பேஸ்புக்: இனி ஸ்டோரிக்களிலும் விழா அழைப்பிதழ்களை சேர்க்கலாம்.!
இந்த புதிய வசதில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், விழாவை மறக்காமல் இருக்க நினைவூட்டும் வசதியும் வழங்கப்படுகிறது.
பேஸ்புக் அன்மையில் பல்வேறு புதிய அம்சங்களை தனது பக்கத்தில் சேர்த்துள்ளது, அந்த வரிசையில் பேஸ்புக் நிறுவனம் இன்று புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. அதாவது பேஸ்புக்கில் இனி ஸ்டோரிகளிலும் விழா அழைப்பிதழ்களை
சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம் அதிகப்படியான பேஸ்புக் நண்பர்கள், உறவினர்களை விழாக்களுக்கு அழைக்க முடியும், கண்டிப்பாக இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

ஷேர் டு யுவர் ஸடோரி
பேஸ்புக் ஸ்டோரிகளில் புதிய வசதியை பயன்படுத்த விழாவிற்கான பக்கத்தை கிளிக் செய்து ஷேர் பட்டனை தேர்வு செய்யவேண்டும், பின்பு விழாக்களை தனி போஸ்ட் வடிவிலோ அல்லது மெசஞ்சர் மூலமாகவோ அனுப்பாமல்,
இனி ஷேர் டு யுவர் ஸடோரி அம்சத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நண்பர்கள்
குறிப்பாக பேஸ்புக் ஸ்டோரிகளில் விழா அழைப்பிதழ்களை பார்க்கும் உங்கள் நண்பர்கள் ஸ்டோரியில் இருந்தபடி விருப்பம்
தெரிவிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

க்ரூப் மெசேஜ்
பின்பு ஸ்டோரிக்கு வந்திருக்கும் பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழாவில் கலந்து கொள்ள ஸ்டோரி மூலம் விருப்பம் தெரிவித்தவர்களை பார்த்து அவர்களுக்கென க்ரூப் மெசேஜ் ஒன்றும் அனுப்பலாம்.

மகளிர் தினம்
இந்த புதிய வசதில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், விழாவை மறக்காமல் இருக்க நினைவூட்டும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் சர்வதேச மகளிர் தினம் விரைவில் கொண்டாடப்ட இருக்கும் நிலையில், இந்த புதிய அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டா வெர்ஷனில்
தற்சமயம் அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட பகுதிகளில் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் கிளிக் செய்யக்கூடிய ஸ்டிக்கர் புதிதாக இருப்பதோடு, பயனர் பகிர்ந்து இருக்கும் விழாவிற்கு நண்பர்கள் விருப்பம் மற்றும் கலந்து கொள்வதற்கான ஆபஷன்களும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்க்கது.


Click it and Unblock the Notifications