Home
News

சிறுவர்களுக்கான தடையை நீக்குகிறது பேஸ்புக்!

By Karthikeyan
சிறுவர்களுக்கான தடையை நீக்குகிறது பேஸ்புக்!

உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமாக இருந்து வரும் பேஸ்புக்கில் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் உறுப்பினர்களாக சேர முடியாது. எனினும் 7.5 மில்லியன் அளவிலான 13 வயதிற்குபட்ட சிறுவர்கள் தங்களது வயதினை பொய்யாக உயர்த்தி பேஸ்புக்கில் இணைந்து உள்ளனர்.

எனவே, இப்போது பேஸ்புக் நிறுவனம் 13 வயதிற்குட்பட்டவர்களையும் தங்களது சமூக வளைத்தளத்திற்குள் உறுப்பினர்களாக இணைக்க திட்டமிட்டிருக்கிறது. அதன் மூலம் வரும் காலத்தில் 13 வயதிற்குட்பட்டவர்களும் பேஸ்புக்கில் இணைய முடியும் என்று நம்பலாம்.

குறிப்பாக 13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பெரும்பாலும் தங்களின் பெற்றோரின் கண்காணிப்பில் இருப்பதால் அந்த பெற்றோரோடு இணைந்து அவர்கள் பேஸ்புக்கில் இணைய நிறுவனம் யோசித்து வருகிறது.

மேலும் பல நாடுகளில் 13 வயதிற்குட்பட்டவர்கள் இப்படிப்பட்ட சமூக வளைத்தளங்களில் இணையக்கூடாது என்று பல சட்டங்களும் உள்ளன. அவற்றையும் பேஸ்புக் பரிசீலித்து வருகிறது.

மேலும் பல தருணங்களில் பெற்றோரே தங்களது குழந்தைகள் இணைய தளத்தில் புகுந்து விளையாட வேண்டும் என்று ஊக்கம் அளிக்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் அந்த குழந்தைகளை பேஸ்புக்கிலிருந்து தடை செய்வது அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்பதையும் பேஸ்புக் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

இந்த திட்டத்தைக் கொண்டு வருவதற்காக பலதரப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பேஸ்புக் கூறுகிறது.

எது எப்படியோ சிறுவர்களும் பேஸ்புக்கில் நுழைந்தால் பேஸ்புக்கை யாரும் வீழ்த்த முடியாது என்று நம்பலாம். ஆனால் அந்த சிறுவர்களும் சரியான நோக்கத்திற்காக பேஸ்புக்கை பயன்படுத்த வேண்டும் என்பது நமது அவா.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X