தமிழ்நாட்டு இன்ஞ்னீயரிங் மாணவருக்கு பேஸ்புக்கின் 8 லட்சம் பரிசு!

|

உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு சமூக வலைதளம் தான் பேஸ்புக். இன்றைய இளைஞர்களின் ஆட்டி படைக்கும் ஒரு மந்திரச்சொல் இது. சமீபகாலமாக சில செக்கியூரிட்டி குறைபாடுகள் பேஸ்புக்கில் உள்ளன இந்த குறைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பேஸ்புக் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது.

சென்னையைில் வேலை தேடி வரும் 21 வயது இன்ஞ்னீயரிங் பட்டதாரியான அருள் குமாருக்கு பேஸ்புக்கின் இந்த அறிவிப்பு பற்றிய தகவல் எப்படியோ தெரியவந்துள்ளது. பின்பு அவர் பேஸ்புக் பயணீட்டாளர்கள் யார் வேண்டுமானாலும் மற்றவர்கள் அக்கவுன்டில் இருக்கும் படத்தை அழிக்க முடியும் என்ற குறைபாட்டை கண்டுபிடித்தார்.

தமிழ்நாட்டு இன்ஞ்னீயரிங் மாணவருக்கு பேஸ்புக்கின் 8 லட்சம் பரிசு!

இந்த குறைபாட்டை கண்டுபிடித்ததற்காக பேஸ்புக் நிறுவனம் இவருக்கு 8 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசை வழங்க உள்ளது. இதை பற்றி அருள் குமார் பேசுகையில், இந்தியாவில் நிறைய ஹாக்கர்கள் இது போன்ற குறைபாடுகளை கண்டுபிடித்து பரிசு பெறுகின்றனர் அதை வைத்தே தானும் முயற்ச்சியில் இறங்கியதாக தெரிவித்தார்.

புரோகிராமிங் மற்றும் நெட்வொர்கிங் போன்றவைகளை ஆன்லைனில் உள்ள புத்தகங்கள் மூலம் தான் கற்று கொண்டதாக அவர் கூறினார். முதலில் தான் கண்டுபிடித்த குறைபாட்டை பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் பின்பு பேஸ்புக் சிஈஓவான மார்க் ஜூக்கர்பெர்கின் அக்கவுன்டில் உள்ள படங்களை அழித்த பிறகே அவர்கள் இந்த குறைபாட்டை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

சென்னையில் வேலை தேடி வந்த அருள் குமார் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஆவார். பேஸ்புக்கின் இந்த ரொக்கப்பரிசை பெற்ற பிறகு அதை வைத்து ஆத்தூரில் சிறிய கடை வைத்திருக்கும் தனது அப்பாவிற்க்கு உதவ போவதாக அவர் தெரிவித்தார். இந்த வெற்றி மாணவருக்கு நாமும் ஒரு சபாஷ் போடுவோம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X