பேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா

தனிநபர்களின் விவரங்களை விற்பனை செய்வதாக வந்த குற்றச்சாட்டிலிருந்து சோதனைக்காலம் தொடங்கி இருக்கிறது.

|

உலகத்தில் கோடிக்கணக்கான மக்களின் பொழுதுபோக்காகவே மாறி விட்ட பேஸ்புக் என்ற முகநூலுக்கு, கெட்டகாலம் தொடங்கி விட்டது. தனிநபர்களின் விவரங்களை விற்பனை செய்வதாக வந்த குற்றச்சாட்டிலிருந்து சோதனைக்காலம் தொடங்கி இருக்கிறது. இணைய குறும்பர்களின் செயல்களால் பல்வேறு வழக்குகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளது பேஸ்புக்.

பேஸ்புக் பயனாளர்களின் பாதுகாப்புக்கு சவால் விடும் வழக்கு ஒன்று ஹஸ்டன் நீதிமன்றத்தில் பதிவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இது பாலியல் குற்றச்சாட்டு.

வழக்கு விவரம்

வழக்கு விவரம்

ஜேன் டோ என்ற பெண் தாக்கல் செய்த வழக்கில், பேஸ்புக் தளங்களில் மனித கடத்தல்களுக்கும், பாலியல் சுரண்டல்களுக்கும் இடமளிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பயனாளர்களின் யூசர் ஐடி யை சரிபார்க்க போதுமான அம்சங்கள் இல்லை என்றும், பேஸ்புக்கில் ஊடுருவும் பாலியல் தளங்களை தடுக்க எந்த போதிய வசதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

2012 ஆம் ஆண்டு பாலியல் கடத்தல்காரர்களின் பேஸ்புக் தகவல் மூலம் . முட்டாளாக்கப்பட்டதாக கூறியுள்ளார். வீட்டில் அம்மா எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அந்த நபரை சந்தித்ததாக தெரிவித்த அவர், தன்னை வன்முறையால் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

தவறுக்கு வாய்ப்பே இல்லை

தவறுக்கு வாய்ப்பே இல்லை

குற்றச்சாட்டை பேஸ்புக் செய்தி தொடர்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மனித கடத்தல்களையும், வெறுப்பை உருவாக்கும் ஆபாசங்களையும் அனுமதிப்பதில்லை என்று கூறியுள்ளார். முறைகேடுகளைத் தடுக்க மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தவதாகவும், உள்ளடக்கங்களை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை

நடவடிக்கை

மனிதக் கடத்தலுக்கு எதிரான அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேஸ்புக் இணைந்து செயல்படுவதாகவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் அமைப்புகளோடு இணைந்து தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாக கூறியுள்ளது.

கற்பழிப்பு புகார்

கற்பழிப்பு புகார்

வழக்குத் தொடுத்த ஜேன்டோ, பேஸ்புக் தளத்தின் மூலம் 2012 ஆம் ஆண்டிலேயே பாலியல் சுரண்டலை அனுபவித்ததாக கூறியுள்ளார். குடும்பத்தின் அறிவுரைகளையும் மீறி அந்த நபரைச் சந்தித்தபோது தன்னை வன்முறையால் கற்பழித்ததாக தெரிவித்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை பேக்பேஜ் டாட் காம் என்ற தளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மனித கடத்தலுக்கு எதிரான சட்டம்

மனித கடத்தலுக்கு எதிரான சட்டம்

பேக்பேஜ் டாட் காம் வலைத்தளத்தின் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. பாலியல் விற்பனையை முதன்மையாக கொண்டு செயல்பட்ட வலைத்தளம் தடை செய்யப்பட்டது. ஜான் டோயின் வழக்கில் பேக்பேஜ் நிறுவனர்கள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.

கடுமையான சட்டம்

கடுமையான சட்டம்

மனிதக்கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிரான செஸ்டா- பொஸ்டா என்ற சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.


தப்பிக்க முடியுமா
அமெரிக்கா இயற்றியுள்ள இந்த சட்டத்தின் மூலம் வலைத்தளங்களின் பதிவுகள் மற்றும் உள்ளிடுகளை காரணம் காட்டி தடை செய்ய முடியும். பேஸ்புக் இந்த வழக்கில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறது என்பதுதான் கேள்வி.

Best Mobiles in India

English summary
Facebook, responding to lawsuit, says sex trafficking banned on site: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X