ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் திட்டம்.!

|

பேஸ்புக் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்த ஆண்டு பல்வேறு புதிய முயற்சியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் திட்டம்.!

அண்மையில் இந்நிறுவனம் சார்பில் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது, அதாவது பேஸ்புக் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த வாட்சை பேஸ்புக் நிறுவனம் வடிவமைத்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் பேஸ்புக் நிறுவனம் தனது சார்பில் ஆப்பிரேட்டிங் சிஸ்டம் ஒன்றையும் கொண்டுவரும் பணியில் கவனம் செலுத்தி வருகிறதாம்.

ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் திட்டம்.!

பின்பு இதை வெற்றிகரமாக அறிமுகம் பிறகு பேஸ்புக் நிறுவன வாட்ச்களில் அந்த இயங்குதளம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் ரேபான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் கிளாஸ்களையும் பேஸ்புக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனை அமெரிக்க டெக்னலாஜி செய்திகளை வெளியிட்டு வரும் தி வெர்ஜ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு துவகத்தில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் அதன் profile lock அம்சத்தினை அறிமுகம் செய்தது. மேலும் இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த அம்சம் உங்கள் பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல் இல்லாத பயனர்களிடமிருந்து
உங்கள் ப்ரோபைலை லாக் செய்ய உதவுகிறது.

ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் திட்டம்.!

ஆனாலும் இந்த அம்சம் நாட்டில் சில பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மிகவும் எளிமையாக பேஸ்புக் ப்ரொபைலை லாக் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

  • முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக உங்களது பேஸ்புக் ஆப்பை அப்டேட் செய்யவும்.
  • அடுத்து உங்கள் பேஸ்புக் தளத்தில் உள்ள ப்ரொபைல் பக்கத்திற்கு செல்லவும்.
  • அதன்பின்பு ப்ரொபைலில் இருக்கும் More என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • அடுத்து மெனுவிலிருந்து லாக் ப்ரொபைல் விருப்பத்தைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்தவுடன்
  • உங்களது ஸ்க்ரீனில் ப்ரொபைல் லாக் செய்யப்படலமா என்கிற கன்பிர்மேஷன் மெசேஜை பெறுவீர்கள்.
ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் திட்டம்.!
இப்போது ப்ரொபைலை லாக் செய்ய Lock Your Profile என்பதை கிளிக் செய்யவும். முடிந்தது அவ்வளவுதான் ஆனால் பேஸ்புக் ப்ரொபைல் லாக் செய்யப்பட்டு இருந்தால், உங்களது பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல் இல்லாத யாராலும் உங்கள் ப்ரொபைலை முழுமையாக பார்க்க முடியாது. அவ்வளவு ஏன் உங்களின் ப்ரொபைல் பிக்சரை கூட பெரிதுபடுத்தி பார்க்க முடியாது.
Best Mobiles in India

English summary
Facebook plans to launch smartwatch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X