வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.! பலே திட்டம்.!

|

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது பேஸ்புக் நிறுவனம். தற்சமயம் இந்நிறுவனம் சார்பில் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.

பேஸ்புக் மெசஞ்சரை வாட்ஸ்அப்

அதாவது பேஸ்புக் மெசஞ்சரை வாட்ஸ்அப் உடன் இணைத்து ஒன்றாக மாற்றும் திட்டம் பற்றி பரீசீலிக்கப்பட்டு வருவதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய கிளை நிறுவனமாக சில வருடங்களுக்கு முன்புவாட்ஸ்அப்-ஐ தன்னுடன் இணைத்துக் கொண்டது.

போன்றவற்றை ஒன்றாக்கி மூன்று ஆப்களின் தொடர்புகளுடன் சாட்யும்

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்ஜரை போன்றவற்றை ஒன்றாக்கி மூன்று ஆப்களின் தொடர்புகளுடன் சாட்யும் செய்யுமாறு வசதியை உருவாக்கவுள்ளது.

அதேசமயம் இதை

கடந்த 2019-ம் வருடம் இதுபற்றி வாய்திறந்த மார்க் ஸ்க்கர் பர்க், பின்னாளில், இந்த திட்டம் உண்மைதான் என்று கூறினார்,அதேசமயம் இதை செயல்படுத்துவதற்கு இந்த ஆண்டு முழுவதற்கும் எடுத்துக் கொள்ளலாம் என தெரிகிறது. இந்து புதியவசதி வந்தால் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் தொடர்புகளை ஒரு பயனாளர் ஒரு நேரத்தில் நிர்வகிக்க முடியும்.

மட்டுமே உடைய இன்னொரு

ஒரு உதாரணம் கூறவேண்டும் என்றால், வாடஸ்அப்-ல் ஒருவரை பிளாக் செய்திருந்தால். அதே பயனாளருக்கு உரிய மெசஞ்சர் ஆப்பிலும், அதே நபரை காட்டுவதில்லை. அதுமட்டுமில்லாமல், இதில் வாட்ஸ்அப் நம்பர் மட்டுமே இருக்கும் ஒரு பயனாளார் இன்ஸ்டாகிராம் மட்டுமே உடைய இன்னொரு பயனாளிரடம் சாட் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்கள் நிகழ்த்திக் கொள்ளமுடியும். இதனால் வாட்ஸ்அப் இல்லாத ஒரு தொடர்பாளர், வாட்ஸ்அப் உடைய ஒருவரிடம் பேச முடியும் என்று தெரிகிறது.

பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப்! அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்?பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப்! அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்?

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அனிமேஷன்

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்கள்,கியூஆர் குறியீடுகள், டெஸ்க்டாப் & வெப்பிற்கான டார்க் மோட் பயன்முறை
மற்றும் க்ருப் வீடியோ காலிங் வசதியில் சில மேம்பாடுகள் போன்றஅப்டேட்களை பீட்டாவிலிருந்து அதன் நிலையான பதிப்பிற்கு
கொண்டு வருகிறது.

 அம்சங்கள் அடுத்த சில

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த சில புதிய அம்சங்கள் அடுத்த சில வாரங்களில் ஸ்டாண்டர்ட் வெர்ஷன்களுக்கு
வெளியிடப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கண்டிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும்
வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயனர்கள் வாட்ஸ்அப்-ன்

அதன்படி முதலில் பயனர்கள் வாட்ஸ்அப்-ன் சமீபத்திய பதிப்புகளில் அனிமேஷன் ஸ்டிக்கர்களை பார்க்கத் தொடங்குவார்கள், பின்பு இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆனது நகரும் அல்லது ஜிஃப் வீடியோவாக இருக்கும்.

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வெளிவந்த அறிவிப்பில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சாட் செய்ய எளிய, பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட வழியை வழங்குவதில் எங்கள் கவனம் அதிகமாக உள்ளது. பின்பு வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ள ஒரு வழியாக உறுதிபடுத்த எங்கள் தயாரிப்பு வடிவமைப்பை நாங்கள் தொடரந்து முன்னெடுத்து வருகிறோம் எனவும், சில வாரங்களில் வெளிவரும்
சில புதிய அம்சங்களை உறுதிப்படுத்த நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

R குறியீடுகளையும் பெறு

விரைவில் வரும் வாட்ஸ்அப் அப்டேட் ஆனது QR குறியீடுகளையும் பெறும், இந்த வசதி புதிய தொடர்புகளை எளிதாக சேர்க்க உதவும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மற்ற நபரின் குறியீட்டை ஸ்கேன் செய்வது மட்டுமே, பின்னர் அவர்களின் தொடர்பு தானாகவே
வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேம்பாடுகளை

அடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் க்ருப் காலிங் வசதியில் சில மேம்பாடுகளை செய்துள்ளது,அதாவது இப்போது ஒரு வீடியோ அழைப்பில் 8பேர் வரை இடம்பெறலாம் என்பதால்,குறிப்பிட்ட நபரை மட்டுமே அழுத்தி அவரின் வீடியோவை முழுத் திரையில் வைத்திருக்க அனுமதிக்கும் அம்சம் உட்பட சில அட்டகாசமான அப்டேட்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Facebook Messenger users could soon chat using WhatsApp And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X