நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வசதியை கொண்டுவரும் பேஸ்புக்.!

|

பேஸ்புக் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது,அதன்படி பேஸ்புக் தலைவர் ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய மூன்று பெரிய சமூக ஊடக தளங்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டு வருகிறார்.

சொல்ல வேண்டும் என்றால்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்-ன் சாட் அமைப்புகள் இதுவரை தனித் தனியாகவே இருந்தன,ஆனால் தற்போது பேஸ்புக் இவை இரண்டையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. அதன்படி சில தினங்களுக்கு
முன்பு இதுபற்றிய முதல் தகவல்வெளியிடப்பட்டது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

மேலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலருக்கும் இனி இன்ஸ்டாகிராமில் புதிய முறையில் சாட் செய்யலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதை அப்டேட் செய்து பார்த்தால் இன்ஸ்டாகிராமில் இருக்கும் சாட் அமைப்பைமொத்தமாக நீக்கி பேஸ்புக் மெசேஞ்ஜரை சேர்த்திருக்கிறார்கள்.

ஏர்டெல் பயனர்களே- ஒரே ரீசார்ஜ் நான்கு திட்டத்தின் சலுகை: விலை இவ்வளவுதான்., இப்போது 15 நகரங்களில்!ஏர்டெல் பயனர்களே- ஒரே ரீசார்ஜ் நான்கு திட்டத்தின் சலுகை: விலை இவ்வளவுதான்., இப்போது 15 நகரங்களில்!

னி இன்ஸ்டாகிராம் மெசேஜ் அனுப்பவும்

அதாவது பேஸ்புக்கின் மெசேஞ்ஜரில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இனி இன்ஸ்டாகிராம் மெசேஜ் அனுப்பவும் பயன்படுத்தலாம், பேஸ்புக்கின் தரைவரான மார்க் அவர்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற மூன்று சமூக ஊடக தளங்களை ஒருங்கிணைக்க தயாராகி வருகிறார்.

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆப் உருவாக்கி கொடுத்த மருத்துவர் கைது! என்ன ஆப் தெரியுமா?ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆப் உருவாக்கி கொடுத்த மருத்துவர் கைது! என்ன ஆப் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் இல்லாத பேஸ்புக்

குறிப்பாக இந்த வசதியின் மூலம் இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் இல்லாத பேஸ்புக் பயனர்களுக்கு இதிலிருந்து மெசேஜ் அனுப்ப முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய மூன்றிலிருந்தும் அந்த ஆப்களுக்கு மெசேஜ் செய்துகொள்ள வழிவகை செய்யவேண்டும் என பல காலமாக பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

திடீரென காணாமல் போன Google Pay ஆப்ஸ்! பீதியான பயனர்கள் - கூகிள் சொன்ன பதில் இதுதான்!திடீரென காணாமல் போன Google Pay ஆப்ஸ்! பீதியான பயனர்கள் - கூகிள் சொன்ன பதில் இதுதான்!

கிரிப்ஷனுடன்

இந்த செயல்முறை மட்டும் பேஸ்புக் கொண்டுவந்தால் மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்பிள் iMessage சேவையைப் பின்னுக்கு தள்ளமுடியும் என்பதே பேஸ்புக்கின் வியூகம். அதன்படி விரைவில் நாம் அனைவரும் வாட்ஸ்அப்பிலிருந்து பேஸ்புக் நண்பர்களுக்கும், இன்ஸ்டா பாலோயர்ஸுடனும் சாட் செய்யலாம். மொத்த அமைப்பும் end-to-end என கிரிப்ஷனுடன் இருக்க வேண்டும் என்பதே மார்க் சக்கர்பெர்க்கின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook Messenger merging with Instagram Direct to give access to both inboxes at same place: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X