போலி., போலி., போலி: பேஸ்புக் நிறுவனம் அதிரடி., இதை பேஸ்புக் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்குங்கள்!

|

சீனாவில் கொடிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கமானது 11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரில் தான் முதலில் ஏற்பட்டது. இதனால் அங்கு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை

1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை

நோயாளிகள் அதிகரிப்பால் போதிய மருத்துவமனையின்றி வுஹான் நகரம் ஸ்தம்பிக்க தொடங்கியது. இதன் காரணமாக 1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா தாக்கம் உள்ளவர்களை இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பிறருக்கு நோய்கள் பரவாமல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

106 பேர் உயிரிழந்ததாக தகவல்

106 பேர் உயிரிழந்ததாக தகவல்

தற்போதைய நிலைவரை கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கிய கடந்த சில வாரங்களிலேயே 106 பேர் உயிரிழந்ததாகவும், 12,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த பதற்றம் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

50 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக தகவல்

50 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக தகவல்

வுஹான் நகரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், அந்த நகரத்தில் மக்கள் வெளியேருவதற்கும், உள்ளே வருவதற்கும் தடை செய்யப்படுமாறு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த தடை செய்யப்படுவதற்கு முன்பாக சுமார் 50 லட்சம் பேர் நகரத்தில் இருந்து வெளியேறி உள்ளனர் என அந்த நகர மேயர் சோவ் சியான்வாங் அதிர்ச்சி தகவல் அளித்தார்.

29,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

29,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் உட்பட இந்தியாவின் 7 விமான நிலையங்களில் சுமார் 29,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்துக்குரிய 7 பயணிகளின் மாதிரிகள் மட்டும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உலகம் முழுக்க 25 நாடுகளில் சுமார் 130 பேருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கில் போலி செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை

பேஸ்புக்கில் போலி செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், ஆன்லைனில் கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில், பேஸ்புக் தளத்தில் கொரோனா வைரஸ் பற்றிய போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையை துவங்கி இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

உடனுக்குடன் தளத்தில் இருந்து நீக்கப்படும்

உடனுக்குடன் தளத்தில் இருந்து நீக்கப்படும்

கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார மையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் தகவல்களுக்கு முரணாக இருக்கும் தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என பேஸ்புக் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது பேஸ்புக்கிற்கு புதிதல்ல

இது பேஸ்புக்கிற்கு புதிதல்ல

தளத்தில் போலி செய்திகளை முடக்குவது பேஸ்புக்கிற்கு புதிய காரியமில்லை. முன்னதாக சமோவா சார்ந்த போலி செய்திகள் அதிகளவு பரவியதால் பேஸ்புக் நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. பின் சமோவா சார்ந்த போலி செய்திகளை ஃபேஸ்புக் தனது தளத்தில் இருந்து நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையான, ஆரோக்கியமான தகவல்களையே வழங்குவோம்

உண்மையான, ஆரோக்கியமான தகவல்களையே வழங்குவோம்

பேஸ்புக் மூலம் பயனர்களுக்கு ஆரோக்கியமான விவரங்கள், விளம்பரங்கள் சென்றடையும் வகையில் பேஸ்புக் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உண்மையான விவரங்கள் மட்டுமே அனைவரும் பார்க்க வழி வகுக்கப்படுவதாகம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Facebook measures to remove fake news about coronavirus

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X