பேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ காலிங் சேவை அறிமுகம்

Written By:

பேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் அப்ளிகேஷனிற்கான வீடியோ காலிங் சேவியினை அறிவித்துள்ளது, இந்த அம்சம் கடந்த மாதம் சில சந்தைகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பேஸ்புக் நிறுவனத்தில் மெசேஜிங் சேவைகளுக்கான துணை தலைவரான டேவிட் மார்கஸ் இந்த செய்தியை பேஸ்புக் போஸ்ட் மூலம் தெரிவித்தார். உலகம் முழுக்க இந்த சேவை வழங்குவதில் நாஙகள் மகிழ்ச்சியடைவதோடு சில நாடுகளில் தரத்தை உயர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த போஸ்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ காலிங் சேவை அறிமுகம்

மேஸ்புக் மெசஞ்சர் அப்லிகேஷன் தற்சமயம் 600 மில்லியன் பயனாளிகளை கொண்டிருப்பதோடு வீடியோ காலிங் சேவைக்கான ஐகானினை சாட் ஸ்கிரீனின் மேல் பகுதியில் வழங்கி இருக்கின்றது. இந்த வீடியோ காலிங் சேவையானது விரைவில் ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்படும்.

இந்த அப்டேட் கூகுள் ப்ளே இந்தியாவில் இன்னும் வழங்கப்படவில்லை என்பதோடு கடைசி அப்டேட் தேதியாக மே மாதம் 15 ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வீடியோ காலிங் சேவை பெல்ஜியம், கனடா, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot