குருநாதா ஏன்., எதற்கு: பெயரை மாற்றப்போகும் பேஸ்புக்- புதுப்பெயர் என்னவாக இருக்கும்?

|

சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது பேஸ்புக்., பேஸ்புக் நிறுவனம் திடீரென பெயர் மாற்றப்பட உள்ளதாக தி வெர்ஜ் செய்தி தெரிவித்துள்ளது. மேலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்ட விஷயம் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த புதிய பெயர் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பெயர் மாற்றம் குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. பேஸ்புக் இன்க், மெட்டாவெர்ஸில் கவனம் செலுத்தும் புதிய குழு பெயருடன் தன்னை மறுபெயரிட திட்டமிட்டுள்ளது என வெர்ஜ் தெரிவித்துள்ளது. பெயர் மாற்றம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தி வெர்ஜ் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தை நேரடியாக குறிப்பிடும் ஆதாரமும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

மெய்நிகர் சூழலில் இயங்கக்கூடிய மெட்டாவெர்ஸ்

மெய்நிகர் சூழலில் இயங்கக்கூடிய மெட்டாவெர்ஸ்

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகார மார்க் ஜுக்கர் பெர்க், மெய்நிகர் சூழலில் இயங்கக்கூடிய மெட்டாவெர்ஸ் குறித்து கடந்த சில மாதங்களாகவே குறிப்பிட்டு வருகிறார். குழு மெய்நிகர் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி ஆகியவற்றில் அதிக முதலீடு செய்து ஓக்குலஸ் போன்ற வன்பொருளை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

பேஸ்புக் பெயர் மாற்றம்

பேஸ்புக் பெயர் மாற்றம்

வெளியாகும் தகவலின்படி பேஸ்புக் பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில் அதன் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் போன்ற தளங்கள் அதன் தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களாக மாறும் என கூறப்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றப்படும் பட்சத்தில் ஒரு தாய் நிறுவனத்தின் கீழ் பல தயாரிப்புகளின் முதன்மை பயன்பாடாக இது நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் இயங்கும் நிறுவனங்கள் பெயரை மாற்றுவது என்பது புதிதல்ல. காரணம் முன்னதாக 2015 ஆம் ஆண்டு ஆல்பாபெட் ஐஎன்சி என்ற தாய் நிறுவனத்தின் கூகுள் போன்ற தளங்கள் கொண்டு வரப்பட்டது.

பேஸ்புக் வர்த்தக செயல்பாடுகள்

பேஸ்புக் வர்த்தக செயல்பாடுகள்

பேஸ்புக் நிறுவனம் வதந்தி மற்றும் ஊகம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. பேஸ்புக் வர்த்தக செயல்பாடுகளால் அமெரிக்க அரசு அதன் கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே பெயர் மாற்ற இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. பேஸ்புக் வணிகம் குழுவிற்கு முக்கியத்துவம் குறைவாக இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் பயனர் பாதுகாப்பு மற்றும் வெறுப்புணர்வை எவ்வாறு கையாளுகிறது என்பதும் ஒழுங்குமுறை, சட்டரீதியான ஆய்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான படத்தை புதுப்பிக்கவும் முயல்வதாக கூறப்படுகிறது.

தி வெர்ஜ் தளத்தின் தகவல்

தி வெர்ஜ் தளத்தின் தகவல்

உலகின் மிகப் பெரிய சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக் விரைவில் மறுபெயரிடும் என தி வெர்ஜ் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் இதுகுறித்த வதந்திகள் மற்றும் ஊகங்களுக்கு எந்த கவனமும் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. நிறுவனத்தின் பல ரகசியர்களை இது பாதிக்கலாம் எனவும் கூறப்படுதுகிறது. பல்வேறு சமூகவலைதள வருகை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளின் காரணமாக பேஸ்புக் நிறுவனம் உலகின் பல்வேறு பகுதிகளில் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ்

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ்

பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் கிளை நிறுவனங்களாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் உள்ளிட்ட பல அப்ளிகேஷன்கள் இயங்கி வருகிறது. தற்போது பேஸ்புக் நிறுவனம் மெட்டாவேர்ஸை உருவாக்குவதற்கான திட்டங்களை கொண்டிருக்கிறது. இது மெய்நிகர் சூழலை சார்ந்ததாகும். இதன்மூலம் ஆக்மென்ட் ரியாலிட்டி மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி ஆகியவைகளை இணைக்க முடியும் என கூறப்படுகிறது. அதேபோல் பேஸ்புக் நிறுவனத்தின் புதிய பெயரை அடுத்த வாரம் தொடக்கத்தில் அறிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும்

பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும்

இந்த தகவல் ஆனது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினம் வெளியான தகவலின்படி இது நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் சாதகமான விஷயமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. பேஸ்புக் நிறுவனம் தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை, இருப்பினும் தி வெர்ஜ் தகவலின்படி இது உண்மையாகும் பட்சத்தில் பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Facebook Plan to Changing its Name: New Name Might Announced Next Week

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X