சூர்யசக்தி இணைய விமானத்தை நிரந்தரமாக தரையிறக்கும் பேஸ்புக்.!

இத்திட்டத்தில் மறுவடிவமைப்பு செய்ய முயன்ற முயற்சிகள் நிராகரிக்கப்பட்டு, இதன் தலைவர் மற்றும் தலைமை பொறியாளர் கடந்த மாதம் வெளியேறியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

|

பேஸ்புக் நிறுவனத்தின் நீண்ட கால கனவான மிகப்பெரிய, சூர்ய சக்தியில் இயங்கும் விமானத்தை வடிவமைப்பு அதன் மூலம் லேசர் பயன்படுத்தி அடிமட்ட சமூகத்திற்கு இணைய வசதி அளிக்கும் திட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.

சூர்யசக்தி இணைய விமானத்தை நிரந்தரமாக தரையிறக்கும் பேஸ்புக்.!

அந்நிறுவனத்தின் தளத்தில் செய்தியை பதிவிட்டிருந்த யால் மகுரே கூறுகையில், நாங்கள் எங்களின் சொந்த விமானத்தை வடிவமைத்து கட்டமைக்கும் திட்டத்தை தொடப்போவதில்லை என முடிவு செய்துள்ளோம் மற்றும் பிரிட்ஜ்வாட்டரில் செயல்படும் அலுவலகம் மூடப்படுகிறது என்றார். இதனால் விமானத்தை வடிவமைத்தல் மற்றும் பராமரிக்கும் 16 பணியிடங்கள் இழக்கப்படும். ஆனால் இதனால் இதற்கு சம்பந்தப்பட்ட மற்ற செயல்திட்டங்கள் பாதிக்கப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர்பஸ்

ஏர்பஸ்

அந்த நிறுவனம் தொடர்ந்து 'ஏர்பஸ்' போன்ற அதன் கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து, அக்யூலா(Aquila) போன்ற உயர்மட்ட தள நிலையங்களை (high altitude platform stations) மேம்படுத்த உதவுவதை தொடரவுள்ளது. அஸ்சென்டா நிறுவனத்தை கையப்படுத்தியதில் இருந்து , அதாவது 2014லிருந்து இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. 2015ல் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டு, 2016முதல் சோதனை விமானத்தை பரிசோதனை செய்து, தரையிறங்கும் போது வடிவமைப்பு கோளாறு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இரண்டாவது சோதனை விமானம், முதல் ஒன்றை விட நன்றாக செயல்பட்டாலும், அவ்வளவு சிறப்பாக இல்லை.

சிறுசிறு பிரச்சனைகள்

சிறுசிறு பிரச்சனைகள்

சூர்யசக்தியால் கிடைக்கும் மிகக்குறைந்த ஆற்றலை பயன்படுத்தி மகத்தாக பறந்து உயரத்திலேயே இருந்த இந்த விமானத்தில் சிறுசிறு பிரச்சனைகள் மட்டுமே ஏற்பட்டன. ஆனால் பேஸ்புக் மட்டுமே குறைந்த ஆற்றலில் அதிக உயரம் பறக்கும் தொலைதொடர்பு விமானத்தில் கவனம் செலுத்தவில்லை.

 வான்வெளி துறையில் உள்ள பிரபல நிறுவனங்கள்

வான்வெளி துறையில் உள்ள பிரபல நிறுவனங்கள்

" நாங்கள் இதில் இவ்வளவு கடினமான முயற்சிகளை செய்ததால், இந்த தொழில்நுட்பத்தில் வான்வெளி துறையில் உள்ள பிரபல நிறுவனங்கள் முதலீடு செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் குறிப்பாக புதிய உயர்மட்ட விமானங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பில் அதிக முதலீடு செய்கின்றனர்" என்கிறார் மகுரே.


இதுபோன்ற அதிநவீன விமானத்தை அடிமட்டத்திலிருந்து கட்டமைக்க அதிக முதலீடு தேவைப்படும் நிலையில், அதிக அனுமவமுள்ள வான்வெளி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இத்துறையில் அனுபவம் இல்லாத பேஸ்புக் இத்திட்டத்தால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க இம்முடிவை எடுத்தது ஆச்சரியமில்லை.

 பைபர் கேபிள்

பைபர் கேபிள்

இத்திட்டத்தில் மறுவடிவமைப்பு செய்ய முயன்ற முயற்சிகள் நிராகரிக்கப்பட்டு, இதன் தலைவர் மற்றும் தலைமை பொறியாளர் கடந்த மாதம் வெளியேறியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கின் இந்த நோக்கத்தை குறைகூறுவது கடினமாக இருந்தாலும், இத்திட்டம் மூலம் இணைய வசதி வழங்கும் இந்த யோசனையை அப்போதே நிறைய பேர் எதிர்த்தனர்.இந்த பணத்தை கொண்டு பைபர் கேபிள் பதிப்பது உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கலாம் என்று தொடர்ந்து அவர்கள் கூறிவந்தனர்.

காப்புரிமை பொருட்கள்

காப்புரிமை பொருட்கள்

இது போன்ற ஒரு செயல்திட்டத்தை கைவிடும் போது, அக்யூலா திட்டத்தின் காப்புரிமை பொருட்கள் மற்றும் இதர வன்பொருட்களின் நிலை என்ன என பேஸ்புக் நிறுவனத்திடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்தவிட்டனர். ஆனால் அக்யூலா ஒரு பரந்துவிரந்த மற்றும் வெற்றிகரமான திட்டம் என வலியுறுத்தி கூறினர். இருப்பினும் அந்த விமானம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கவிட்டாலும் (அதை வான்வெளி நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும்), அதன் பரிமாற்ற மற்றும் உந்துதல் செயல்பாடுகளின் மேம்பாட்டு பணிகள் இன்னும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அந்நிறுவனம் என்ன திட்டமிடுகிறது என தெளிவாக தெரியாதநிலை உள்ளது. ஆனால் திட்டங்களில் மாற்றங்கள் உள்ளதால் அடுத்த சிலமாதங்களில் நிறைய செய்திகளை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Facebook permanently grounds its Aquila solar-powered internet plane : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X