Home
News

மிகவும் எதிர்பார்த்த ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் வெர்ஷன் செயலியின் புதிய அப்டேட்.!

கடந்த 2017-ம் ஆண்டு ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் 1700 கோடி வீடியோ சாட்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

By Prakash S

ஃபேஸ்புக் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் பொறுத்தவரை பல்வேறு பயனர்களுக்கு உபயோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை மெசன்ஜர் செயலியில் இருந்த அம்சங்களில் ஒன்றாக வீடியோ காலிங் இருந்து வந்த நிலையில், நேரடியாக முகம் பார்த்து பேசும் வசதி மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் பல்வேறு புதிய அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1700 கோடி வீடியோ சாட்கள் :

1700 கோடி வீடியோ சாட்கள் :

கடந்த 2017-ம் ஆண்டு ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் 1700 கோடி வீடியோ சாட்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்சம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எந்நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் அமைகந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட்:

ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட்:

ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் செயலியில் இதுவரை புகைப்படம், லின்க் மற்றும் ஆடியோ கால், குறுந்தகவல் போன்றவரை இடம்பெற்றது, தற்சமயம் ஆடியோ கால் அம்சத்தில் இருந்து வீடியோ கால் மேற்கொள்ளும் வசதியை தற்சமயம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிளே ஸ்டோரில் 10எம்பி அளவில் மெசன்ஜர் லைட் செயலி கிடைக்கிறது.

வீடியோ ஐகான்:

வீடியோ ஐகான்:

இப்போது வழங்கப்பட்டுள்ள புதிய வீடியோ கால் மேற்கொள்ளும் வசதியை இயக்க வலது புதறத்தில் இருக்கும் வீடியோ ஐகானை கிளிக் செய்தால் போதுமானது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மெசன்ஜர் லைட் செயலி.

வாய்ஸ் கிளிப்ஸ்:

வாய்ஸ் கிளிப்ஸ்:

இனி வரும் காலங்களில் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில், வாய்ஸ் கிளிப்ஸ் மூலமாக ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

எமோஜிகள்:

எமோஜிகள்:

இதுவரை ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் எமோஜிகள், எழுத்துக்கள், புகைப்படம், வீடியோ மட்டுமே அதிகமாக இடம்பெற்றன, இனிமேல் குரல்களை வைக்கும் வசதி இடம்பெறும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஃபேஸ்புக்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
பயனர்கள்:

பயனர்கள்:

ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் வெர்ஷன் செயலியின் புதிய அப்டேட் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது, மேலும்
ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் செயலிலைய பல மில்லயன் பயனர்கள் உபயோகம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook Messenger Lite Gets a Video Chat Option; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X