நீங்கள் பார்ப்பது யூட்யூப் வீடியோ அல்ல; உண்மையை போட்டு உடைத்த பேஸ்புக்.!

மற்றொரு "பொறுமை இழந்த" ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.

|

டேட்டா திருட்டு குற்றச்சாட்டில் சிக்கி தவிக்கும் பேஸ்புக் நிறுவனம், கிட்டத்தட்ட அதன் பொறுமையை இழந்து விட்டது என்றே கூறலாம். டேட்டா திருட்டு சார்ந்த விசாரணையின் போது, உங்களின் பிஸ்னஸ் மாடலை மாற்றிக்கொள்ள முடியமா அல்லது முடியாத.? என்கிற கேள்விக்கு, "இந்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் கூற முடியாது" என்று பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ ஆன மார்க் ஜுக்கர்பெர்க் கூறியதே, பேஸ்புக் நிறுவனம் அதன் பொறுமையை இழந்து விட்டதற்கான மிக சிறந்த ஆதாரம்.

நீங்கள் பார்ப்பது யூட்யூப் வீடியோ அல்ல; உண்மையை போட்டு உடைத்த பேஸ்புக்

மற்றொரு "பொறுமை இழந்த" ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. இம்முறை பேஸ்புக் நாங்க மட்டும் தான் டேட்டா திருடுகிறோமா.? என்கிற கோபத்தில் பிற நிறுவனங்களை "போட்டுக்கொடுக்க" ஆரம்பித்துள்ளது.

கொந்தளிக்கும் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர்.!

கொந்தளிக்கும் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர்.!

"ஆம். மற்ற நிறுவனங்களும் கூட உங்களை பற்றிய டேட்டாவை சேகரிக்கின்றன" என்று பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் டேவிட் பஸர் கூறியுள்ளார். அதோடு நில்லாமல், இணையம் வழியாக ஒருவரை பற்றிய அனைத்து தகவல்களும் (பேஸ்புக் நிறுவனம் உட்பட) எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதையும் விவரித்து உள்ளார்.

பல நிறுவனங்கள் ஆனால் ஒரே மாதிரியான திருட்டு வேலை.!

பல நிறுவனங்கள் ஆனால் ஒரே மாதிரியான திருட்டு வேலை.!

"(பேஸ்புக் போன்றே) ட்விட்டர், பின்டெரெஸ்ட் மற்றும் லின்க்டுஇன் போன்ற அனைத்து சேவைகளிலுமே, தங்களுக்கு பிடித்ததை வெளிப்படுத்தும் மற்றும் பகிர உதவும் லைக் மற்றும் ஷேர் பட்டன்கள் உள்ளன. கூகுளை பொறுத்தவரை ஒரு பிரபலமான பகுப்பாய்வு சேவையே (அனலிடிக்ஸ் சர்வீஸ்) உள்ளது. அமேசான், கூகுள் மற்றும் ட்விட்டர் போன்ற அனைத்திலுமே லாக் -இன் அம்சங்கள் உள்ளன. மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமின்றி இன்னும் பல நிறுவனங்கள் விளம்பர சேவைகளை வழங்குகின்றன."

"அதற்கு ஏற்றபடியான விளம்பரங்கள் அனுப்பப்படும்"

"இப்படியாக நிறுவனங்கள் பல எண்ணிக்கையில் இருந்தாலும் கூட, அவைகள் சேகரித்து அனுப்பும் நமது தனிப்பட்ட டேட்டாக்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்றே. அதாவது ஒரு வலைத்தளத்தை அல்லது பயன்பாட்டை நாம் பார்வையிடும் ஒவ்வொரு முறையும், ஒரே நேரத்தில் பல நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான தகவல்கள் அனுப்பப்படும். அதற்கு ஏற்றபடியான விளம்பரங்கள் மற்றும் வீடியோக்கள் நமது வாசலுக்கு அனுப்பப்படும்".

நீங்கள் பார்ப்பது யூட்யூப் வீடியோ அல்ல, விளம்பரம்.!

நீங்கள் பார்ப்பது யூட்யூப் வீடியோ அல்ல, விளம்பரம்.!

பேஸ்புக் எவ்வாறு ஒரு பயனரின் குக்கீஸ், ஐபி முகவரி மற்றும் ப்ரவுஸர் தகவல்களை பெறும் என்பது சார்ந்த விளக்கத்தின் போது எப்படி ஒரு விளம்பரம் உங்களை அடைகிறது என்பதை பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் டேவிட் பஸர் வெளிப்படுத்தியுள்ளார். "ஒரு யூட்யூப் அல்லாத தளத்தில் நீங்கள் ஒரு யூட்யூப் வீடியோவை பார்க்கிறீர்கள் என்றால், அது ஒரு யூடியூப் வீடியோ அல்ல, ஒரு விளம்பரம். உங்களின் தனிப்பட்ட ப்ரவுஸர் தகவல்களை வைத்து குறிப்பிட்ட வீடியோவை, உங்களுக்கு அனுப்புமாறு யூட்யூப் தளத்திடம் கோரிக்கை வைக்கப்படும். பின் யூட்யூப் அதை உங்களுக்கு அனுப்புகிறது" என்று போட்டு உடைத்துளார் பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் டேவிட் பஸர்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
ஒரு பேஸ்புக் அக்கவுண்ட்டே இல்லை என்றாலும் கூட.!?

ஒரு பேஸ்புக் அக்கவுண்ட்டே இல்லை என்றாலும் கூட.!?

"எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் ஒரு தளத்தை அல்லது பயன்பாட்டை நீங்கள் பார்வையிடும்போது, ​​நீங்கள் லாக் அவுட் செய்திருந்தாலும் கூட ,அவ்வளவு ஏன் உங்களிடம் ஒரு பேஸ்புக் அக்கவுண்ட்டே இல்லை என்றாலும் கூட நாங்கள் உங்களைப் பற்றிய தகவலை நாங்கள் பெறுவோம்.பல நிறுவனங்கள் இந்த வகையான சேவைகளைத்தான் வழங்குகின்றன. ஆனால் பேஸ்புக்கின் குறிப்பிட்ட நடைமுறைகளை பொறுத்தவரை ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன. இருப்பினும் பேஸ்புக் உடன் சைன்-இன் செய்த பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவுக் கட்டுப்பாடுகள் மட்டுமே அதிகம் அணுகக்கூடியவைகளாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, நமது தனிப்பட்ட டேட்டாவின் பாதுகாப்பானது நமது கைகளில் தான் உள்ளது என்பது வெளிப்படை.

Best Mobiles in India

English summary
Facebook points finger at Google and Twitter for data collection. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X