Home
News

ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேவைகளில் ஒன்றாகிய ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அவ்வப்போது புதிய வசதிகளை அந்நிறுவனம் செய்து வருகிறது. குறிப்பாக அதில் பதிவு செய்யப்படும் உரையாடல்களின் பாதுகாப்பை கருதி அவ்வப்போது சில திருத்தங்கள் செய்யப்படும். இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக மேலும் சில புதிய வசதிகளை செய்து பாதுகாப்பினை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதிகள் ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியை அப்டேட் செய்தால் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்


ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் பதிவு செய்யப்படும் உரையாடல்களின் பாதுகாப்புக்கு தற்போது ’சீக்ரெட் உரையாடல்’என்ற புதிய வசதியை இணைத்துள்ளது. இந்த 'சீக்ரெட் உரையாடல்’ என்பது முழுக்க முழுக்க பாதுகாப்பானது ஆகும். மேலும் மால்வேர் மற்றும் ஹேக்கர்களின் தாக்குதலில் இருந்து சமாளிக்க தற்போது லாகின் அலர்ட் என்ற புதிய வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே புதிய மொபைல் மற்றும் கம்ப்யூட்டரில் லாகின் செய்யப்பட்டால் உடனே மொபைலுக்கு அலர்ட் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்


மேலும் இந்த புதிய வசதிகளின் இன்னொரு சிறப்பு அம்சம், பொய்யான, டூப்ளிகேட் அக்கவுண்டுக்களை கண்டுபிடித்து அதனை நீக்கிவிடும் என்பதும் ஆகும். இதனால் நமது ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலி உரையாடல் மேலும் பாதுகாப்புக்குரியதாக மாறுகிறது. டூப்ளிகேட் அக்கவுண்டில் இருந்து வரும் இமேஜ்கள் மற்றும் லிங்குகள் நமது டேட்டாவை திருட வாய்ப்பு இருப்பதால் இனிமேல் அது முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொய்யான தகவல், மற்றும் வதந்திகள் பரப்புவதற்கும் தடை செய்யும் வகையிலும் ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் புதிய அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலி பயனாளிகள் இதற்கான இணையதளம் (www.messenger.com/privacy) சென்று கூடுதல் தகவல்களை பெறலாம். இதில் கூடுதல் பாதுகாப்பு, பிரைவசி ஆகிய அம்சங்களுக்கான குறிப்புகள் கிடைக்கும்.

ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்


மேலும் தற்போது ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் நைட்மோட் வசதியும் புதியதாக பயனாளிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த நைட்மோடில் இரவு நேரத்திற்கான எமோஜிகளை குறிப்பாக நிலவு சம்பந்தமான எமோஜிகளை அனுப்பி மகிழலாம். மேலும் ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் உள்ள உரையாடலில் புதிய வண்ணங்களையும் பயனாளிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் எண்களை பரிமாறி கொள்வதை தவிர்த்துவிட்டு உடனடியாக உரையாடல்களை தொடரலாம். அதேபோல் ஈமோஜிகள் அல்லது GIF இமேஜ்களை மாற்றுவதன் மூலம் பெறப்பட்ட உரையாடலுக்கு நீங்கள் பதிலளிக்கலாம். உங்கள் படங்கள் அல்லது உங்களுக்கு வந்த இமேஜ்கள் ஆகியவற்றை எடிட் செய்யவும் முடியும். அதற்காக ஒருசில டூல்ஸ்கள் உள்ளன. பின்னர் எடிட் செய்யப்பட்ட இமேஜ்களை இன்னொருவருக்கு அனுப்பலாம். மேலும் இந்த செயலியின் மூலம் வீடியோ உரையாடலுக்கும் உங்கள் நண்பரக்ளை அழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி தற்போது புதிய வசதியாக ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியின் மூலம் பாதுகாப்பாக பண பரிவர்த்தனைகளையும் செய்யலாம். பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ உங்கள் டெபிட் கார்ட், பேபால் ஆகியவற்றின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook Messenger Becomes More Secured With New Features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X