Facebook நிறுவனத்தின் 4 புதிய அம்சங்கள் அறிமுகம்: என்ன நன்மைகள்.!

|

பேஸ்புக் நிறுவனத்தின் மீது தொடர்ந்து புகார்கள், எதிர்ப்புகள் வந்த நிலையில் அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி பேஸ்புக் கொண்டுவரும் இந்த புதிய முயற்சிகள்(அம்சங்கள்) ஆனது பயனர்களின் பேஸ்புக் அக்கவுண்ட்டீன் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை கட்டுப்படுத்தவும் உதுவும் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நன்மைகள் என்ன?

நன்மைகள் என்ன?

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் உலகளவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய அம்சங்களின் பெயர் என்ன, நன்மைகள் என்ன? போன்றவற்றைவிரிவாகப் பார்ப்போம்.

முதல் அம்சம்

முதல் அம்சம்

பேஸ்புக் கொண்டு வரும் முதல் அம்சம் என்னவென்றால்,Who Can See What You Share, இந்தஅம்சம் பயனர்களின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களின் போஸ்ட்கள் போன்றப்ரொபைல் தகவல்களை யார் எல்லாம் காணலாம் என்பதை மதிப்பாய்வு செய்ய உதவும்.

ஏர்டெல்லில் ரூ.400-க்குள் கிடைக்கும் இந்த சிறந்த அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டம் பற்றி தெரியுமா?ஏர்டெல்லில் ரூ.400-க்குள் கிடைக்கும் இந்த சிறந்த அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டம் பற்றி தெரியுமா?

இரண்டாவது அம்சம்

இரண்டாவது அம்சம்

பேஸ்புக் கொண்டுவரும் இரண்டாவது அம்சம் என்னவென்றால்,How to Keep Your Account Secure, இது பயனர்களின் கடவுச்சொல்லை அமைத்து உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் மற்றும்லாகின் அலெர்ட்களை எனேபிள் செய்து வைக்கவும் இந்த அம்சம் உதவும் என்றும் ஒரு வலைப்பதிவு வழியாகபேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மூன்றாவது அம்சம்

மூன்றாவது அம்சம்

பேஸ்புக் கொண்டுவரும் மூன்றாவது அம்சம் என்னவென்றால், How People Can Find Youஅம்சம், இதுஉங்களை எப்படியெல்லாம் பேஸ்புக் வழியாக கண்டறியலாம் மற்றும் உங்களுக்கு யாரெல்லாம் பிரென்ட் ரெக்வஸ்ட்டை அனுப்பலாம் என்பதை மறுபரீசீலனை செய்ய உதவும் எனக் கூறப்படுகிறது.

Motorola One Vision ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!Motorola One Vision ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!

நான்காவது அம்சம்

நான்காவது அம்சம்

பேஸ்புக் கொண்டுவரும் நான்காவது அம்சம் என்னவென்றால் Your Data Settingsஅம்சமாகும், இந்தஅம்சம் பேஸ்புக் வழியாக நீங்கள் லாகின் செய்ய ஆப்களுடன் நீங்கள் பகிரும் தகவல்களை மதிப்பாய்வு செய்யஅனுமதிக்கும், பின்பு இதன் வழியாக நீங்கள் பயன்படுத்தாத ஆப்களையும் அகற்றலாம் என்று பேஸ்புக் நிறுவனம்
கூறியுள்ளது.

மேலும் பேஸ்புக் டெஸ்க்டாப் தளத்தில் உள்ள கேள்விக்குறி ஐகானை கிளிக் செய்து, உங்களின் ப்ரைவஸி செக்டூலை அணுகலாம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook's privacy checkup tool gets 4 new security features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X