155 பேஸ்புக் கணக்குகள், 11 பக்கங்களுக்கு தடை: பேஸ்புக் நடவடிக்கை., எதற்கு தெரியுமா?

|

அமெரிக்க தேர்தல் களம் குறித்தும் வேட்பாளர்கள் குறித்தும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்த சீனாவுடன் தொடர்புடைய போலிக் கணக்குகள் மூலம் வெளியானதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்த கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இணைய பாதுகாப்பு சட்டம்

இணைய பாதுகாப்பு சட்டம்

அரசியல் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குவதற்கு இணைய சேவை வழங்குவோருக்கு கடும் விதிமுறைகளை அறிவிக்கும் வகையில் இணைய பாதுகாப்பு சட்டம் சீனாவில் உள்ளது. சமூகவலைதளங்களின் தாக்கும் தொடர்பாக சீனா கவனம் செலுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் சீனா, ஊடங்களின் மீது தொடர்ந்து கட்டுப்பாடுகளை அமலில் வைத்துள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சகம்

பொது பாதுகாப்பு அமைச்சகம்

அதேபோல் பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கிரேட் பயர் வால் ஆஃப் சீனா என்ற சாப்ட்வேர் மூலமாக பல்வேறு இணைய பயன்பாடுகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. சமீப காலமாக இந்த தடைகளில் சற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல்

நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அமெரிக்காவில் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.

ஒவ்வொரு மாகாணமாக சென்று பரப்புரை

ஒவ்வொரு மாகாணமாக சென்று பரப்புரை

இரண்டு வேட்பாளர்களும் ஒவ்வொரு மாகாணமாக சென்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வருகிற தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப் பெற்றால் அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும் என அதிபர் டிரம்ப் விமர்சனங்களை முன் வைக்கிறார்.

100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்!

ஆதரவு மற்றும் எதிர் கருத்துகள்

ஆதரவு மற்றும் எதிர் கருத்துகள்

இந்த நிலையில் அமெரிக்கத் தேர்தல் குறித்தும் அதன் வேட்பாளர்கள் குறித்தும் ஆதரவு கருத்துகளையும், எதிர் கருத்துகளையும் சீனாவுடன் தொடர்புடைய போலிக் கணக்குகள் மூலம் வெளியானதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்த கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

கருத்து தெரிவித்த பேஸ்புக்

கருத்து தெரிவித்த பேஸ்புக்

இதுகுறித்து தெரிவித்த பேஸ்புக், 155 பேஸ்புக் கணக்குகள், 11 பக்கங்கள் மற்றும் ஒன்பது குழுக்கள், இன்ஸ்டாகிராம் ஆறு பக்கங்கள் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பக்கங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடென் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் வேட்பாளர் பீட் பட்டிகீக் ஆகியோருக்கு ஆதரவாகவும் எதிராகவும் உள்ளடக்கத்தை வெளியிட்டது.

3,000 க்கும் குறைவான ஃபாலோவர்கள்

3,000 க்கும் குறைவான ஃபாலோவர்கள்

இந்த கணக்குகளில் பின்தொடர்பவர்கள் (ஃபாலோவர்கள்) குறைவாகவே உள்ளன. கணக்குகளைப் பின்தொடர்பவர்கள் 3,000 க்கும் குறைவானவர்களே அமெரிக்காவில் இருந்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Facebook Removed 181 Fake Accounts: Posted Content About US Presidential Candidate

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X