம்:

பேஸ்புக் நிறுவனம்:

தற்போது பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் இந்த தொழில்நுட்பம் பயனர்களிடத்தில் அமல்படுத்தப்படாது என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் தேவையில்லா பட்சத்தில் இதன் காப்புரிமையை பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

ஆலென் லொ :

ஆலென் லொ :

மேலும் பேஸ்புக் நிறுவனத்தை சார்ந்த ஊழியர் ஆலென் லொ மேஷபிள் தளத்திற்கு தெரிவித்திற்கு அறிக்கையில் புதிய தொழில்நுட்ப
காப்புரிமைகளை மற்ற நிறுவனங்களுக்கு முன்பு பதிவு செய்வது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவித்துள்ளார். பின்பு இது எதிர்கால
தொழில்நுட்பம் சார்ந்தவை எனவே மற்ற நிறுவனங்களால் வணிக மயமாக்க முடியும் என்று கூறினார்.

சேர்க்கப்படவில்லை:

சேர்க்கப்படவில்லை:

இதுவரை பேஸ்புக் பயனர்களுடைய சாதனங்களில் இந்த புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார் ஆலென் லொ,
பின்பு மற்ற நிறுவனங்கள் உங்களின் அழைப்புகள் மற்றும் ஆடியோக்களை பதிவு செய்ய விடாமல் தடுத்து இருக்கிறது பேஸ்புக் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook seeks patent on tech that turns on your smartphone microphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X