பேஸ்புக் மெமரீஸ் : உங்கள் கடந்தகால நினைவுகளின் பொக்கிஷம்.!

"Recap of Memories” எனும் புதிய வசதி மூலம், மாதாந்திர மற்றும் கடந்த ஆண்டுகளில் ஒரு சீசனில் நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை காணொளி (வீடியோ) பதிவாக தருகிறது.

|

முகநூல் பயனர்கள் கடந்த காலத்தில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட நிலைத்தகவல்(Status) மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கும் வண்ணம், தனி பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிர்வாகம். ஓர் ஆண்டு/முந்தைய ஆண்டுகளில் அதே நாளில் நண்பர்களுடன் பகிர்ந்த பதிவுகளை பார்க்கும் பேஸ்புக்கின் "On this day" வசதியின் நீட்டிப்பாக "மெமரீஸ்" என்ற இந்த பகுதி கருதப்படுகிறது.

பேஸ்புக் மெமரீஸ் : உங்கள் கடந்தகால நினைவுகளின் பொக்கிஷம்.!

தனி பக்கமாக இந்த வசதி வருவதால், மெமரீஸ் பக்கத்தில் உள்ள பல்வேறு துணைப்பகுதிகளும் அதன் மூலம் உங்கள் நினைவுகளை வரிசைபடுத்தவும், ஒரு குறிப்பிட்ட நாளில் நடந்த நிகழ்வை கண்டறியவும் உதவும்.

புதிய வசதி

புதிய வசதி

"Recap of Memories" எனும் புதிய வசதி மூலம், மாதாந்திர மற்றும் கடந்த ஆண்டுகளில் ஒரு சீசனில் நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை காணொளி (வீடியோ) பதிவாக தருகிறது. "Memories you have missed" என்ற அம்சத்தின் மூலம், கடந்த சில வாரங்களில் நீங்கள் தவறவிட்ட சில பதிவுகள் காண்பிக்கப்படும்.

Friends Made On This Day

Friends Made On This Day

ஏற்கனவே வழங்கப்படும் வசதியான "On This Day" யை தொடரவுள்ள பேஸ்புக், எப்போதும் போல கடந்த காலத்தில் அதே நாளில் பகிர்ந்த மற்றும் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் காண்பிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் நண்பர்களானவர்களின் பட்டியலை காணொளி அல்லது புகைப்படத் தொகுப்பாக, "Friends Made On This Day" என்ற வசதி மூலம் தெரியப்படுத்துகிறது இந்த சமூக வலைதளம்.

மெமரீஸ்

மெமரீஸ்

இந்த மெமரீஸ் பக்கத்தில் என்னென்ன தகவல்கள் தெரிய வேண்டும், எவையெல்லாம் இனி காண்பிக்கவே கூடாது என்பதை பயனர் கட்டுபடுத்த முடியும்.இந்த புதிய வசதி, 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட "On This Day" அம்சத்தின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது.

news feed

news feed

கைப்பேசி செயலி மற்றும் கணிணி வாயிலாக இந்த பக்கத்தை பாரக்க முடியும். பேஸ்புக் செயலியின் அடிப்பகுதியில் உள்ள "more" பகுதியிலும், கணிணியில் "news feed" க்கு இடதுபுறமாகவும் இதை பார்க்கமுடியும்.மெசேஜ் மற்றும் நோட்டிபிகேசன் மூலம் காண்பிக்கப்படும் இந்த மெமரீஸ் பகுதியை இதற்கான தனி பக்கத்தில் சென்றும் பார்க்கலாம்.

 உணர்வுப்பூர்வமானவை

உணர்வுப்பூர்வமானவை

"நினைவுகள் எப்போதும் உணர்வுப்பூர்வமானவை மற்றும் அவையனைத்தும் நேர்மறையானதாகவே இருக்காது. எனவே பின்னூட்டங்களின் அடிப்படையில் இந்த வசதியை வடிவமைத்து, சரியான தகவல்களை பயனர்கள் தெரிந்துகொள்ள முயற்சித்துள்ளோம்.இந்த தகவல்களை பயனர்களின் தனிப்பட்ட அனுபவமாக கருத கடினமாக உழைக்கிறோம் மற்றும் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு உள்ளீடுகளை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார் பேஸ்புக் பிராடெக்ட் மேனேஜர் ஓரென் ஹாட்.

Best Mobiles in India

English summary
Facebook Memories is all your past moments in one place : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X