ஹலோ facebook ஓனர் மார்கா.,உங்க அக்கவுண்டயே ஹேக் செஞ்சுட்டோம்ல:அடேய் ஹேக்கர்களா- இது எப்படி இருக்கு

|

உலகளவில் பிரதான சமூகவலைதளில் ஒன்றாகவும், மிகப்பெரிய நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. பேஸ்புக் நிறுவனத்துக்கு என்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கமும் உள்ளது.

'Our Mine' என்ற பெயரில் வந்த ஹேக்கர்கள்

'Our Mine' என்ற பெயரில் வந்த ஹேக்கர்கள்

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று 'Our Mine' என்ற பெயரில் வந்த ஹேக்கர்கள், ஃபேஸ்புக்கின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஹேக் செய்தனர்.

பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள்

பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஹேக்கர்களால் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றையும் மீறி ஹேக்கர்கள் இந்த பக்கங்களை ஹேக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!

யாராலும் ஹேக் செய்ய முடியும்

யாராலும் ஹேக் செய்ய முடியும்

இந்தச் சம்பவத்தைப் பற்றி, பேஸ்புக்கையும் கூட யாராலும் ஹேக் செய்ய முடியும். இது, டுவிட்டரின் பாதுகாப்பை ஒப்பிடுகையில் பேஸ்புக் கொஞ்சம் மேம்பட்டதாக இருக்கிறது என அந்த ஹேக்கர் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 பேஸ்புக்கின் கணக்கு ஹேக்

பேஸ்புக்கின் கணக்கு ஹேக்

இந்த நிறுவனம் டுவிட்டரில் பேஸ்புக்கின் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்பதை அந்நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. அதே போல் பேஸ்புக் நிறுவனமும் தங்களது தளங்களில் அதிகாரபூர்வ பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதை குறித்து ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், கணக்குகளை அதி விரைவிலேயே மீண்டும் கைப்பற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Mine என்ற ஹேக்கர்கள்

Our Mine என்ற ஹேக்கர்கள்

Our Mine என்ற ஹேக்கர்கள் இதற்கு முன்பே பல ஹேக்கிங் வேலைகளை செய்துள்ளன. Our Mine நிறுவனம் முன்னதாகவே ESPN, NFL நிறுவனங்களை ஹேக் செய்யப்பட்டதோடு, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டுவிட்டரின் துணை நிறுவனர் ஜாக் டோர்ஸி ஆகியோரது சமூக வலைதள கணக்குகளையும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

எந்த விதமான தகவல் திருட்டிலும் ஈடுபடுவது இல்லை

எந்த விதமான தகவல் திருட்டிலும் ஈடுபடுவது இல்லை

இது குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் Our Mine ஹேக்கர்கள் எந்த விதமான தகவல் திருட்டிலும் ஈடுபடுவது இல்லை. அதற்கு பதிலாக இது போன்ற நிறுவனங்களின் தளங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அந்த ஹேக்கர்கள் குழு தெரிவித்துள்ளது.

Google-க்கே இந்த நிலையா., ஆனா இந்தியர்கள் ஹேப்பி அன்னாச்சி: என்ன தெரியுமா?Google-க்கே இந்த நிலையா., ஆனா இந்தியர்கள் ஹேப்பி அன்னாச்சி: என்ன தெரியுமா?

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தின் செய்தியாளர் ஜமால் கஷோகி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கி நாட்டிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு நான் தான் பொறுப்பு

ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு நான் தான் பொறுப்பு

இந்த நிலையில், பி.பி.எஸ் எடுத்த ஆவணப்படத்தில் பேசிய சவுதி இளவரசர், ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு நான் தான் பொறுப்பு. என்னுடைய கண்காணிப்பில்தான் இந்தக் கொலை நடைபெற்றது என்று தெரிவித்தார். வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக் செய்யப்படுகின்றன என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக் செய்யப்பட்டு பல பெரும் புள்ளிகள் உளவு பார்க்கப்படுகின்றனர் என்று வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இது உலகின் டாப் பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ்-க்கும் நிகழ்ந்துள்ளது. இவர் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்டின் அதிபரும் ஆவார்.

ஜெஃப் பொஸோஸ்

ஜெஃப் பொஸோஸ்

ஜெஃப் பொஸோஸ் மீது கோபமுள்ள முக்கிய உலக தலைவர்களில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முக்கியமானவர். ஆம், முகமது பின் சல்மானை விமர்சித்து வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிக்கையில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்திருக்கிறது. இதையடுத்து தான் கடந்த 2018 ஆம் ஆம்டு கஷோகி சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

பெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்பெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்

ஜெஃப் பொஸோஸின் போனை சவுதி இளவரசர் ஹேக்

ஜெஃப் பொஸோஸின் போனை சவுதி இளவரசர் ஹேக்

இந்த நிலையில் ஜெஃப் பொஸோஸின் போனை சவுதி இளவரசர் ஹேக் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெஃப் பொஸோஸின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக தனியார் நிபுணர்கள் குழு கொண்டு அவர் விசாரணை நடத்தினார். அதில் சவுதி அரசு தான் போனை ஹேக் செய்தது என்று தெரியவந்துள்ளது.

உலக நாடுகளையே அச்சுறுத்தும் விதமான நிகழ்வு

உலக நாடுகளையே அச்சுறுத்தும் விதமான நிகழ்வு

இப்படி உலக நாடுகளையே அச்சுறுத்தும் விதமாக இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இணையம் வழி தகவல்கள் வளர்ந்து வரும் நேரத்தில் தங்களது தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அரசு உள்ளிட்ட பல தரப்பினர்களிடமும் இருந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூகவலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவதில் அனைவரும் கவனத்தை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook official twitter page and instagram page hacked

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X