Home
News

தப்பு கண்டுபிடிப்பதில் இந்தியா முதலிடம் : ஷாக் அடிக்கும் மார்க் சூக்கர்பர்க்..!

By Meganathan

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமாக இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் உலகளவில் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அதிகப்படியாக பல கோடி ரூபாய் பணத்தை சன்மானமாக வழங்கியுள்ளது என அந்நிறுவனத்தில் டெக்னிக்கல் ப்ரோகிராம் மேனேஜரான ஆடம் ரட்டர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

உலக மக்கள் தொகையில் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் ஃபேஸ்புக் தளத்தில் பிழைகளை கண்டறிந்தமைக்காக இவ்வளவு பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு பிழை கண்டுபிடித்ததில் இந்தியர்களே முதலிடம் பிடித்திருப்பதோடு அதிக பணம் வழங்கப்பட்டுள்ளதும் இந்தியர்களுக்கே என்கின்றார் ஆடம் ரட்டர்மேன்.

இது குறித்த முழு தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

பக் பவுன்டி ப்ரோகிராம்

பக் பவுன்டி ப்ரோகிராம்

பக் பவுன்டி ப்ரோகிராம் மூலம் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் ரூ.4.84 கோடி வழங்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

பிழை கண்டறிதல்

பிழை கண்டறிதல்

தளத்தில் இருக்கும் பிழைகளை கண்டறிவோருக்கு தக்க பரிசு வழங்கும் திட்டம் தான் பக் பவுன்டி ப்ரோகிராம் என அழைக்கப்படுகின்றது.

இந்தியா

இந்தியா

உலகம் முழுவதும் சுமார் 127 நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றிருக்கும் இந்த பக் பவுன்டி ப்ரோகிராமில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள்

சுமார் 205 ஆராய்ச்சியாளர்கள் ஃபேஸ்புக் தளத்தில் பிழைகளை கண்டறிய பதிவு செய்திருக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ரூ.4.84 கோடிகளை இந்தியர்கள் பிழை கண்டறிந்தமைக்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மென்பொருள் பிழை

மென்பொருள் பிழை

மென்பொருளில் ஏற்பட்டிருக்கும் சிறிய தவறினால் பாதிப்பு ஏற்படுவதே பிழை என கூறப்படுகின்றது. இதன் பாதிப்புகள் அதிகப்படியான சேதம் ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிழைகள்

பிழைகள்

2011 ஆம் ஆண்டு பிழை கண்டறியும் திட்டம் துவஙக்பட்டதில் இருந்து இன்று வரை சுமார் 2400 பிழைகள் கண்டறியப்பட்டு அந்நிறுவனம் சுமார் 4.3 மில்லியன் டாலர்களை ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கியுள்ளது. உலகம் முழுக்க சுமார் 800க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த திட்டத்தில் ஃபேஸ்புக் சேவை, உள்கட்டமைரப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பிழைகளை கண்டறிவதற்கு பரிசு வழங்கப்படுகின்றது.

அதிகம்

அதிகம்

2015 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் சேவையில் மொத்தம் 102 பிழைகள் கண்டறியப்பட்டது. இது முந்தைய ஆண்டை விட 38 சதவீதம் அதிகம் ஆகும். 127 நாடுகளை சேர்ந்த சுமார் 5543 ஆராய்ச்சியாளர்கள் சுமார் 13,233 பிழைகள் சமர்பிக்கப்பட்டு அவைகளில் 210 ஆராய்ச்சியாளர்கள் சமர்பித்த 526 பிழைகளுக்கு மட்டும் சுமார் 936,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

இந்தியா

இதில் 1,780 அமெரிக்க டாலர்கள் இந்தியாவில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகம் ஆகும். இதோடு எகிப்து, டிரினிடாட் மற்றும் டோபாகோ உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிக பணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

இந்தியாவில் இருந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் பிழைகள் சமர்பிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கண்டறிந்த பிழையின் தன்மையை கணக்கிட்டு அதன் பாதிப்புகளுக்கு ஏற்ப பிழை கண்டறிந்தவருக்கு பரிசு தொகை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook Paid Rs 4.84 Crore To Indians Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X