மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி அறிவிப்பு: இனி யாரும் தெரியாமல் ஸ்கிரீன்ஷாட் எடுக்காதீர்கள்.. நாங்க சொல்லிடுவோம்..

|

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் (Meta CEO Mark Zuckerberg) தனது பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான மெஸ்சேன்ஜ்ர் (Messenger) மெசேஜ்ஜிங் தலத்தில் ஒரு முக்கிய புதிய அம்சத்தை அறிவித்திருக்கிறார். இந்த புதிய அம்சம் மெஸ்சேன்ஜ்ர் மேடையில் உள்ள பயனர்களின் தனியுரிமையைக் கணிசமாக மேம்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். இனி மெஸ்சேன்ஜ்ர் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் ரகசிய உரையாடலில் யாரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், உடனே அது அந்த பயனருக்குத் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

டிஸப்பியரிங் மெசேஜ் இன்னும் அதிக பாதுகாப்புடன் பலப்படுகிறதா?

டிஸப்பியரிங் மெசேஜ் இன்னும் அதிக பாதுகாப்புடன் பலப்படுகிறதா?

அதாவது, நீங்கள் மெஸ்சேன்ஜ்ர் மூலம் மேற்கொள்ளும் ரகசிய உரையாடலில், டிஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தும் போது, எதிர் முனையில் உள்ள பயனர் உங்களின் டிஸப்பியரிங் மெசேஜ்களை பதிவு செய்வதற்காக ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், இனி அந்த பயனருக்கு ஸ்கிரீன்ஷாட் தொடர்பான அறிவிப்பு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி மெஸ்சேன்ஜ்ர் பயனர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஜனவரி 27, 2022 அன்று மார்க் ஜுக்கர்பெர்க் எழுதியது, "எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசஞ்சர் அரட்டைகளுக்கான புதிய புதுப்பிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் இனி யாராவது மறைந்திருக்கும் செய்தியை ஸ்கிரீன்ஷாட் செய்தால் உடனே உங்களுக்கு நோட்டிபிகேஷன் அறிவிப்பை மெஸ்சேன்ஜ்ர் அனுப்பும். " என்று அவர் கூறியுள்ளார். பேஸ்புக் முதன்முதலில் நவம்பர் 2020 இல் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டிலும் காணாமல் போகும் செய்திகளை அறிமுகப்படுத்தியது. அதாவது, டிஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது.

வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி? இந்த 3 முறையை ட்ரை செய்து பாருங்கள்..வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி? இந்த 3 முறையை ட்ரை செய்து பாருங்கள்..

டிஸப்பியரிங் மெசேஜ் அம்சம் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?

டிஸப்பியரிங் மெசேஜ் அம்சம் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?

இந்த அம்சம் பற்றித் தெரியாதவர்களுக்கு, டிஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தை உங்கள் சாட்டில் ஆக்டிவ் செய்த பின்னர், நீங்கள் மெசேஜ் செய்ய முயலும் போது, ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின்னர் நீங்கள் அனுப்பிய சாட் மெசேஜ்கள் சாட் பாக்சில் இருந்து மறைந்துவிடும். இதனால் தான் இந்த அம்சத்திற்கு டிஸப்பியரிங் மெசேஜ் என்று பெயரிடப்பட்டது. இந்த அம்சம் முதன்முதலில் ஸ்னாப்சாட் பயன்பாட்டில் களமிறங்கியது என்பதும் கவனிக்கத்தக்கது. இப்போது பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜ்ஜின் தலமான மெஸ்சேன்ஜ்ர் இல் அறிமுகம் செய்யப்படும் ஸ்கிரீன்ஷாட் நோட்டிபிகேஷன் புஷ் அம்சம் கூட ஸ்னாப்சாட்டில் முன்னரே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp இல் இதேபோன்ற அம்சம் ஒன்று இருக்கிறதோ?

WhatsApp இல் இதேபோன்ற அம்சம் ஒன்று இருக்கிறதோ?

மெட்டா நிறுவனத்தின் செய்தியிடல் தளங்களில் கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, சில வாரங்களுக்கு முன்பு WhatsApp இதேபோன்ற அம்சத்தைப் பெற்றது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆரம்பத்தில் இருந்தே, மறைந்து போகும் செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை யாராவது எடுக்கும்போது, ​​மெசஞ்சர் பயனர்களுக்குத் தெரிவிக்கும். இந்த சமீபத்திய அறிவிப்பு தேவையற்றதாகத் தோன்றும். இருப்பினும் ஒரு மிக முக்கியமான வேறுபாடு உள்ளது.

பான் கார்டில் உள்ள பெயரை ஆன்லைன் மூலம் மாற்றுவது எப்படி?பான் கார்டில் உள்ள பெயரை ஆன்லைன் மூலம் மாற்றுவது எப்படி?

ஃபேஸ்புக்கின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் புஷ்

ஃபேஸ்புக்கின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் புஷ்

ஃபேஸ்புக் அதன் மெசேஜிங் தளங்களில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை (E2EE) வெளியிட வேலை செய்து வருகிறது. E2EE என்பது சர்வர் பக்க குறியாக்கத்திலிருந்து குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் மற்றும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பின் தங்கத் தரமாகக் கருதப்படுகிறது. சர்வர்-சைட் என்க்ரிப்ஷன் விஷயத்தில், சேவை வழங்குநரிடம் உங்கள் தரவை மறைகுறியாக்கப் பயன்படுத்தக்கூடிய விசை உள்ளது. இதன் விளைவாக, உங்கள் தரவு மற்றும் செய்திகளை யார் அணுகுகிறார்கள் என்பதை நீங்கள் உறுதியாக நம்ப முடியாது.

எதற்காக எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பயன்படுத்தப்படுகிறது?

எதற்காக எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பயன்படுத்தப்படுகிறது?

எவ்வாறாயினும், E2EE இல், உங்கள் தரவு குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் மற்றும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் மட்டுமே உங்கள் செய்தியைப் படிக்க முடியும். இது உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை வழங்குகிறது. நீங்கள் பயன்படுத்தும் சேவை வழங்குநரால் கூட உங்கள் செய்திகளை இடைமறித்துப் படிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகவே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் பயன்படுத்தப்படுகிறது. E2EE நிகரற்ற பாதுகாப்பை வழங்கும் போது, ​​E2EE அல்லாத சேவைகளில் பொதுவான அம்சங்களைச் சேர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பாதை நாம் சொல்லத் தேவையில்லை.

உங்கள் ஸ்மார்ட்போனை ஏன் கேஸ் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இது ரிஸ்க்கா இல்ல சாமர்த்தியமா?உங்கள் ஸ்மார்ட்போனை ஏன் கேஸ் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இது ரிஸ்க்கா இல்ல சாமர்த்தியமா?

E2EE அரட்டைகளுக்குள் ஸ்கிரீன்ஷாட் நோட்டிபிகேஷன்

E2EE அரட்டைகளுக்குள் ஸ்கிரீன்ஷாட் நோட்டிபிகேஷன்

அந்த வேறுபாடுதான் ஜுக்கர்பெர்க்கின் சமீபத்திய அறிவிப்பை வேறுபடுத்துகிறது. Facebook இப்போது E2EE அரட்டைகளுக்குள் ஸ்கிரீன்ஷாட் அறிவிப்புகளை வழங்குகிறது. இது போன்ற செய்திகளுக்குக் கூடுதல் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைச் சேர்க்கிறது என்பதனால் நிச்சயம் பயனர்கள் மத்தியில் இது பெரிய அளவில் ஆதரவை பெரும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில், இந்த அரட்டைகளில் ரியாக்ஷன், GIFகள் மற்றும் ஸ்டிக்கர்களைச் சேர்ப்பது தனிப்பட்ட உரையாடல்களை இன்னும் கொஞ்சம் உற்சாகப்படுத்தும். புதிய அம்சங்கள் இப்போது வெளிவருகின்றன.

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் இல் வெளிவரும் அம்சங்கள் என்ன தெரியுமா?

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் இல் வெளிவரும் அம்சங்கள் என்ன தெரியுமா?

மெட்டாவுக்கு சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸஅப், அதன் பயன்பாடு மற்றும் இணையப் பதிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்திப் புதுப்பித்து வருகிறது. அதன்படி வாட்அப் தளத்தில் 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகும் புதிய ஐந்து அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம். கடந்த ஆண்டு வாட்ஸ்அப் தளத்தில் காணாமல் போகும் மெசேஜ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சத்திலும் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாகக் கூறப்படும் புதிய அம்சம் குறித்த தகவலைப் பார்க்கலாம்.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இந்திய கண்டம் ஆப்பரிகாவுடன் இணையுமா? விஞ்ஞானிகள் வெளியிட்ட உண்மை ரிப்போர்ட்!இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இந்திய கண்டம் ஆப்பரிகாவுடன் இணையுமா? விஞ்ஞானிகள் வெளியிட்ட உண்மை ரிப்போர்ட்!

மிகத் தேவையான பல அம்சங்களை வாட்ஸ்அப் இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறதா?

மிகத் தேவையான பல அம்சங்களை வாட்ஸ்அப் இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறதா?

வாட்ஸ்அப் தளம் பயனர்களின் தேவை அறிந்து பல நன்மைகளை வழங்கி வருகிறது. அதேபோல் பயனர்கள் தேவை அறிந்து புதிய அம்சங்களைப் புதுப்பித்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு வாட்ஸ்அப் தளத்தில் இமேஜ் எடிட்டர், மறைந்திருக்கும் மெசேஜ்களுக்கான கால வரம்பு, குரல் குறிப்புகளின் வேகம், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டும் லாஸ்ட் சீன மறைத்தல், மொபைல் பயன்பாட்டிற்கான ஸ்டிக்கர் மேக்கர், சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கும் முறை, கம்யூனிட்டிஸ் (சமூகங்கள்), மெசேஜ் ரியாக்ஷன் போன்ற மிக தேவையான பல அம்சங்களை அறிமுகம் செய்கிறது.

Best Mobiles in India

English summary
Facebook Messenger Launches New End To End Encryption Feature That Shows Screenshot Notifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X