இந்தியாவிற்கு வந்தது ஃபேஸ்புக் மொமன்ட்ஸ்..!
புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் பிரத்யேக செயலியான ஃபேஸ்புக் மொமன்ட்ஸ் சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் வெளியானது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்சமயம் இந்த செயலியானது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளதோடு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இந்த செயலியை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் அப்ளிகேஷனினை அப்டேட் செய்திருக்கின்றது. புதிய அப்டேட் மூலம் வீடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வீடியோ மான்டேஜ்களை உருவாக்க முடியும். அதிகபட்சம் ஆறு புகைப்படங்களை பயன்படுத்த வழி வகை செய்யும் புதிய அப்டேட் விரைவில் அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!
வாடிக்கையாளர்கள் செயலியில் இருக்கும் வீடியோவினை எடிட் செய்து புதிய புகைப்படங்களை வைத்து கொள்ளலாம், இதோடு வழங்கப்பட்டிருக்கும் 10 சவுண்டுகளில் எதையேனும் தேர்வு செய்து கொள்ளலாம். உறுவாக்கிய வீடியோவினை நேரடியாக ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.


Click it and Unblock the Notifications