தினசரி செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள பேஸ்புக்.!

|

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இதற்வேண்டி உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

காலைநேரம் வரும்

சில வருடங்களுக்கு முன்பு காலைநேரம் வரும் நாளேடுகளுக்காக மக்கள் காத்திருந்தனர், பின்னர் தொலைக்காட்சிகளின் தலைப்பு செய்திகள் மற்றும் செய்திகளின் ஆதிக்கம் என்று பரிணமித்து வந்த செய்திதுறை, இன்று முழுவதும் இணைய மயமாகவிட்டது.

மில்லியன் கணக்கான மக்களின் கைகளில்

அதாவது இப்போது உள்ள புதிய தொழில்நுட்பம் மூலம் ஒரு செய்தி ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களின்கைகளில் உடனடியாக சென்றுவிடுகிறது என்றுதான் கூறவேண்டும். இதற்கு முழுவதும் காரணம் சமூகவலைதளங்களின் பயன்பாடுகள்தான்.

 சமூகவலைதளங்களின் அளவற்ற

குறிப்பாக இந்த சமூகவலைதளங்களின் அளவற்ற வளர்ச்சி,தொலைக்காட்சியில் செய்தி நேரத்திற்காக காத்திருந்தவர்களை செல்போனை நோக்கி வரவைத்திருக்கிறது. அதவும் பேஸ்புக் உள்ளிட்ட முக்கிய சமூகவலைதளங்களில் பகிரப்படும செய்திகள் எளிதில் மக்களை அடைந்துவிடுகிறது. எனவேதான் இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.

அடேங்கப்பா: பிஎஸ்என்எல் ரூ.108 திட்டம்: வரம்பற்ற குரல் அழைப்புகள்: 1ஜிபி டேட்டா: ஜியோவுக்கு டாட்டா!அடேங்கப்பா: பிஎஸ்என்எல் ரூ.108 திட்டம்: வரம்பற்ற குரல் அழைப்புகள்: 1ஜிபி டேட்டா: ஜியோவுக்கு டாட்டா!

செய்தி பிரிவை அறிமுகம்

அதாவது நம்பகரமான செய்தகளை பெறவும், உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் முக்கியமானசெய்திகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாக கொண்டு புதிய செய்தி பிரிவை அறிமுகம்செய்ய திட்டமிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

இன்று அறிமுகமாகும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸமார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?இன்று அறிமுகமாகும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸமார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

 செய்தி நிறுவனங்களிடம்

மேலும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்த உலகின் மகிவும் முன்னணி செய்தி நிறுவனங்களானWall Street Journal, News Corp, Dow Jones, New York Post, போன்ற செய்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

உறுதி செய்யும்

செய்திகளை வெளியிட விரும்பும் நிறுவனங்கள் மக்களுடன் நேரடி உறவை ஏற்படுத்த இந்த புதிய வசதி உதவும் எனக்கூறப்படுகிறது. மேலும் அதன் உண்மைத்தன்மை உயர்தரமாக இருப்பதையும் இந்த புதிய வசதி உறுதி செய்யும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசரியர்கள்

வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி எந்த வகையிலான செய்திகள் தேவைப்படுகின்றன என்பதை செயற்கை நுண்ணறிவு மற்றும் இதற்கென சிறப்பாக நியமிக்கப்பட உள்ள செய்தி ஆசரியர்கள் தீர்மானிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

முதலீடு

பேஸ்புக்கின் இந்த புதிய வசதி வந்துவிட்டால் தொலைக்காட்சிகள், யூடியூப், செய்தி நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களை தேடவேண்டியதில்லை.பேஸ்புக் செய்தி சேவையின் மூலமாக பேஸ்புக்கே இனிமேல் நமக்கு செய்திவாசிக்கப்போகிறது. இந்த சேவைக்கு வேண்டி சுமார் 30லட்சம் டாலர் பணத்தை முதலீடு செய்யவுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Facebook News Tab Coming Soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X